Friday, March 23, 2012

தாண்டவபுரம்+S.M.S.. எம்டன் 22-09-1914 + அருந்தவப் பன்றி சுப்பிரமணிய பாரதி + கோச்ச்சடையன் தீர்வுகள் யாவை?

தாண்டவபுரம் :- நாவல் ( September 2011 ) - சோலை சுந்தரப் பெருமாள்

\காவனூர் சோலை சுந்தரப் பெருமாள் , இந்த நாவலை எழுதுவதற்கான காரணத்தையும் இப்பொழுது எழுதவேண்டியதன் அவசியத்தையும் குறித்து 31 பக்கங்களில் முன்னுரை எழுதியுள்ளார்.

 சுமார் 1500-2000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெய்யான வரலாற்றின் மீது கற்பனைக் குதிரையில் சவாரி செய்து 700 பக்கங்களில் நர்த்தனம் ஆடியுள்ளார். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள,

சோலை சுந்தரப் பெருமாள். திருஞான சம்பந்தரின் கால, சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்த நாவல். சரித்திர ஆராய்ச்சியில் தாராளமாக இறங்கட்டும். ஆதாரங்களைக் காட்ட வேண்டுமே, தயாரா?

புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் எந்தவிதமான ஆதார நூல்களையும் பட்டியலிட்டுக் காட்டவில்லையே ஏன்? படைப்பாளிக்கு ஒற்றெழுத்துக்களை எங்கு பயன் படுத்த வேண்டும் அல்லது எங்கு பயன் படுத்தக் கூடாது என்பதே தெரியவில்லை.

 சோலை சுந்தரப் பெருமாள் என்பதே சரி. ( ப் சேர்க்கப்படவில்லை. ) ஆளுடைய பிள்ளை என்பதே சரி. ( ஆனால் இங்கு ப் தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ) நனி பள்ளி என்பதே சரி. ( ஆனால் இங்கே ப் தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ) ஓரிரு பக்கங்களில் கிடைத்த தவறுகள் இவை.

புத்தகம் முழுவதும் தேடினால் ? தாண்டவபுரம் நூல் கோவையில் எரியூட்டப் பட்டிருக்கின்றது. 5000 பேர் பங்கேற்ற கூட்டத்தில்! இருவர் சிறையில் இருப்பதாகவும் தகவல். இந்து மதப் பற்றாளர்களைத் தூண்டிவிடும் கருத்துக்கள் அந்த நூலில் இருப்பதாகக் குற்றச்சாட்டு. சென்னை மயிலையிலும் எதிர்ப்புக் கூட்டம். மடாதிபதிகளும் பங்கேற்று ஆவேசப் பேச்சு. தீர்வு என்ன?

 எஸ். எம்.எஸ். எம்டன் 22-09- 1914 :- வரலாற்றுப் புதினம்- திவாகர் எஸ்.எம்.எஸ். எம்டன் என்றொரு நாவல். எழுதியவர், திவாகர். விசாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றார். மேற்படி நாவலில் அந்தக் கப்பலில் செண்பகராமன் பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரர் பயணிக்கவும் இல்லை. சென்னையில் குண்டு மழை பொழியவும் இல்லை, என்று கட்டியங் கூறுகின்றார். இதனைப் பலர் பாராட்டவும் செய்கின்றனர். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு காசையும் அள்ளிக்கொண்டிருக்கின்றது தீர்வு என்ன?

அருந்தவப் பன்றி சுப்பிரமணிய பாரதி :-

 சென்னை-93 சாலிக்கிராமத்தில் உள்ள THE ROOT PUBLICATIONS வெளியிட்டுள்ள பாரதி பற்றிய புத்தகத்தின் பெயர். தீர்வு என்ன?  

கோச்சடையன்- என்பதே சரியான பெயரும் உச்சரிப்பும் சிவனைப் பற்றிய படமோ அல்லது சிவனின் பெயரைக் கொண்ட அரசனைப் பற்றிய படமோ கோச்சடையன் என்பதே சரியான பெயர். ரஜனியின் கவனத்திற்கு இது போய்ச் சேருமா? தீர்வு என்ன?

தாண்டவ புரத்திற்கு எதிர்ப்புக் கிளம்பிய முதலிடம், சஙகரன் கோவில். அங்குள்ளது சுவாமி சந்நிதித் தெரு. சுவாமி சந்நிதித் தெருவில் உள்ளது மகாத்மா காந்தி மண்டபம். காந்தி மண்டபத்தில் பொது மக்கள் முன்னிலையில் திருஞான சம்பந்தர் குறித்து அவதூறான செய்திகளை எழுதிய காவலூர் சோலை சுந்தரப் பெருமாள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தீரன் செண்பகராமன் பிள்ளையை அவமதிப்புக்குள்ளாக்கிய எஸ். எம். எஸ். எம்டன் 20-09-2012 வரலாற்றுப் புதினம் தடை செய்யப் படவேண்டும்.

இவற்றைப் படிப்போர் என்ன செய்யப்  போகின்றோம்?- தொடரும்

0 comments:

Post a Comment

Kindly post a comment.