Thursday, April 19, 2012

தற்கொலைக் கூடங்களாகும் கல்விக் கூடங்கள்- வாரம் ஒரு தற்கொலை

காதல் தோல்வியோ- தேர்வில் தோல்வியோ எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மன நிலையில் மாணாக்கர்கள்  தெர்ந்தெடுப்பது தற்கொலை முயற்சியைத்தான். பிறர் அவமானப்படுத்துவதையும் காரணியாக்கிக் கொள்கின்றனர். ஆரம்பப் பள்ளி முதல் முதல் எம்டெக் படிப்போர் வரை இந்த அவல நிலை தொடர்கின்றது

இந்த ஆண்டில் வாரம் ஒரு  ஆண்டவர் தற்கொலை செய்துகொண்டதாக பு ள்ளி விபரங்கள் கூறுகின்றன.

நாமக்கல்லில்  நான்கு மாணாக்கர்கள்,  சென்னையில் ஐஐடியில் உத்திரப்பிரதேச மாணாக்கர் ஒருவர், 2012-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் 17 ம் தேதி வரை,  தேர்தல் தோல்வியாலும்,  காதல் தோல்வியாலும், ஆசிரியர்களின் அவமானம் தாங்காமலும் 13 மாணாக்கர்கள் வரை தற்கொலைகள் நடந்துள்ளன.

உயிரை மாய்த்துக் கொள்ளும் தைரியம் இந்த மாணாக்கர்களுக்கு  வருகின்றது என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.

3-வதுவயதி ஆரம்ப பள்ளிகளில் நுழைந்து 12 வயதில் மேல்நிலைப்பள்ளி முடித்து மாணாக்கர்கள் வெளியே வருவது வரை  15 வருட பள்ளி வாழ்க்கையில் மாணாக்கர்களுக்கு  வாழ்வியல் பற்றி சிறிதாவது கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறதா ?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்தால்தான் எதிர்கால வாழ்க்கையே ந்ன்ற எண்ணம் தானே அவர்க மனதில் திஉணிக்கப் படுகின்றது. ஆசிரியர்களும் மதிப்பெண்களைத்தவிர வேறு எதைப்பற்றிய சிந்தனையிலும் ஈடுபடுவதில்லை.

இந்தக் கல்விமுஇறை சார்ந்த சமூகம் தைரியமற்ற மாணாக்கர்களைக் கோழைகளாக்குகின்றது. வீட்டை விட்டு ஓடிப்போகச் சொல்கின்றது. தவறான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளச் சொல்லுகின்றது. அதிலேயே மகிழ்ச்சியும் அடையச் சொல்கின்றது. உண்மை தெரிந்து திருந்த்திக் கொள்ல முற்படும்பொழுது வாக்கையும் முடிந்து விடுகின்றது.

20 மாணாக்கர்களுக்கு ஒரு  கவுன்சிலர்  நியமித்தல் வேண்டும் என்று அறிஞர் பெருமக்கள் கூறத் துவங்கியுள்ளனர்.

பன்முகத் திறனாளி ஞாநி-பத்மாவதி ஆகியோர் இளஞர்களுக்கு மட்டுமல்ல, வயது முதிர்ந்தவர்களுக்கும் குறந்த கட்டணத்தில் மனவளைப் பயிற்சி அளித்து  வருகின்றனர். விரும்புவோர் பயன் படுத்திக் கொள்வது அவர்களது வாழ்க்கையைச் செழுமைப் படுத்தும்..

வாழ்க்கைத் திறன் பயிற்சி வகுப்புகள்:
-
1. ஒரு நாள் அறிமுகப் பயிற்சி முகாம்

   காலை  10 மணி முதல் மாலை 3 மணி வரை.

2. 3 நாள் பயிற்சி முகாம்
     
    காலை முதல் இரவு வரை தங்கி இருந்து பயிற்சி

3.  பயிற்றுனர்களுக்கான பஇற்சி முகாம் 

     ஒரு வாரம் தினமும் காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை

கட்டணங்கள் இதர விபரங்களுக்கு சுய முகவடியிட்ட அஞ்சல் உறையுடன் எழுதுக

இனி

39, அழகிரிசாமி  சாலை,

கலஞர் கருணாநிதி நகர்

சென்னை- 600 078

அலைபேசி ள்ப் 94440 24947
.


0 comments:

Post a Comment

Kindly post a comment.