Friday, June 29, 2012

புத்த துறவிகளைப் பதம்பார்த்த தேனீக்கள்





 தாய்லாந்து நாட்டில், தேனீக்கள் கொட்டியதில், புத்த துறவிகள் 76 பேர் காயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் சியாங்மாய் என்ற இடத்தில், புத்த மடாலயம் உள்ளது. மடாலயத்தை சுற்றியுள்ள மரங்களில், தேன் கூடுகள் உள்ளன. புத்தர் கோவிலை சுற்றி சுத்தம் செய்வதற்காக சென்ற, 76 புத்த துறவிகளை, ராட்சத தேனீக்கள் பறந்து வந்து தாக்கின. இதில், சில துறவிகள், சுயநினைவை இழந்து விட்டனர். இவர்கள், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், லேசான காயமடைந்த 34 பேர், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மடாலயம் திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனீக்கள் கொட்டியதால், சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. 19 துறவிகளை, நிறைய தேனீக்கள் கொட்டியுள்ளதால், அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வழக்கமாக, துறவிகள் நடமாடும், இந்த இடத்தில் தேனீக்கள், நேற்று ஏன் திடீரென தாக்குதல் நடத்தின என்பது தெரியவில்லை என, மடாலய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.