Wednesday, March 7, 2012

குசராத்து தோலவீராவில் கிட்டிய பெயர் பலகை.


seshadri sridharan sseshadri69@gmail.com டு
http://www.tamilheritage.org/* <http://www.tamilheritage.org/>*
mintamil groups.google.com/group/minTamil - தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் செயல்படும் ஒரு கூகிள் குழுமம் சுமார் ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றது. ஆர்வலர் அணுகலாம்.

nanda  pannia nan nanava.jpg
சக்கரம் - ந ஒலி, நெடுங்கோடு - ண் ஒலி, நெடுங்கோட்டின் மேல் செவ்வகம் - ட ஒலி, அரசு இலை - ப ஒலி, அதன் கீழ் நெடுங் கோடு - ண் ஒலி, அரசிலையை ஊடுருவிய கோடு - ண் ஒலி , சக்கரம் - ன் ஒலி, Diamond - ந ஒலி, X - ன் ஒலி, ஒரு நெடுங்கோடு - ந ஒலி, சக்கரம் - ன் ஒலி, மீண்டும் சக்கரம் - ன ஒலி, வாய் பிளந்த கிடுக்கி வடிவு - வ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நண்ட பண்ணன் நன் நன்னவ என்பது. இதை என செப்பமாகப் படிக்கலாம் நண்டன் பண்ணன் நன் நன்னவன் என ஈற்றில் னகர மெய் இட்டு செப்பமாகப் படிக்கலாம். மன்னன் மன்னவன் எனவும் குறிக்கப்படுவது போல் நன்னன் நன்னவன் என்றும் சில போது குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வரும் ஆப்கான் முத்திரைப் பெயர் ஒரு சான்று.
nanava.jpg

