Wednesday, August 1, 2012

தமிழக வரலாற்றில் ஓர் புதுமை! சகாயம் ஐ.ஏ.எஸ்., நடந்திடும் ஊழலைப் பகிரங்கப்படுத்தி ஊடகங்களிடமும், மக்களிடமும் ஆதரவைத் தேடுவது!




சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக அரசுக்கு கிரானைட் கொள்ளை

கடிதம் புத்தகமாக வெளியிடப்பட்டது.

புத்தகத்தை இந்தியன் ரிப்போர்டர் ஆசிரியர் வராகி வெளியிட அரசியல்.காம் ஆசிரியர் செல்வகுமார் பெற்றுகொண்டார்.

மக்கள் செய்தி மையத்தின் நிறுவனரும்,இந்த புத்தகத்தின் ஆசிரியருமான அன்பழகன் நூல் வெளிவந்த விதம் மற்றும் ஊழல் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக அரசுக்கு கிரானைட் கொள்ளை தொடர்பாக எழுதிய கடிதம்.



தறவிரக்கம் செய்ய Letter Download

2 comments:

  1. நல்ல செய்தி. நாட்டுக்குத் தேவையான செய்தி. எழுதி அனுப்பிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ,அதனை வலைப்பதிவில் வெளியிட்ட அன்பருக்கும் எமது வாழ்த்துக்கள்.நன்றிகள்.

    ReplyDelete
  2. பிற நாடுகளில் என்றால் இத்தகைய நிகழ்வுகளை ஆதரித்து அலை அலையாக மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து எழும்.

    ஐ.ஏ.எஸ். அறிவித்த மறுநாள் தினசரிகளில் எத்தகைய செய்திகளும் இது குறித்து வந்ததாகத் தெரியவில்லை. ஓரிரு தொலைக்காட்சிகளில் தகவல்கள் வந்தன.

    இன்று தீக்கதிர், ஜனசக்தி நாளிதழ்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தினமணியில் கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாணை நடத்த மார்க்ஸிஸ்ட் கோரிக்கை என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. கிரானைட் குவாரிகளில் விதி மீறல்: மதுரையில் ஆய்வு துவக்கம் என்றும் செய்தியயும் வெளியிட்டுள்ளது. இன்னும் இதர நாளிதழ்களைப் பார்க்கவில்லை

    முள்ளி வாய்க்கால் மானுடப் படுகொலைக்கே ஆர்ப்பரித்து எழாத மக்களிடம் எப்படி எழுச்சியை எதிர்பார்க்க இயலும் ?

    திண்டுக்கல்லில்- மதுரையில் என்று மக்களுக்காகத் தன் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தியவர்
    மாவட்ட ஆட்சியாளர், சகாயம், அவர்கள். கல்குவாரி மோசடிகளை வெளிப்படுத்தத் துவங்கியவுடன், கைத்தறித் துறைக்கு மாற்றப்பட்டார். மதுரை மக்களின் டிரான்ஸ்பர் மறுப்பு ஆர்ப்பாட்டங்கள் எதுவுமே எடுபடவில்லை.

    வலைப்பதிவினை வரவேர்றுப் பாராட்டிய மணிபாரதி ஐயா அவர்களுக்கு நன்றியும் !வணக்கமும்!

    ReplyDelete

Kindly post a comment.