Monday, April 16, 2012

1514 பேரை பலிவாங்கி 100 ஆண்டுகள் ஆன மிதக்கும் சொர்க்கம்



1514 பேரைப் பலி கொண்ட டைடானிக் கப்பல் மூழ்கி இன்றுடன் நூறாண்டுகள் ஆகின்றன. அக்கப்பல் மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. 1912 ஆம் நாள் ஏப்ரல் பத்தாம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து பயணத்தை துவக்கியது. செல்லத் திட்டமிட்டிருந்த இடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத் துறைமுகம்.

 செர்பர்க், பிரான்ஸ், மற்றும் அயர்லாந்தில் உள்ள குவின்ஸ் டவுன் வழியாக நியூயார்க் சென்றடையத் திட்டமிட்டிருந்தது. 28 நாடுகளைச் சேர்ந்த 1296 பேர் பயணித்தனர். 416 பேர் பெண்கள். 708 பேர் ஆண்கள். 112 பேர் குழந்தைகள். புது மணத் தம்பதிகள் 13 பேர். கப்பல் ஊழியர்கள் 918 பேர். இவ்ர்களில் 7 கண்காணிப்பு அதிகாரிகள். 23 பெண் என்ஜினியர்கள். 28 ஆண் என்ஜினியர்கள் . 289 பாய்லர் மற்றும் என்ஜின் மேன்கள், 491 சர்வீஸ் ஊழியர்கள் 7 தச்சு தொழிலாளர்களும் அடங்குவர்.

பயணித்து நான்கு நாட்கள் கழித்து ஏப்ரல் 14 ஆம் நாள் கப்பலில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கத் துவங்கியது. 711 பேர் மட்டும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். ஏப்ரல் 15 ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்கு முழுவதுமாக மூழ்கியது. 1514 பேர் பலியாகினர். இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தக் கப்பல் மூழ்கியடைந்த இடத்திற்குச் சென்று அஞ்சலி செய்ய பலியானவர்களின் குடும்பத்தினர் உட்பட 1514 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இடையில் ஒரு செய்தி.

அதே போன்று ஜெனரல் டயரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான ஜாலியன் வாலா பாக் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்ததும் ஓர், ஏப்ரல் 13 தேதிதான். பஞ்சாபில் எத்தகைய அஞ்சலி நடை பெற்றது என்பதை நாம் அறியோம். மேலும் ஒரு செய்தி. முள்ளி வாய்க்கால் கொலைக் களமானதும் ஏப்ரல் 13-ல்தான். மானுடம் வாழட்டும்!

 பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து விட இயலும். இங்கிருக்கும் சிலர் வாய் திறந்தால் போதும் சிக்கல்கள் சில நொடிகளில் தீர்க்கப்பட்டு விடும். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவோமோ இந்த நாட்டினில்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.