Wednesday, July 18, 2012

ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவராக முதன் முதலில் ஒரு பெண் அமைச்சர்!



Africa: 'A Victory for SA Diplomacy': 

Nkosazana Wins




ஆப்பிரிக்க ஒன்றியத்தில் மொத்தம் 51 நாடுகள் உள்ளன. இத்தனை 

நாடுகளையும் சேர்ந்த  தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணந்து 

வாக்களித்து ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்க 

வேண்டும்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியல் தலைநகராகத் திகழ்வது ஆடிஸ் 

அப்பவில் கடந்த ஞாயிறன்று தேர்தல் நடந்தது.


தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்து வருபவர், 

என்கோசாஷானா ட்லமினி ஜுமா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட  

கபூனைச்  சேர்ந்த ஜீன்பிங்க்கை விட அதிக வாக்குகளைப் பெற்று 

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக இது வரை ஆண்களே 

பதவியில்  இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 

நடைபெற்ற தேர்தலில் முதன் முதலாக ஒரு பெண் தலைவராகத் 

தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.


என்கோசாஷானா ட்லமினி ஜுமா தென்னாப்பிரிக்காவில் 

நீண்டகாலமாக அமைச்சராக இருந்து வருபவர். இன வெறிக்கு 

எதிராகப் போராடிவரும் போராளி. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 

வலிமையை மேலும்  வலுப்படுத்துத்துவதற்கு அனைத்து 

நடவடிக்கைகளையும் தொடர்ந்து  மேற்கொள்வேன் என்று தேர்தல் 

வெற்றிக்குப்பின் அறிவித்துள்ளார். 




0 comments:

Post a Comment

Kindly post a comment.