Thursday, April 26, 2012

மாவோயிஸ்டுகளைத் தேடும் வேட்டை நிறுத்தம்! இந்தியத் தமிழனின் நிலை என்ன ஆகும்?

  மாவோஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட 

32 வயதுடைய  இந்தியத்  தமிழர்., சத்தீஸ்கர் 

 மாவட்ட ஆட்சியாளர்..

அலெக்ஸ்  பால்  மேனன்

http://alexmenon.blogspot.in/

கடத்தப்பட்ட இதே  இடத்தில்தான் சென்ற ஜனவரி  மாதத்தில் இரண்டு   பி.ஜே.பி  தலைவர்களும், ஒரு சட்ட மன்றப் பிரதிநிதியும் சுட்டுக் கொல்லப்பட்ட   கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது என்பது ஒருதகவல்!

மாவோயிஸ்டுகளின்  செல்வாக்கு மிகுந்த  அந்தப்பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் சென்றபோது  பாதுகாப்பிற்கு உடன் சென்றவர்கள் இரண்டு பேர்தான்..
தலைமையின் கட்டளையையும் மீறி  அரசு போட்ட திட்டத்தினை .செயற் படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.  இவர் சென்றது.

”மெகா கிராமப்புற  டிரைவ் “  என்னும் பெயரில் ”கிராம் சுராஜ்” திட்டம் தயாரிக்கப் பட்டது.சட்டீஸ்கர் பா.ஜ. அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசின் நல திட்டங்களின் செயல்திறனை மதிப்பிட--கிராமச் சந்திப்புகளை நடத்தவே  இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

பழங்குடி அலங்காரத்தில்  உள்ள உடையோடு  வந்த  மாவோயிஸ்டுகள், Manjhipara காட்டில் பகுதியில் ஒரு அரசு விழாவிற்கு வந்த ஆட்சியாளரைக்
கடத்திச் சென்றுவிட்டனர்.  ராய்பூர் இருந்து 500 கி.மீ. தூரம் உள்ள பகுதி அது. .
பத்திரிககள் தமிழன் என்று  எழுதுவது  தேச ஒற்றுமைக்கு  எதிரானது   என்று கொள்ளலாமல்லவா ? இருப்பினும்  எல்லோரும் போகும் வழியில் 
செல்வதற்காக இந்தியத் தமிழன் என்று குறிப்பிட்டுள்ளேன்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதி என்று குறிப்பிடுவது இது போன்ற கட்டங்களில்மட்டும்தான்  நமக்குத் தெரிகின்றது.

 மாவட்ட ஆட்சியரின் ஆஷாமேனன்  கதறித் துடிக்கின்றார். உள்ளூர் சேனல் ஒன்றில் அவருக்குத் தேவையான மருந்துப் பொருள்களுடன் என்னை அனுப்பி வையுங்கள். மாவோயிஸ்டுகளிடம் கெஞ்சிக் கேட்டேனும் என் கணவரை அழைத்து வந்து விடுவேன் என்று கதறுகின்றார் .மாவட்ட  வழக்கம்போல் சகல வாக்குறுதிகளையும் வழங்கிவருகின்றார்.

ஜெயில் உள்ள  குறிப்பிட சில மாவோயிஸ்டுகளை, விடுவித்தால்தான் ஆட்சியரை  விடுவிப்போம்  என்று செய்தி அனுப்பியுள்ளனர் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள்.

மாவோயிஸ்டுகளையும் கிராமப்புற மக்களையும் பிரிப்பதில் காட்டும் அக்கறையை, அரசானது மக்கள் குறைகளைத் தீர்த்து வைத்துவிட்டால் தானாகவே மாவோயிஸ்டுகளின் செல்வாக்குக் குறைந்து விடுமல்லவாஃ?இதுதானே நேரான திசை வழி?

இதற்கிடையே  பேச்சு நடத்த வழக்குரைஞர்  பிரசாந்த் பூஷண், எஸ். சி.எஸ்டி. ஆணைய முன்னாள் தலைவர்  மணிஷ் குஞ்சம் ஆகியோரை மத்தியஸ்தரார்களாக அறிவித்துள்ளனர், மாவோயிஸ்டுகள்.

மேலும் மத்திய அரசு, மாநில அரசு கேட்கும் எல்லா வசதிகளையும் செய்துதரத் தயாராய் இருப்பதாக, ஆர்.கே. சிங் அறிவித்துள்ளார்.

நேர்மையான அதிகாரியாக இருந்தவர்கள் மாவோயிஸ்டுகள் பிடியில்!
நேர்மையான அதிகாரியைக்  கைப்பிடித்த காரணத்தால் ஆஷாமேனன்
நடைப்பிணமாய் நடுத்தெருவில்!

அடுத்து என்ன நடக்குமோ என்ற பதறித்துடிக்கும் நம்போன்றோ வருத்ததின் பிடிப்பில் !

தலைவர்கள் எச்சரிக்கைவிடமுடியும். கடிதம் எழுத முடியும். ஆர்ப்பாட்டம் நடத்தமுடியும். கதறித் துடிக்கும் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முடியும்.  ஆனால் கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல் என்ற இளங்கோவின்  வரிகளுக்குரிய மறுப்பைச் சொல்ல முடியுமா?

எப்படியாவது மாவோயிஸ்டுகள்  மனம் மாறும் என்று நம்புவோம்.
அரசை நம்புவதைவிட  மற்றவர்களைத்தானே மாவோயிஸ்டுகளும் நம்புகின்றனர்.


சகோதரி, கவலைப்படாதே! உனது துயரம் நீங்கும் வெகு விரைவில்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.