Monday, April 16, 2012

கடைசி நேரத்தில் கலைஞரும் ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார்,1 திமுகவும் இலங்கை செல்லவில்லை!

சென்னை :லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 14 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழு இன்று இலங்கை செல்கிறது. இக்குழு, அங்குள்ள தமிழர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இந்த எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க., இடம் பெறாது என, கடைசி நேரத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதனால், தமிழகத்திலிருந்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் நான்கு பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ஒருவர் என, ஐந்து பேர் மட்டுமே இடம் பெறுகின்றனர்.

கடந்த, 2009ம் ஆண்டு, இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த உச்சகட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்த பின், அங்குள்ள தமிழர்கள், முள்வேலி என்ற ஊரில் அடைக்கப்பட்டனர். போரில் அழிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.

தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்களை மறுகுடியமர்த்தும் திட்டத்திற்காகவும், மத்திய அரசு, 500 கோடி ரூபாய் நிதியுதவியை இலங்கை அரசுக்கு வழங்கியது. இதன் மூலம் தமிழர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தவிரவும், மத்திய அரசு கருத்தின்படி, தமிழர்களின் வாழ்வாதாரம் சிறந்து அவர்கள் கவுரவமான குடியுரிமையுடன் வாழ, அதிகாரப் பகிர்வு திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க முயலும் என்று தற்போது கூறப்படுகிறது. ஆனால், அதற்கான அறிகுறியைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே தன் கருத்துக்களில் தெரிவிக்கவில்லை.

எம்.பி.,க்கள் குழு :மத்திய அரசு வழங்கிய நிதி, இலங்கை அரசால் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை பார்வையிட, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 14 பேர் கொண்ட, எம்.பி.,க்கள் குழு இன்று இலங்கை செல்கிறது.தமிழக அரசியல் கட்சிகளில், அ.தி.மு.க., சார்பில் ரவி பெர்னாட், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


ஆனால்,அக்குழுவிலிருந்து, அ.தி.மு.க., எம்.பி., விலகிக்  ள்வதாக முதல்வர்ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தார். இக்குழுவால் பயன் ஏதும் இல்லை என்பதும், முதல்வர் வாதமாகும்.எம்.பி.,க்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலில், போரில்பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து, அவர்களின் நிலைமைகளை அறியும்

நிகழ்ச்சி இடம் பெறவில்லை. இலங்கை அரசை திருப்திப்படுத்தும் வகையில், நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷேவுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை, எம்.பி.,க்கள் குழு இலங்கை சென்ற போது, ராஜபக்ஷேவுடன் விருந்தில் பங்கேற்று, அவரிடம் பரிசுப் பொருள் பெற்றுத் திரும்பியது போல் தான் இப்போதைய பயணத் திட்டமும் உள்ளது என்று கூறி, இலங்கைக்கு எம்.பி.,க்கள் செல்லும் பயணத்தை, அ.தி.மு.க., புறக்கணித்தது.

தி.மு.க., விலகல்:முதல்வர் ஜெ.,யின் அறிவிப்புக்குப் பின், தி.மு.க.,வும், இலங்கைக்கு எம்.பி.,க்கள் குழு செல்லும் திட்டத்திலிருந்து விலகியுள்ளது. எம்.பி.,க்கள் சுற்றுப் பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்ற காரணத்தை சுட்டிக் காட்டி, இலங்கை பயணத்தை புறக்கணிக்கும் முடிவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார்.கடைசி நேரத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., எம்.பி.,க்கள் புறக்கணிப்பு முடிவு எடுத்துள்ளதால், காங்கிரசிலிருந்து, சித்தன், கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர் ஆகிய, நான்கு பேரும், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் என, ஐந்து தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே இலங்கைக்கு செல்கின்றனர். மற்ற ஒன்பது எம்.பி.,க்களில் மூன்று பேர், வட மாநில எம்.பி.,க்கள். தமிழர்களுக்கு நிவாரணம் தரவும், அவர்களுக்கு கவுரவமான வாழ்வு தரவும் இக்குழு முயற்சிகள் பலன் தராது, வெறும்கண்துடைப்பாக இருக்கும் என்ற அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. இது, இலங்கையுடன், இந்தியா கொண்டிருக்கும் நட்புறவைக் காட்ட மேற்கொள்ளும் மத்திய அரசின் முயற்சி என்பதால், பலன் ஏதுமின்றி பிசுபிசுக்கும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

திட்டமிட்டதா தி.மு.க.,:சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பார்லிமென்ட் குழு இலங்கைக்கு செல்லும் போது, திட்டமிட்டபடி தி.மு.க., எம்.பி.,யும் செல்கிறாரா?திட்டமிட்டபடி என்று கேள்வி கேட்பதே தவறு; அப்படி தி.மு.க., திட்டமிடவில்லை.

பயணம் மேற்கொண்டால், இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு முன்னேறும்? எப்படிபட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே, அந்தப் பயணத்தை, தி.மு.க.,வின் சார்பில் யாரும் மேற்கொள்ளவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார். 

பயணங்கள் எதுவும் இல்லாமலேயே  திருமதி சோனியாஜி இங்கிருந்து ஓர் குரல் கொடுத்தால்  போதுமே நிகழ்ச்சி  தலைகீழாகிவிடுமே  இன்னும்  ஏ  மெள்னம்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.