Friday, August 3, 2012

+ 2, டிகிரி படித்தவர்கள் இலஞ்சம் கொடுக்காமல் வேலை பெற ஒரு வழி !


அனைத்து  டிஎன்பிசி போட்டித் தேர்வுகளுக்கான

கடைசி  நேரப் பயிற்சிக்  கையேடு ! - வின்மணி

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு- பாடம்


படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு - கவியரசர் கண்ணதாசன்.
இன்றைய வாழ்க்கைச்  சூழலில், நேர்முகத் தேர்வுகளில்,  கல்வித் 


தகுதியைவிட ,  ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்திட உடனடியாக, முடிவெடுத்துச்  


செயலாற்றும் திறமையே முதல் தகுதியாகக் கருதப் படுகின்றது.. 
தினசரிகளைப் பார்த்தால், ஒரு TWO WHEELER, தாய் மொழி, ஆங்கிலம் 


நன்றாகப் பேசத் தெரிந்தவர்கள்,( பட்டதாரி;   10, 11, 12, தேறியவர்கள், 


தேறாதவர்கள்  ) வேலைக்குத்  தேவை என்பதே அதிகமாகக்


காணப்படும். மொத்தத்தில் அதிகம் படித்தவர்களுக்கு  முதல் நிலையில் 


இல்லாவிட்டால், அவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பது கடினம்.

 எனவே ,X, X1, X11, OR ANY DEGREE  முடித்தவுடன் ஓர் திட்டவட்டமான 


முடிவிற்கு வந்து விட வேண்டும்.  பதிவு செய்யப்படாத ரெயிலில்  உட்கார 


இடம்  பிடித்துக்கொண்டு, படுக்க இடம் தேடுவதுபோல் புத்திசாலித்தனமாகச்


செயல்படவேண்டும்.
எல்லோருமே என்ஜினியரிங் படித்து விட முடியாது. அப்படியே படித்தாலும்


முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்றுவிட இயலாது. முதல் வகுப்பில் தேர்ச்சி 


பெறாவிட்டால், B.E, B.TECH, MBA, M.COM படித்திருக்கின்றோம் என்று,


சான்றிதழுடன் வேலதேடி அலையலாமே தவிர, விரும்பும் வேலை


கிடைக்காது. யாரையும் அதைரியப் படுத்துவதற்காக இப்படிக் கூறவில்லை.
+ 2 முடித்தவுடன்  திறமையும், தகுதியும், வசதியும் இருந்தால் பொறியியற் 


கல்லூரிகளில் தாராளாமாகச் சேரலாம். வசதிகள்  இல்லாவிட்டாலும்  உரிய 


முயற்சிகளில் வங்கிக் கடனைப் பெற்றுச் சமாளிக்கலாம்.. மத்திய தர 


வர்க்கத்தில்  மருத்துவக் கல்வி  பலருக்கு எட்டாக் கனி.இயலாதவர்களுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.


அதில் முதலில் வருவது தமிழக அரசுத் தேர்வுகள் !


 T N P S C GROUP I, II, III, IV. தேர்வுகளில்


 கடந்த ஆறு ஆண்டுகளாகத் 


திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட 


 3000  வினாக்களும், விடைகளும் 


 தொகுக்கப்பட்டுள்ளன. 


உடனடி ஆயத்தக் 


கையேடு என்னும் பெயரில்!


தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள   வின்மணி (WINMANI )  என்ற திறமைசாலியைத்  தேடிப் பிடித்து 122 பக்கங்களில் 125 விலையில் தந்துள்ளனர், பதிப்பகத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற,


லியோ புக் பப்ளிஷர்ஸ், 


சென்னை-35 


அதிலும் ஒரு புதுமை ! ஒள்வையாரின் “ வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் “


என்பதற்கு  ஏற்ப, ஒரே பக்கத்தில், 25 வினாக்களும், அந்த வினாக்களுக்கான 


விடைகளும்  இடம்பெற்றுள்ளன. மனப்பாடம் செய்யக் கூட வேண்டாம்.
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.  பார்க்கும் கண்கள்


நெஞ்சில் பதிய வைத்துவிடும்.
அறிவிக்கும் எந்தத் தேர்வானாலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுவிடலாம்.


மீண்டும் ரெயில் கதைதான்.  ஏதாவதொரு DEPARTMENT-க்குள் 


நுழைந்துவிட்டால், மேற்கொண்டும் எழுதுவதற்கும், படிப்பதற்கும்


எண்ணற்ற வாய்ப்புக்கள் உள்ளன.
வெற்றிப் படிக்கட்டில் ஏறத்துவங்கி விடுவீர்கள்.


25- வயதுக்குள் எப்படியேனும்  நல்ல முறையில் வருவாய் 


ஈட்டிவிடவேண்டும் என்பவர்களுக்கு இதுவும் ஒரு நல்லவழி! 
லியோ புக் பப்ளிஷர்ஸ்,


36, முதல் பிரதான சாலை, ( அடித்தளம் )


சி.ஐ.டி.நகர், சென்னை-35


தொலைபேசி எண்கள் :- 044- 24351288, 42867654


மின்னஞ்சல் :- leobookdistributors28@yahoo.com
முதல் பக்கத்திலிருந்து ஒரு வினாவும் விடையும்!.


17. உலகிலேயே பெரும்பாலானோருக்கு வேலை           
      அளிக்கும் நிறுவனம் எது?


       இந்தியன் இரயில்வே.  தொகுப்பு :- வின்மணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.