Wednesday, July 18, 2012

கையால் மனித மலம் அள்ளும் தொழிலாளர் அவலம் ! பிரதமரைச் சந்தித்தார் நடிகர் அமீர்கான் !

File:Aamir Khan (Berlin Film Festival 2011).jpg
தில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள   7 ஆம் நம்பர் வீட்டிற்கு நடிகர் 

அமீர்கான்  டாக்ஸியில் வந்து இறங்கினார். பிரதமரிடம் இது குறித்துப் 

பேசினார். பிரதமர், இது குறித்து சமூக நல்வாழ்வுத்  துறை அமைச்சர்

 முகுல் வாஸ்னிக்கைச் சந்திக்குமாறு கூறினார். 


பின்னர் சாஸ்திரி பவனில் சமூக் நலத் துறை அமச்சரைச் சந்தித்து, 

துப்புறவுத்  தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துக் கூறினார். 

அவர்களது அவல  நிலையையும் துயரங்களையும் துடைப்பதாக 

அமைச்சர் உறுதி அளித்தார்.


நடிகர் அமீர்கான் “சத்யமேவ ஜெயதே” என்ற தொலைக் காட்சி 

நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் கையால் மனிதக் 

கழிவுகளை அள்ளும்  லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் 

துயரங்களை நடிகர் பொது  மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.


அவரது நிகழ்ச்சிகளில் பெண் சிசுக் கொலை, குழந்தை பாலியல் 

வன்முறைவீட்டு வன்முறை என ஒவ்வொன்றாக சமூகப் 

பிரச்சினைகளைத் தீவிரமாக ஆராயப்படுகின்றன.


மருத்துவத் தொழிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து  ஒரு 

நிகழ்ச்சியில் அவர் நேயர்களுக்கு எடுத்துக் காட்டினார். பின்னர் 

மருத்துவத் துறையில் நேரடி அந்நிய முதலீடு குறித்து அவர், 

நாடாளுமன்றக் குழு முன்பாகப் பேசினார்.


பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பொழுது, இந்த விஷயங்களில் 

நடவடிக்கை  எடுக்க  பிரதமர் மன்மோகன் சிங்கும், முகுல்  

வாஸ்னிக்கும்  உறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.


47 வயது நடிகர் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒன்றில், ஒரு 

லட்சத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மனித மலத்தைக் 

கையால் அள்ளும் கொடுமையையும். இன்றைக்கும் அவர்கள் 

தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவது குறித்தும் வெளிச்சமிட்டுக் 

காட்டினார்.


இந்தத் தகவலை உலகம் -பிறமாநிலங்களுக்கான செய்திகள் பகுதியில்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிக்கையான தீக்கதிர்  நடிகர் 

அமீர்கான்   படத்துடன் 17-07-2012 தேதியில் வெளியிட்டிருக்கின்றது


ம.பொ.சியின் அரும் பெரும் முயற்சியில் சென்னை தமிழர்களுக்குக் 

கிடைத்தது. 63 ஆண்டுகளுக்குப்பின் சென்னையின் தெருக்களின் 

பெயர்கள் பளிச்சென்று தெரிகின்றன.


இத்தக்லையவர்களின் கைகளுக்கு  இரப்பர் உறைகள் முதலில் 

கிடைக்கட்டும்.. இதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

பாடம் மாத இதழின் ஆசிரியர் அ. நாராயணன் எவ்வளவோ முயற்சிகள் 

எடுத்து வருகின்றார்.


பொழுது போக்கிற்காகவோ, கொள்கைப் பிடிப்போடோ வலைப்பூவில்

பக்கங்களை நிரப்பிவரும் நாம், சென்னை மாநகர மேயருக்குக் கூட்டாகக்

கோரிக்கை வைத்தால் முதலில், குப்பை அள்ளுவர்களுக்கும், 

மற்றவர்களுக்கும் கைகளுக்கு உறைகள் கிடைக்கச் செய்திடுவோமா?.

நடிகர் அமீர்கானுக்கு உள்ள அக்கறை நமக்கு இல்லாமலா போகும்?


0 comments:

Post a Comment

Kindly post a comment.