Saturday, June 30, 2012

[MinTamil] Re: முதல் மூவர் - ராஜாஜி


DEV RAJ rdev97@gmail.com 
23:51 (5 hours ago)
to mintamil
 ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

  கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் !"
                                                 
 (திருவெம்பாவை 10)


 தளியிலார் என்பவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்கள்


இவருள் சிவன் கோவிலில் பணி செய்தவர்கள் 'ரிஷபத் தளியிலார்


என்றும்வைணவக் கோவில்களில் பணி செய்தவர்கள் "ஸ்ரீ வைஷ்ணவ மாணிக்கம்" 


என்றும் அழைக்கப்பட்டனர்பார்ப்ப்வர்கள் மனம் தறி கெடும் படியும்


போகப்பொருளாகாவும் இவர்கள் இருந்தனர் என்றால்இப்படியா சிறப்புப் பெயர்

பெற்றிருப்பார்கள்?

 பதியிலார் என்போர் பெரிய கோவில்களில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்


தஞ்சைப் பெரிய டையார்க் கோவிலில் நானூற்றுக்கும் மேற்பட்டப் பதியிலார் 


பணியாற்றி இருக்கின்றனர்அவர்களது வீட்டு எண்தெருப் பெயர் போன்ற விவரங்கள் 


எல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன


இந்த் தேவரடியார்களும்பதியிலார்களும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களில்லை

எல்லா வகுப்புப் பெண்டிரும்  தேவரடியார்களாக இருந்திருக்கின்றனர்.

 முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில்  'ஆச்சப் பிடாரன் கணபதி நம்பி' என்கிற


 அழகிய பாண்டியன் பல்லவரையன்  என்னும் படைத் தலைவன்பாலாற்றங்கரையிலுள்ள

திருவல்லம் கோவிலில்  பணிகள் செய்வதற்கு தன் குடும்ப்ப் பெண்களைத் 

தேவரடியார்களாக ஒப்படைத்தான்அப்பெண்கள் சூலப்பொறி பொறிக்கப்பட்டு

கோவில் பணிகளில் ஈடுபட்டனர் என்று அந்தக் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது


ஆடல் பாடல் என்பதும் கோவில் பணிகளில் ஒன்றாகச் செய்யப்பட்டது

தெய்வத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் விரும்பினால்


ஒருவரை மணம் செய்து கொண்டு வாழவும் வசதியளிக்கப்பட்டது


சதுரள் சதுரி என்ற தேவரடியாள்நாகன் பெருங்காடன் என்பவனை 


மணந்து கொண்டாள் என்று கூறும் திருவொற்றியூர்க் கல்வெட்டு 



0 comments:

Post a Comment

Kindly post a comment.