Friday, June 29, 2012

MinTamil] ஆங்கிலத்தில் நாயன்மார் வரலாறு


Inbox
x

Maravanpulavu K. Sachithananthan tamilnool@gmail.com
07:16 (20 hours ago)
to mintamil
ஆத்திரேலியாவில் மெல்போர்ண் நகரில் நடனப் பள்ளி / தமிழ்ப் பள்ளி.
அப்பள்ளி மாணவர்களுக்குத் தேவாரம் தளத்தை விளக்குமாறு அழைத்தவர் திருமதி மங்களம் சீனிவாசன்.

திருமதி மங்களத்தைச் சிறுமியாயிருந்த காலம் தொட்டு அறிவேன்.
கொழும்பில் திரு. கி. இலட்சுமணன், திருமதி பாலம் இலட்சுமணன் ஆகியோரின் அருமை மகள்.

மார்கழி 2011இல் இரு பள்ளிகளுக்கும் அழைத்திருந்தார். எனவே இரு நிகழ்ச்சிகள்.
இரு நிகழ்ச்சிகளுக்கும் வந்திருந்த மாணவர், தளத்தைப் பார்த்து வியந்தனர்.
பெற்றோரும் வியந்தனர். பொறியியலாளர் திரு. சிறீக்கந்தராசா எனக்குத் துணையாக உதவினார்.
  
பன்னிரு திருமுறைகளுக்கான ஆங்கில தளம் அவர்களை ஈர்த்தது.
ஆங்கில ஒலிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் 18,268 பாடல்களுக்கும் உண்டு என்பதால் மகிழ்ந்தனர்.
கோயில்கள் வரலாறு, அருளாளர் வரலாறு ஆங்கிலத்தில் இல்லையே என வருந்தினர்.

செய்யலாம் என நான் சொன்னபொழுது, ஒருவர் செலவைத் தர முன்வந்தார்.
மற்றவர் மொழிபெயர்த்துத் தருகிறேன் என்றார்.
முன்னவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
பின்னவர் திருமதி மங்களம்.














0 comments:

Post a Comment

Kindly post a comment.