Thursday, July 19, 2012

நெல்சன் மண்டேலாவுக்கு இன்று 94-வது பிறந்தநாள்


irst Published : 18 Jul 2012 01:45:44 AM IST

தென்னாப்பிரிக்காவின் குனு நகரில் உள்ள நெல்சன் மண்டேலா அருங்காட்சியகத்தில் உள்ள மண்டேலாவின் புகைப்படம்.
ஜோகன்னஸ்பர்க், ஜூலை 17: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 94-வது பிறந்தநாள் அந்நாட்டு மக்களால் புதன்கிழமை (ஜூலை 18) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


 அப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிகமானோர் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடி உலக சாதனையையும் படைக்க இருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் சமூக நீதி, சுதந்திரம், ஜனநாயகம், நிற வெறிக்கு எதிராக 67 ஆண்டுகள் அயராது போராடியவர் மண்டேலா. இதில் 27 ஆண்டுகளை முழுமையாக சிறையில் கழித்துள்ளார்.


 1994- முதல் 1999-ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க அதிபராக மண்டேலா பதவி வகித்தார்.


 நாட்டுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் அவர் செய்த பெரும் தியாகத்தை கெüரவிக்கும் வகையில் 67 நிமிடங்கள் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 "மண்டேலா நாள்' என்று ஐ.நா. சபையால் 2009-ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என தென்னாப்பிரிக்கா முழுவதிலும் மண்டேலாவின் உடல்நலத்துக்காக ஒரே நேரத்தில் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.


 அவரது பிறந்தநாளை முன்னிட்டு பெரும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சார்பில் பள்ளிகள், அநாதை, முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் பள்ளிகள் ஆகியவற்றில் பல்வேறு உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடல்நலக் குறைவு காரணமாக பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எதிலும் மண்டேலா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.