Thursday, August 30, 2012

மூலதனம் :-உள்நாடு 74% வெளிநாடு 26%


இந்தியாவில் எண்ணற்ற ஆயுள் காப்பீட்டுக் கம்பெனிகள் உள்ளன. அரசு சாராத தனியார் கம்பெனிகளிலும் பலர் பணத்தைச் சேமிப்பது கண்டு மனம் பதறியது. ஒவ்வொரு தனியார் கம்பெனியும் ஏதாவதொரு அந்நிய நாட்டுடன் சம்பந்தப்பட்ட கம்பெனியுடன் கூட்டு வைத்துக் கொண்டே செயல் படுகின்றன.

இந்தியப் பாராளுமன்றத்தில் நேரு காலத்தில் கொண்டுவரப்பட்ட முந்திரி ஊழலே  இன்ஸூரன்ஸ் கம்பெனி பற்றியதுதான். அதனை வெளிக்கொணர்ந்தவர் அவரது மருமகன் ஃப்ரோஸ் காந்திதான். அதன் உச்சக் கட்டம் நிதியமைச்சர் பதவி விலகுவதில் போய் நின்றது. அது அந்தக்காலம். இப்பொழுதெல்லாம்........ விளக்கம் தேவை இல்லை?

1cr insurance at Rs.15 www.fundbazzar.com
Get life cover of 1cr at Rs.15 per day 

( விசாரித்ததில் கிடைத்த தகவல். வாகனங்களுக்கு லைசென்ஸ் எடுப்பது போல்தான் இலை எல்லாம். விபத்துக்குள்ளானாலோ, இறந்து விட்டாலோ பணம் கிடைக்கும். இல்லை என்றால் செலுத்திய பணம் எச்சூழலிலும் போனஸ் போன்றவற்றுடன் திருப்பித் தரப்பட மாட்டாது )

இந்த இரண்டு வரிகள்தான் இன்று இன்ஸூரன்ஸ் பக்கம் என்னை இழுத்துச் சென்றது. மேற்படி இணையதளத்துக்குள் சென்று உண்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்து கொண்டோர் எழுதினால் மனம் ம்கிழும்.

Bajaj Allianz Life Insurance Company Limited
Birla Sun Life Insurance Co. Ltd
HDFC Standard life Insurance Co. Ltd
ICICI Prudential Life Insurance Co. Ltd.
ING Vysya Life Insurance Company Ltd.
Life Insurance Corporation of India
Max New York Life Insurance Co. Ltd
Met Life India Insurance Company Ltd.
Kotak Mahindra Old Mutual Life Insurance Limited
SBI Life Insurance Co. Ltd
Tata AIG Life Insurance Company Limited
Reliance Life Insurance Company Limited.
Aviva Life Insurance Co. India Pvt. Ltd.
Shriram Life Insurance Co, Ltd.
Sahara India Life Insurance
Bharti AXA Life Insurance
Future Generali Life Insurance
IDBI Fortis Life Insurance
Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance
AEGON Religare Life Insurance
DLF Pramerica Life Insurance
Star Union Dai-ichi Life Insurance
Agriculture Insurance Company of India
Apollo DKV Insurance
Cholamandalam MS General Insurance
HDFC Ergo General Insurance Company
ICICI Lombard General Insurance
IFFCO Tokio General Insurance
National Insurance Company Ltd
New India Assurance
Oriental Insurance Company
Reliance General Insurance
Royal Sundaram Alliance Insurance
Shriram General Insurance Company Limited
Tata AIG General Insurance
United India Insurance
Universal Sompo General Insurance Co. Ltd
<
Apollo Munich Health Insurance
Bajaj Allianz General Insurance ia
Bharti AXA General Insurance
Export Credit Guarantee Corporation of India
IDBI Federal Life Insurance
IndiaFirst Life Insurance
L&T General Insurance
Max Bupa Health Insurance
Raheja QBE General Insurance Company Ltd.
SBI General Insurance
Star Health Insurance


நேற்று ஓரிடத்தில் 100 பேர் கொண்ட கூட்டம் நடந்தது. நடத்தியவர்கள், கோடக் இன்ஸுரன்ஸ் கம்பெனியைச் சார்ந்தவர்கள். பணி ஓய்வு பெற்றவர்களே பெர்ம்பாலும் அழைக்கப் பட்டிருந்தனர். காலை 10 மணியிலிருந்து 1.30 வரை கூட்டம் தொடர்ந்து நடந்தது என்றும், வந்தோர் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். எதையும் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் செல்லும் என்னால், நேற்று வேறு வேலைகள் காரணமாகச் செல்ல இயலவில்லை.

இன்று எதிர்பாராதவிதமாக, அந்தக்கூட்டத்தினை நடத்திய அமைப்பாளருள் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிக்கொண்ட விஷ்யங்களை வலைப்பூ அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நேற்று கலந்து கொண்ட நூறு பேரில், 12 பேர் இன்ஸூரன்ஸ் லைசென்ஸ் வாங்க அவர்களாகவே விரும்பிச் சேர்ந்து கொண்டதாகத் தகவல்.

