Thursday, August 30, 2012

பழம்பெrரும் ஹாலிவுட் நடிகர் ஏ.கே. ஹஙகல் மறைவு !


1966  முதல் 2005 வரை ஷாகூயின், ஷோலே, நமக் ஹராம் உள்ளிட்ட 225 -க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார். பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்லார். சமீபத்தில் மறைந்த ராஜேஷ் கன்னாவுடன் 16 படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் விஜய் நடிகராகவுள்ளார்.

இவரது மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கராச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டார். 1950 ஆம் ஆண்டின் இறுதியில் மும்பைக்கு வந்தார். துணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டார். இவரது திரைப்படப் பணிகளுக்கு சிவசேனா தடை விதித்ததால், இவரது வருவாய் பாதிப்புக்குள்ளானது. எத்தகைய சமரசத்திற்கும் இவர் தயாரில்லை.

2011-ல் பிலாயில் நடைபெற்ற இப்டா மாநாட்டில் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 98-வது வயதில், 29-08-2012-ல் மும்பையில் காலமானார்.

இறந்தபின்னர்தான், இவரைப்பற்றிய தகவல்களை ஜனசக்தியும், 30-08-2012 நாளிதழில்  இரண்டு இடங்களில் வெளியிட்டுள்ளது.



0 comments:

Post a Comment

Kindly post a comment.