Monday, July 16, 2012

20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதனின் முழுமையான முதல் எலும்புக்கூடு !

கரபோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆதி மனிதன் இறக்கும்பொழுது அவனது வயது 9 முதல் 12 வயதுக்குள் இருக்கக் கூடும் என்று கருதப்ப்படுகின்ற்து.


Lost a tooth - but found for science: The remains of a juvenile hominid skeleton, of the new Australopithecus (southern ape) sediba species, are the 'most complete early human ancestor skeleton ever discovered'



தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.2008 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக் கூடு, ஆய்வகத்திலேயே இத்தனை நாள் இருந்தது. அந்த பாறைப் பகுதியில் என்ன இருந்தது என்பதை எவராலும் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. ஆய்வக உதவியாளர்., ஜஸ்டின் முகாங்கா அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை சக விஞ்ஞானிகளிடம் காட்டினார்.

இந்த மனிதனுக்கு நீண்ட கை, கால்கள் உள்ளன. மூளை சிறியதாக உள்ளது. முதல்வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும் என்ற ஐயப்பாட்டால், ஆதிமனிதன் என்று கருதப்பட்டு , இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆதிமனிதன் கண்டு பிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அந்தப் பகுதியில் ஆய்வுகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை MailOnline - news, sport, celebrity, science and health stories தெரிவித்துள்ளது. 



0 comments:

Post a Comment

Kindly post a comment.