மாட்டை வேல் கொண்டு மாந்தன் ஒருவன் தாக்கும் இந்த முத்திரை ஆப்கானித்தானில் கிட்டியது. முதல் நீள் கட்டம் - ந ஒலி, அடுத்து அதே கட்டம் - ன் ஒலி, மேலே இரு சிறு இணை கோடுகள் - அ ஒலி, வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நன்அவ என்பது. இதை நன்னவன் என னகர மெய் இட்டு படிக்கலாம். இதுவும் தோலவீர பெயர் பலகை போல் நன்னன் நன்னவன் என ஒலிக்கப்பட்டதற்கு ஒரு சான்று.
5,500 indus script pottery.jpg
அரப்பாவில் kenoyer அணியால் 1999 முதல் 2004 வரை நிகழ்த்தப்பட்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட சிந்து எழுத்துகள் கொண்ட மட்கலன். kenoyer கடந்த ஆண்டு நிகழ்த்திய உரையில் அரப்பாவின் காலம் கி.மு 3,300 ஆண்டுகள் என்ற தமது முந்தைய காலக் கணிப்பு மேலும் 400 ஆண்டுகள் முற்போவதாகச் சொல்லினார். அதன்படி இந்த மட்கலன் 5,700 ஆண்டுகள் பழமையது எனலாம். கவிழ்ந்த ப வடிவம் - ப ஒலி, அதன் விரிந்த ஆங்கில M - ண் ஒலி, கீழே டைமண்ட் - ண ஒலி, ஆங்கில Y போன்ற எழுத்து - அ ஒலி, கீழே ஆங்கில V - ண் ஒலி, மேலே சிறு கோடு - அ ஒலி, புள்ளி உள்ள டைமண்ட் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பண்ண அண்அன் என்பது. பண்ண அண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். இந்த மட்கலன் சிந்து எழுத்து 5,700 ஆண்டுகள் பழைமையன எனக் கொள்வதற்கு சான்று.
evvi aranan.jpg
ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு - எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி - வி ஒலி, ஒஉ சிறு கோடு - அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் - ற ஒலி, நண்டு போன்ற உருவில் மேல் நான்கு கோடுகள் - ண ஒலி, கீழ் நான்கு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் எவி அறணன் என்பது. இதை எவ்வி அறணன் என வகர மெய் கூட்டி படிக்கலாம். அகநானூறில் இருந்து ஒரு காட்டு:
திதியன் அன்னி ஆகியோரிடையே போர். எவ்வி அன்னியைத் தடுத்தான். அன்னி எவ்வியின் சொல்லைக் கேளாமல் போரிட்டு மாண்டான், காவிரி வைப்பில் எவ்வி நாடு இருந்தது. அங்குப் பாண்மகள் உப்புக்கு விலையாக நெல்லை வாங்காமல் முத்தை வாங்குவாள். \நக்கீரர் \ அகம் 126.
ev kanaya.jpg
ஏற்றத்தின் பளு கல் - எ ஒலி, வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி, இருபுறமும் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, ஐந்து கோடுகள் உள்ள மணை - ய ஒலி, நான்கு கோடுகள் உள்ள சீப்பு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் எவ காயன் என்பது. இதை வகர மெய் சேர்த்து எவ்வ காயன் என செப்பமாகப் படிக்கலாம். எவ்வி என்ற ஈகர ஈற்று பெயர் அன் ஈறு பெற்று எவ்வன் என்றும் வழங்கும். காயன் குளம் என்ற ஊர் கேரளத்தில் உள்ளது.
tik.jpg
ஊடுருவும் கோடுள்ள ஆங்கில D - தி ஒலி, ஆங்கில U வடிவு - க் ஒலி. இதை அன் ஈறு இட்டு திக்அன் > திக்கன் என படிக்கலாம். திக்கண்ணா (திக்க + அண்ணா) என்ற தெலுங்கு புலவர் தெலுங்கில் இராமாயணத்தின் ஒரு பகுதியை இயற்றினார். அவர் பெயரிலும் இந்த திக் உள்ளது. இப் பெயர் இந்த முத்திரையில் இடம் பெறுவது சிந்து எழுத்தை பேரா. இரா. மதிவாணர் மிகச் சரியாகப் படித்து உள்ளார் என்பதற்கு ஒரு சான்று.
Tikkana (1205-1288) was born into a family of Shaivite Brahmin litterateurs during the Golden Age of Kakatiya Empire. He was the second poet of “Trinity of Poets (Kavi Trayamu)” that translated “Mahabharamtamu” into Telugu over a period of several centuries. Nannaya Bhattaraka was the first one and was also known as the First Poet (Aadi Kavi) who translated only 2.5 chapters- Aadi, Sabha and half of Aranya Parvams (chapters or books). Tikkana translated last 15 chapters, but didn’t touch the half-finished Aranya Parvamu. Telugu people had to wait for more than a century for the remaining half of the third chapter to be translated by Errana.
M5065.jpg
கூரை போன்ற கவிழ்ந்த ஆங்கில V - ம ஒலி, மூன்று கோடுள்ள ஆங்கில E - த் ஒலி, '/ - அ ஒலி. ஈற்றில் னகர மெய் இட்டு மத்அன் > மத்தன் என படிக்கலாம். திரை நகரை ஆண்ட போனீசிய மன்னன் Mattan I 840 - 832 BC. இகர ஈறு பெற்று மத்தி எனவும் வரும். அகநானூற்றில் ஒரு காட்டு அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான்.
சேசாத்திரி
2011/9/5 seshadri sridharan <sseshadri69@gmail.com>
antayyan kunga attayyan.jpg
சிறு கோடு - அ ஒலி, சக்கரம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தில் ஐந்து கோடுகள் - ய ஒலி, செவ்வகத்தின் மேல் நெடுங் கோடு - ன், இரு புறம் சூலம் உள்ள ஆங்கில U வடிவம் - கூ ஒலி, நாமம் - ங (ன்க) ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தில் உள்ளே கீழ் ஐந்து கோடுகள் - ய் ஒலி, அவ்வாறே மேலை ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டய கூஙடய்ய என்பது. இதை அண்டய்யன் கூங்கட்டய்யன் என ஈற்றில் னகர மெய் இட்டு படிக்க வேண்டும். கூங்கன் + அட்டய்யன் என பிரித்துப்படித்தல் தெளிவாக விளங்கும்.
manan  ka nanan.jpg
கூரை வடிவில் முக்கோணம் - ம ஒலி, கூரையின் கீழ் நான்கு கோடுகள் - ன் ஒலி, கிடை மட்டக் இணை கோடுகள் - ன ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, கீழ் அடுக்கில் நான்கு கோடுகள் - ந ஒலி, இடையில் நான்கு கோடுகள் -- ன் ஒலி, மேல் நான்கு கோடுகள் - ன ஒலி. இதில் உள்ள ஒலிகள் மன்ன கா நன்ன என்பது. ஈறறில் னகர மெய் இட்டு மன்னன் கா நன்னன் என படிக்கலாம். மன்னார், மன்னர் ஜவஹர் போன்ற பெயர் கொண்டோர் இனறும் உண்டு. மன்னன் என்ற பெயர் குடியை வீடு போல் எழுத்தோவியமாய் வடிக்கப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது.
kaunta ati can  caman.jpg
இருபுறம் கோடுகள் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, சூலம் - உ ஒலி, செவ்வகத்தின் மேல் நெடுங் கோடு -- ண ஒலி, செவ்வகம் - ட ஒலி, ஆள் உரு - அ ஒலி, ஆள் கையில் வில்அம்பு (D) - தி ஒலி, செதில் உள்ள மீன் - சா ஒலி, மீனுள் சிறு கோடு - ன் ஒலி, மீண்டும் செதில் உள்ள மீன் - சா ஒலி, அதன் மேல் கூரை போன்ற முக்கோணம் - ம் ஒலி, நடுவில் இரு இணை கோடுகள் - அ ஒலி, கீழ் நோக்கிய விசிறி - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் கா உண்ட அதி சாண் சாம்அன் என்பது. இதை கா உண்டன் அதியன் சாணன் சாமன் என அன் ஈறு இட்டு படிக்கலாம். இடத்தேவை கருதி அன் ஈறு விடப்பட்டுள்ளது.
ma tancan.jpg
கீழ்க்கோடு இட்ட முக்கோணம் - மா ஒலி, மூன்று நெடுங் கோடுகள் - த ஒலி, நாமம் - ங(ன்க) ஒலி, ஆள் உட்கார்ந்த நிலை - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மா தங்கன் என்பது. பொரிய நாகரிகத்தில் தங்கன் என்றால் வேந்தன் என பொருள் கொள்கின்றனர். மா வளத்தான், மா வளவன் ஆகியன் சேரர் பெயர்கள். மா எரிஅக் என்பது ஒரு கொரிய வேந்தன் பெயர்.
kava ceya akkan.jpg
இருபுறம் கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, தேளின் முன் புறம் - வ ஒலி, நாற்திசைக் கோடுகள் உள்ள மீன் -- சே ஒலி, ஆள் உரு - அ ஒலி, ஆள் கையில் U - க ஒலி, கொக்கி போன்ற வளைவு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காவ சே அகன் என்பது. அன் ஈறு சேர்த்து காவன் சேயன் அக்கன் அல்லது அகன் என்றே படிக்கலாம். காவன் ஒரு பழந்தமிழ்ப் பெயர். காவனூர்-புதுச்சேரி, பரமக்குடி அருகே உள்ளது எஸ். காவனூர் கிராமம். வடலூர் வட்டத்தில் 2010ல் ஏப்ரல் கிட்டிய பிராமி பானை ஓட்டில் அதியகன் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அதி+அக்கன் என இதை பிரிக்க வேண்டும். இந்த முத்திரை வாசிப்பும் அதற்கான ஊர் பெயர், பானை ஓட்டுச் சான்றும் பேரா.. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை மிகச் சரியாக படித்துள்ளார் எனபதைக் காட்டப் போதுமானது.
manan ce aranangattan.jpg
கீழ்க்கோடுள்ள முக்கோணம் - மா ஒலி, சதுரங்க ஆட்ட Pan - ன ஒலி, கொம்பு - ன் ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி, '/ - அ ஒலி, பிடி உள்ள நான்கு கோடுகள் - ற ஒலி, சாய்வான நெடுங் கோடு - ன ஒலி, கோட்டை ஒட்டி உள்ள தேன்கூடு - ங(ன்க) ஒலி, செவ்வகம் - ட ஒலி செவ்வகத்தில் கீழ் மூன்று கோடுகள் - த் ஒலி, மேல் மூன்று கோடுகள் - த ஒலி, ரு நெடுங் கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மானன் சே அறனங்க டத்தன் என்பது.. சே என்பது சேயன் என்பதன் சுருக்கம். டத்தனில் அகரத்தை முன்னே இட்டு அட்டத்தன் என படிக்கலாம். இதை மானன் சே அறனங்கட்டத்தன் என படிக்கலாம். மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மதுரை - கொட்டாம்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள அட்டத்தூர் இந்த வாசிப்பு சரி என்பதற்கு சான்றாக இன்றும் திகழ்கின்றது.
kuka ce kalan ka.jpg
ஆங்கில V இல் இரு முனையிலும் சூலம் - கூ ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, வாத்து - ல ஒலி, வட்டம் - ன் ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, அதன் மேல் தீவட்டி - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் கூ கா சே காலன் கான் என்பது. இன்றைய முதல் (Initial) போன்றதாக கூ கா சே ஒலிகளைக் கொள்ளலாம்.
சேசாத்திரி

