Wednesday, August 29, 2012

கணவரின் கொடுமையால் 13 ஆண்டுகளாக வீட்டில் அடைபட்டிருக்கும் இந்தியப் பெண்: பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்ப போராட்டம் !



 பாகிஸ்தானில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் குல் முகமது கான். 1997-ம் ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்தபோது இவரைச் சந்தித்துள்ளார். குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி கானை திருமணம் செய்து கொண்டார் ஷெர்லி ஆன் ஹோட்ஜஸ், தனது பெயரை ஷப்னம் குல் கான் என மாற்றிக் கொண்டுள்ளார்.

2000-வது ஆண்டில் தனது பெண் குழந்தையுடன் கணவர் அழைத்ததன் பேரில் கராச்சி வந்துள்ளார். அங்கு அவருக்கு தனது முதல் மனைவியை அறிமுகம் செய்துவைத்து அதிர்ச்சியளித்துள்ளார் கான். அதன் பிறகு அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்ட கான் தனது ஐந்து மாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் ஷப்னத்தை குடி வைத்துள்ளார். அந்த வீட்டை விட்டு அவர் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

 ஷப்னத்தின் உறவினர்களுடன் கான் இருக்கும்போது மட்டும் பேசுவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் தான் படும் துயரத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.

ஆனால் இப்போது  இணையதளம் மூலம் இத்தகவலை தனது சகோதரருக்கு சமீபத்தில் தெரிவித்துள்ளார் ஷப்னம். இதையறிந்த அவரது சகோதரர் நோயல் ஹெட்ஜ், ஷப்னம் என்கிற ஷெர்லியை மீட்க பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், காவல்துறை மற்றும் மனித உரிமை அமைப்பின் உதவியை நாடியுள்ளார்.

 போலீஸôர் விசாரித்தபோது, கடந்த மாதம் சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் தனது மனைவி குறித்து மனு தாக்கல் செய்துள்ளார் கான். அதில் தன்னை போலீஸôர் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, இஸ்லாம் சமூகத்துக்கு மிகப் பெரிய உதவி செய்துள்ளதாகவும், தான் இதய நோயாளி என்பதால், தனது மனைவியின் உதவி தேவைப்படுகிறதென்றும், நோய் குணமானவுடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.
 ஆனால் கான் நீதிமன்றத்தில் அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற மாட்டார் என ஷப்னம் தெரிவித்துள்ளார்.

 வீட்டுச் சிறையிலிருந்து எப்போது மீள்வேன் என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாக ""டிரிபியூன்'' செய்தி
 வெளியிட்டுள்ளது. ( THE EXPRESS TRIBUNE First pak. news paper )

wanRi :- thinamaNi 29-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.