Friday, July 13, 2012

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.


          http://naturalfoodworld.wordpress.com/


கணியரசு மா.ஆண்டோ பீட்டர் அளவற்ற நம்பிக்கையுடன் 35-40 ஆண்டுகளுக்கு முன்னரே கணினி உலகம்தான், வருங்காலம் என்பதை திட்டவட்டமாக உணர்ந்துகொண்டவர்.

சாகித்ய அகடமி பரிசு பெற்ற மக்கள் எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களுக்கு கணினியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து டன் ,கணினியையும் கொடுத்துத்  தமிழைக் கணினியில் எழுதவைத்தவர்.

அயராத உழைப்பின் காரணத்தால், தன் உடலைப்பற்றிய சிந்தனை துளியேதும் இன்றி  கணினித்  தமிழை வளர்ந்தோங்கச் செய்திட உழைத்தவருக்கு, குறைந்த பட்சம், ஆண்டிற்கொரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்  என்பதை நினைத்திடவே நேரமில்லை. அதனை  மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தால் தற்போதைய அகால துர்மரணம் நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. எனவேதான், வலைப்பூவில் தேடிப்பிடித்தேன் இந்தப் பதிவை.

இந்தத் தகவலை எல்லோருக்கும் பரப்புவது நமது கடமை. இவரது மரணம்  எல்லோருக்கும் ஓர் பாடமாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

 தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?


படம் 1
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.

படம் 2
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

உயிரை காக்கும் இது போன்ற தகவல்களைக் குறைந்தது  ஒவ்வொருவரும்  பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.