Monday, July 16, 2012

ஜனாதிபதி தேர்தல் வாக்காளரில் 3-ல் ஒரு பங்கு கிரிமினல்கள்!-- காங்கிரசைத் தோற்கடிக்கச் சரியான நேரம் இதுவல்லவா?

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஜனாதிபதி பதவி வகித்தோர் பட்டியல்:-



ஜனாதிபதிக்குத் தரப்படும் சம்பளம் குறித்த தகவல்:- கணினி தரும் தகவல்:- 

Salary of Mrs. Pratibha Patil - President of India

Mrs. Pratibha Patil - President of India 

Born: 1934 India  - Married  - Children: 2

SALARY :
# Annual: INR 1,772,738.00
# Monthly: INR 147,728.00
# Weekly: INR 35,455.00
# Daily: INR 7,091.00

Notification: the salarychecker is based on a 5 days working week and two weeks holiday per year.On 11 September 2008, Government of India has increased the salary of President to Rs. 1.5 lakh (US$ 3,100). However, almost everything that the President does or wants to do is taken care of by the annual Rs 225 million (US$ 4.7 million) budget that the Government allots for the upkeep.

இந்தியாவில் மொத்த எம்.பி-க்களில்  மூன்றில் ஒருபங்கினர்ர் கிரிமினல் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகின்றது என்று  janasakthi  நாளிதழ்  கூறுகின்றது. அந்த ஆய்வுக் குழு யார் என்றும்  ஜனசக்தி கூறவேண்டும்..

641 பேர் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, ஊழல் போன்ற மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இத்தனைக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பாதிப் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 31 சதவிகித கிரிமினல் எம்பி, எம். எலேக்களில் 6 பேர் மீது கற்பழிப்பு வழக்கு இருக்கின்றது. 145 பேர் திருடர்கள் என்று போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. 141 பேர் கொலையாளிகள். 90 பேர் கடத்தல்காரர்கள். 75 பேர் கொள்ளையர்கள் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 352 எம்பிக்கள், எமெல்கேக்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது. பெண் எம்பி, எல்கே க்களில் 10 சதவிகிதம் பேர் மீது சொர்ணாக்கர் ( ? ),  மாதிரி வழக்குகள் பதிவாகியுள்ளன.

இத்தகைய குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்த்டுக்க உள்ளனர். ஒரு எம்.பி.மீது 35 வழக்கு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் போடும் ஓட்டு சரியானதாக இருக்காது என்று சமூக நலக் குழுக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அந்த சமூக நலக் குழுக்கள் எவைஎவை பட்டியலிட்டுக் காட்டுங்கள் தோழர்களே ?

]இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ஜனசக்தி தனது 14-07-2012 இதழில் முதல் பக்கத்தில் வெளியிட்ட்டுள்ள தகவல். கீழ்வரும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் தேர்தலை நடத்துவதைத் தடுத்து நிறுத்திட முடியாதா?இவர்கள் போடும் ஓட்டு சரியானதாக இருக்காது என்று சமூக நலக் குழுக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.. அவர்கள் உயர்த்தியுள்ள போர்க்கொடியை மேலும் உயர்த்திப் பிடிக்க முடியாதா?  இச்சூழலில் யார் யாரை ஆதரிப்பது என்று பேசுவதும் எழுதுவதும் எதற்காக்? 
ஜோதிபாசு பிரதமர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சியே ஏற்றுக்கொண்டதோர் நிலையில், ஜோதிபாசு அதனை ஏற்றுக்கொண்ட நிலயிலும், CPM தலைமை, ஜொதிபாசு பிரதமர் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று முடிவெடுத்தது என்ன காரணம் கருதியோ? அதனை, ஜோதிபாசு, HISTORICAL BLUNDER - வரலாற்றில் இது பெருந்தவறு என்பதோடு  ஜோதிபாசு  மவுனமாகி விட்டார். குழப்பமான இன்றைய சூழலைக்கூட நாட்டு மக்களுக்குப் பலனுள்ளதாக ஆக்கிக்கொள்ளக் முடியாதா? காங்கிரசை மட்டும் தனிமைப்படுத்தினால்  என்ன?


0 comments:

Post a Comment

Kindly post a comment.