Friday, August 10, 2012

டாக்டர் கோவிந்தன் சொல்லும் ஊர் கொளுத்தி இராஜாவின் கதை !









முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம். அவன் மிகவும் கேடு செய்பவனாம். ஊர் கொளுத்தி இராஜா என்று பெயர் பெற்றவனாம். அவனுடைய மதி மந்திரிகளோ ஊதிக் கெடுக்கிற மந்திரிகள் என்று பெயர் பெற்றவர்களாம்.

ஒரு சமயம் இம்மந்திரியார்கள் கூடி இந்த இராஜாவுக்கு விழா ஒன்று எடுத்தனராம். விழாவின்போது இராஜா தன் கால்களை நன்கு அகற்றியபடி நின்று கோண்டு நாட்டு மக்கள் எல்லோரும் வரிசையாக நின்று இராஜாவின் கால்களுக்கு இடையில் நுழைந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டதாம்.

பெரும்பாலான மக்கள் மகாராஜாவின் உத்தரவுப்படி நடந்தனராம். சில பேர் மறுத்தனராம். மறுத்தவர்களின் உஐமைகளையும், நிலபுலங்களையும் பறிமுதல் செய்து தன் காலின் கீழ் நுழைந்து சென்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டானாம். தன் காலின் கீழ் நுழைந்து செல்லாதவர்கள் அனைவரும் அடிமைகள் என்று அறிவித்து, காலின் கீழ் நுழந்தவர்களின் நிலங்களில் வேலை செய்ய உத்தர விட்டானாம். இதற்கும் மறுத்தவர்களை நாடு கடத்தி விட்டானாம்.

இப்படியும் நடக்குமா என்று நினைக்கத் தோன்றுகிறதா? இப்போது நமது நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் இந்த இராஜா செய்ததுபோல்தான் உள்ளது.

ஊழலுக்கு அடிபணிந்து வாழ்பவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஊழலில் கலந்து கொள்ளாதோர் அடிமைகளாக, பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள்.: மிரட்டப்படுகிறார்கள்.

நமது அரசாங்கங்கள் ஊழலுக்கு எதிராக செயல்படுகின்றனவா? சாதகமாகச் செயல்படுகின்றனவா என்பது நாட்டுக்குத் தெரிந்ததே.

இது இப்படியே தொடரும் என்று எண்ணி விடாதீர்கள். பிரெஞுப் புரட்சி, ருஷ்யப் புரட்சி மற்றும் சமீபத்தில் நடந்த எகிப்துப் புரட்சிகளை எண்ணி நன்னம்பிக்கையுடன் செயல்படுவோம்.

வெள்ளையன் வெளியேறியதுபோல, ஊழலும் நம்மை விட்டு வெளியேறப் போகின்றது. நமக்குப் பயந்து செல்லாவிட்டாலும், வரவு செலவு கணக்குப் பார்த்து, துண்ஐக்காணும் துணியைக் காணோம் என்று ஊழலாளிகள் படப்போகின்ற காலத்தை உருவாக்கும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இது நிறைவேறும்வரை நாம் கொடுமைகளைத் தாங்கி தியாகம் செய்வோம்.
ஊழல் எதிர்ப்பு தீபத்தை ஏந்தி நிற்போம்.

நன்றி :- 

மக்கள் நினைத்தால்

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இய்க்க மாத இதழ், 

ஆசிரியர் இல். சு. ஜெகநாதன் 9444939698 றைவேறும்வரை நாம் கொடுமைகளைத் தாஙி தியாகம் செய்வோம்.ஊழல் எதிர்ப்பு தீபத்தை அணையாது ஏந்தி நிற்போம்..


0 comments:

Post a Comment

Kindly post a comment.