Saturday, June 30, 2012

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கி மதுரை மாணவர் சாதனை!


Posted on  by vidhai2virutcham   

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர்.
பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவது கண்கூடு. பெட் ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலா ம் என்றால், மின் தடை பிரச்சி னை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவது ம் சிரமமான காரியமாக இருக்கி றது.
இப்படியே போனால் இதற்கு என் னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் கார்த்திக்.
“பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட் டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலா ண்மை என்றாலும், இயந்திரவிய லின் மேல் உள்ள ஈடுபாடு கார ணமாக சோலார் பைக்கைத் தயா ரி த்திருக்கிறார் இவர்.
“இயந்திரவியல் துறையில் படி க்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உரு வாக்கியிருக்கிறேன். முதல் கட்ட மாக, சூரிய ஒளியை மின்சக்தியா க மாற்றக் கூடிய சோலார் பேன ல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரி ய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமை த்தோம். ஹெட் லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக் கிளில் பயன் படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங் களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண் பித்த போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித் தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கி றார் கார்த்திக்.
உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித் து விடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளு க்கென வேறு பணம் செலவழிக்கத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறு ம் கார்த்திக் இந்த பைக் கினை உருவாக்க உதவி ய நண்பர் ஹரி, மெக் கானிக் முத்து ஆகியோ ருக்கு நன்றி கூறு கிறார்.
அடுத்தகட்டமாக, முற்றி லும் சோலார் மூலம் இயக்கும் வகையி லான ஆட்டோ மற் றும் கார்களை வடிவமைக் கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. 
அதற்காக ஸ்பான்சர்’ கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003 என்ற கைபேசி எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.
http://www.nif.org.in/announcement    இந்த இணைய தளத்திற்குச் சென்று காப்புரிமை செய்துட ஆவன செய்யவும்.முயற்சியில் மேலும் மேலும் வளர்க.வெல்க.

0 comments:

Post a Comment

Kindly post a comment.