Thursday, August 30, 2012

ஆப்பிளுக்கான 5,500 கோடி இழப்பீட்டை சில்லறையாக மாற்றி லாரியில் ஏற்றி அனுப்பியதா சாம்சங்?


ஆப்பிளுக்கு செலுத்த வேண்டிய காப்புரிமை இழப்பீட்டு தொகையை வெறும் நாணயங்களாக மாற்றி லாரிகளில் சாம்சங் அனுப்பியதாக வெளியான தகவல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.


காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 5,500 கோடியை சாம்சங் நஷ்ட ஈடாக தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை 5 சென்ட் நாணயங்களாக சாக்கு மூட்டைகளில் கட்டி ஆப்பிள் அலுவலகத்துக்கு சாம்சங் அனுப்பியதாக செய்தி வெளியானது.


மேலும், ஆப்பிள் அலுவலக வாசலில் நாணயங்களுடன் 30 லாரிகள் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இந்த தகவல்கள் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.


மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து சாம்சங் மேல் முறையீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவி்க்கின்றன. இதனால், சாம்சங் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.