Friday, July 13, 2012

ஒரு புத்தகத்தின் விலை: ஒரு லட்சம்! -தினமணி !


கதிர்

First Published : 08 Jul 2012 12:00:00 AM IST

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்து ஆறு வருஷங்கள் ஓடிவிட்டன. அண்மையில் அவர் பற்றிய ஒரு புத்தகம் பெங்களூரில் வெளியிடப்பட்டது. 
இதை ராஜ்குமாரின் மகன் புனீத் எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவுக்கு வந்திருந்த வேறு பலரும் அதே விலையைக் கொடுத்து அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டார்கள். 
அந்த விழாவில் புனீத் பேசும்போது சொன்னார், ""என் தந்தையின் போட்டோக்களை சேகரிக்கவே எனக்கு நான்கு வருஷங்கள் தேவைப்பட்டன
 இந்தப் புத்தகத்தை 3,000 பிரதிகள் அச்சிட்டு இருக்கிறோம். இந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் ஓர் அறக்கட்டளைக்குப் போகும். அந்த பணம் கன்னட பள்ளிகளின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும், 
 "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை நடிகர் சூர்யா மாதிரி நான் நடத்துகிறேன். அப்போதுதான் நான் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன். என் தகப்பனார் ராஜ்குமார் பற்றி இதுவரை 67 புத்தகங்கள் வந்துவிட்டன!''


இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், பிரபல நாடக நடிகை ரங்கநாயகியம்மா, இயக்குநர் தத்துராஜ் ஆகியோருக்கு "ராஜ்குமார் கெüஹர்தா 
பிரஹாஸ்தி' விருதுகளை திருமதி. பர்வதம்மா ராஜ்குமார் வழங்கினார். ராஜ்குமார் சொந்த குரலில் பாட ஆரம்பிப்பதற்கு முன்னர் பி.பி.ஸ்ரீனிவாஸ் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவருக்கு பின்னணி பாடியிருக்கிறார். ராஜ்குமார் அவரிடம்,""நீங்கள் சாரீரம், நான் சரீரம்'' என்று அடிக்கடி சொல்வாராம்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.