இவர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்படும் பின்னர் அவர்கள் இன்ஸுரன்ஸ் ஆலோசகர்களாக்கப்படுவர். ஒரு லட்சம் இன்ஸுரன்ஸ் சேர்த்துக்கொடுத்தால் 20% முதல் 25 % கமிஷன் கிடைக்கும். 5 லட்சம் வரை சேர்த்துக்கொடுத்துவிட்டால்,  அந்தக் கம்பெனியின்  அசோசியேட் பார்ட்னர்களாக்கப்படுவர். இக்கட்டத்தில் அவர்கள் தங்ககளுக்குக் கீழ் ஆலோசகரை நியமித்துக்கொள்ளலாம். அவர்கள் இரு குழுக்களாகத் தனித்தனியாக 5 லட்சம் இன்ஸூரன்ஸ் தொகை சேர்த்துக் கொடுத்து விட்டால், அசோசியேட்  பார்ட்ட்னராகச் செயல் பட்டவர் , சீனியர் அசோஸியேட் பார்ட்னராக முடியும்.. பின்னர் சீப் அஸோஸியேட் பார்ட்னாராகவும்  பதவி உயர்வு பெற முடியும்


ஒவ்வொரு உள்நாட்டுக் க்ம்பெனியும், (  ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா உட்பட) வெளிநாட்டுக் க்ம்பெனிகளுடன் இணைந்து செயல்படும்பொழுது, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் போபால் விஷவாயு ஈட்டுத் தொகை கொடுத்த கதையாகி விடக் கூடாதே என்ற அச்சத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர், Insurance Regulatary Development Authority என்கிற அமைப்பின் கீழ் இவற்றின் செயல்பாடுகள் கட்டுப் படுத்தப்படுகின்றன. எனவே கவலப்படத் தேவை இல்லை என்று கூறினார். மேலும் உள்நாட்டின் மூலதனம் 74% என்றும், வெளிநாட்டின் மூலதனம் 26% என்றும் குறிப்பிட்டார்.

மேலும் AMP Sanmar என்ற இன்ஸுரன்ஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ல ஒரு கம்பெனியுடன் கூட்டாகச் செயல்பட்டது. ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒழுங்காகச் செயல்பட்டது. பின்னர் இந்திய முதலாளி வியாபாரத்தினின்ன்றும் விலகிக் கொள்ள விரும்பிய போது, ரிலையன்ஸ் கம்பெனி அதனை வாங்கிக் கொண்டது. தற்பொழுது அதன் வாடிக்கையாளர்களும் தொடர்ந்து பிரீமியத்தச் செலுத்தி வருகின்றனர் என்ற தகவலையும் தெரிவித்தார்.

இன்ஸுரன்ஸின் அவசியம்:-


 1 )  வெளிநாட்டில் நல்ல வேலையில் உள்ள ஒருவர்,  சேலம் அருகில்  உள்ள
கிராமத்தில்  உள்ள தனது தம்பியின் குடும்பத்தினருக்குப் பிற்காலத்திற்கு உதவிட, எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று இவரிடம் யோசனை கேட்டார். அவரின் தம்பிக்கு 5வயது, 7 வயது கொண்ட இரு பெண் குழந்தைகள். இருவருக்கும் அவரவருக்கு 25 வயது நிறைவடையும்போது கிடைக்குமாறு, இரு இன்ஸூரன்ஸ் பாலிசிகள் (1.05 வீதம் இரண்டு ) ஒரே தடவையில் மொத்தமாகச் செலுத்திவிடச் சொன்னார். ஆறு ஆண்டுகள் கழிந்தன. எதிர்பாராத விதமாக அந்தத் தம்பி விபத்தில் இறந்து விடுகின்றார். அண்ணன் இவரை அணுக, உரிய வழிகாடுதல்களின் பெயரில், அந்தக் குடும்பத்திற்கு 6 லட்சம் + கட்டப்பட்ட பிரீமியத் தொகை போனசுடன் 24000 ஆக மொத்தம் 6,24,000/- ரூபாய் கிடைத்தது.

2 )  இன்னுமொரு சம்பவம் கணினித் துறையில் பணிபுரியும் 4 இளைஞர்கள் வருமான வரி செலுத்துவதைத் தவிர்க்க இவரை அணுகினர், ஆண்டிற்குப் 10.000/- பாலிசி எடுக்க ஒப்புக் கொண்டனர். இவர் மேலும் ஒரு 350/- சேர்த்துக் கட்டுங்கள் உயிர்ப்பாதுக்காப்பினையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழ்ங்க, அவர்களும் அவ்வாறே செய்தனர். வேலையின் நிமித்தம் பெங்களூரூ சென்று விட்டனர். ஆண்டுகள் சில சென்றன. ஹார்ட் அட்டாக்கில் ஒரு இளைஞர் மரணம். அவருடைய குடும்பத்தினருக்கும் உரிய தொகையைப் பெற்றுக் கொடுத்தார். 

பத்தடி தூரத்தில் கூட ஓர் மரணம் நிகழலாம் என்று சீனக் கவிதை ஒன்று கூறுகின்றது. தூங்கி விழித்தால்தான் வாழ்க்கை என்கிறது வள்ளுவம்.

இன்று  கைநிறையச் சம்பளம் வாங்கும் இளைஞர்கள் சேமிக்கத் திட்டமிடவேண்டும். பென்ஷன் எல்லாம் 2000-க்குப்பின் வேலக்குச் சேர்ந்தோருக்கு அரசு அலுவலகங்களில் கிடையாது.

வாரக் கடைசியில் ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று கூத்தடிப்பதெல்லாம் வளமான வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஏதேனும் ஒரு வகையில் சேமிப்பு அவசியம். அது எந்த இன்ஸூரன்ஸ் கம்பெனி என்று தீர்மானிக்கும் முடிவு அவரவர் கைகளில்தான் உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் 67000 பேர் விபத்தில் மரணித்துள்ளனர். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் இன்று விபத்துச் செய்திகளைப் படிக்கும் நாம் நாளையே செய்திகளாகும் வாய்ப்புக்களும் அதிகம். மற்றவை அவரவர் விருப்பம்.

நான் சந்தித்த 63 வயது நபரின் பெயர் : 

C.R. சீனிவாசன் , பழவந்தாங்கல்,

தொடர்பு எண்: 9841183457 

0 comments:

Post a Comment

Kindly post a comment.