Friday, June 29, 2012

மின் மீட்டருக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மின்வாரியமும் மீட்டர் விற்பனையாளர்களும் !



















வீடுகளுக்கு மீட்டரை மின்வாரியம்தான் நேரடியாக விநியோகிக்க 

வேண்டும்.. மின்வாரியத்திலிருந்து நேரடியாக விநியோகம் செய்ய

காலதாமதமாகும். 

விரும்பினால் நீங்கள் கடைகளிலேயே வாங்கித் 

தரலாம். நீங்கள் வாங்கித்தரும் மீட்டர்களை மின்வாரியத்தில்

கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த மீட்டரைச்சரிபார்த்துவிட்டு, 

அதில் உள்ள  தனியாரின் அடையாள முத்திரையை அகற்றிவிட்டு

 மின்வாரியத்தின் - அரசின் முத்திரையைப் பதித்துத் தருவார்கள். 

இதற்கு குறைந்த பட்சம் இரு வாரங்கள் முதல் பத்து நாட்கள் வரை 

ஆகும். அதுவும் அவர்கள் குறிப்பிடும் கடைகளில்தான் வாங்கித்தர
வேண்டும்.  

அதிலும் மீட்டருக்கான முழுத் தொகையையும் 

மின்வாரியத்தில் முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். நாம் 

தனியாரிடம்,  அதுவும் மின்வாரியம் அங்கீகரித கடைகளில் வாங்கிக் 

கொடுத்தால்  நாம் செலுத்திய மீட்டருக்கான மொத்தத் 

தொகையையும் நமக்குத்  திருப்பித் தருவதில்லை. குறைந்த 

தொகையைத்தான் கணக்கில்  ”அட்ஜஸ்” செய்து கொள்கின்றனர்.

இது விபரத்தைத் தினமணி விசாரித்து எழுதிட வேண்டும்.




தமிழ்நாடு மின்வாரியத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள விற்பனையாளர்கள், மின் மீட்டர்களுக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால் நுகர்வோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விலையை உயர்த்துவதற்காக இதுபோன்ற உத்தியைக் கையாளும் விற்பனையாளர்கள் மீது மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.


 வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஒருமுனை, மும்முனை மின் இணைப்பு புதிதாகப் பெறும்போது மின் மீட்டர்களை தமிழ்நாடு மின்வாரியமே பொருத்தி வந்தது. இந் நிலையில், கடந்த மாதம் முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, மீட்டர்களை தனியார் விற்பனை நிறுவனங்களில் மின்நுகர்வோர் வாங்கி, மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.


இதற்காக 6 தனியார் நிறுவனங்களின் மின் மீட்டர்களுக்கு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மின் மீட்டர்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திடம் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டுமே மீட்டர்களை நுகர்வோர்கள் வாங்க முடியும்.


 ஒருமுனை இணைப்புக்கான மின் மீட்டரை அதிகபட்சமாக ரூ.850 வரையும், மும்முனை மீட்டரை அதிகபட்சமாக ரூ.2,300 வரையும் விற்பனை செய்யலாம் என வாரியம் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், ஒருமுனை மின் இணைப்புக்கான மீட்டர்களை ரூ.1,200-க்கு தனியார் விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர். அதுவும் முன்பதிவு செய்து 20 நாள்கள் காத்திருந்தால்தான் கிடைக்கும். மின் மீட்டர்களை முன்பதிவு செய்வதற்காக ஈரோட்டில் கடந்த வாரம் நீண்ட வரிசையில் நுகர்வோர்கள் காத்திருந்தனர்.


ஈரோடு மின் மண்டல எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் ஈரோடு மற்றும் கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மீட்டர்களை வாங்கலாம். இருப்பினும் இந்த 4 மாவட்டங்களிலும் ஒவ்வொரு விற்பனையாளர்களிடமும் தலா 500-க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்
.
 தனியார் மின் மீட்டர் உற்பத்தி நிறுவனங்களுடன் விற்பனையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து மீட்டர்களுக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். விலையை உயர்த்தி விற்பனை செய்வதற்காகத்தான் இதுபோன்ற உத்தியைக் கடைப்பிடிப்பதாக பெரும்பாலான மின் நுகர்வோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இதுகுறித்து, மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் என்.லோகு கூறியது:


குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே மீட்டர்களை வாங்க மின்வாரியம் அறிவுறுத்துவதால் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே மீட்டர் பிற கடைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. எனவே, மின்வாரியம் குறிப்பிட்டுள்ள மீட்டர்களை நுகர்வோர்கள் விரும்பும் கடைகளில் வாங்க அனுமதிக்க வேண்டும். தனியார் கடைகளில் வாங்கும் மீட்டர்களுக்கு சோதனை அறிக்கைக்கான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. தனியார் கடைகளில் வாங்கப்படும் மீட்டர்கள் பழுதானால், மின்வாரியம் சார்பில் புதிய மீட்டர் வழங்கி மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை அறிக்கையின் நகல், மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட வேண்டும். செயற்கையாக மீட்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்தும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இதுகுறித்து, ஈரோடு மின் மண்டல உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட தனியார் கடைகளில் மீட்டர்களை வாங்க வேண்டும் என்பது சென்னையில் உயர் அதிகாரிகள் எடுத்த முடிவு. கூடுதல் விலைக்கு மீட்டர்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.
 மின் வாரியம்
 நடவடிக்கை
 எடுக்குமா?
மின்வாரியமே மீட்டரை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தருவதொன்றே சரியான தீர்வாகும்.  அல்லது மீட்டருக்கான பணத்தை  முதலிலேயே வசூலிக்கக் கூடாது.



0 comments:

Post a Comment

Kindly post a comment.