Wednesday, July 18, 2012

ஏமனில் 2.5 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் அவசர நிதியம் ( யுனிசெப் )

வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது :-


ஏமனில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் விலைவாசி

உயர்வு  ஆகிய காரணங்களால், ம்க்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக விலைவாசி உயர்வினால் அன்றாட  உணவு கிடைப்பதே  மிகப்

பெரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. இதனால் உள் நாட்டிற்குள்ளேயே

மக்கள்  இடம் பெயர்ந்து வருகின்றனர்.


இருந்தபோதிலும் சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் உணவு தானியங்களின்

பற்றாக் குறையால் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கப் படுவது

இரட்டிப்பாகி வருகின்றது.


ஏமன் நாட்டில் சுமார் 60% குழந்தைகள் ( 5 வயதுக்கும் குறைந்தவர்கள் ) ஊட்டச்

சத்துப் பற்றாக் குறைவ்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைத்

தடுக்காவிட்டால்  2.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும்.


ஊட்டச் சத்துக் குறைவில் ஆப்கானிஸ்தானிற்கு அடுத்த நிலையில் ஏமன்

இருந்து வருகின்றது.

2012-ஆம் ஆண்டிற்கு  5 கோடி அமெரிக்க டாலர்  நிதிஉதவியாகக் கிடைத்தால்

அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.

உதவி :- தீக்கதிர் 17-07-2012..

0 comments:

Post a Comment

Kindly post a comment.