2011/8/28 seshadri sridharan @gmail.com>

பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளைத் துலக்கமாகப் படித்துக் காட்டி உள்ளார் என்பதற்கு ஒரு சிறந்த சான்று அவர் தி என்ற எழுத்தை இனங்கண்டது தான் என்றால் அது தவறு அல்ல. தமிழுக்கே உரிய பெயர்களான திங்களன், திதியன் ஆகிய பெயர்கள் சிந்து முத்திரைப் பெயர்கள் இதை மெய்ப்பிக்கின்றன.
tinkalan pannappan.jpg
ஆங்கில D எழுத்தில் ஒரு சாய்வான கோடு இடுவது - தி ஒலியைக் குறிக்கும், நாமம் - ன்க ஒலி, வாத்து போன்ற பறவை உரு - ள் ஒலி, மேலே இரு சிறு கோடுகள் - அ ஒலி, மைசூர்பாகு வடிவம் - ன் ஒலி, கீழ் வரிசையில் அரசு இலை - ப ஒலி, இலையினுள் கோடுகள் - ண் ஒலி, இலைக்குக் கீழே கோடு - ண ஒலி, கவிழ்த்தாற் போன்ற ப வடிவம் - ப் ஒலி,, அதன் மேல் சிறு உருவில் விழ்ந்த ப - ப ஒலி. இதில் உள்ள ஒலிகள் தின்கள்அன் பண்ணப்ப என்பது. இதை திங்களன் பண்ணப்பன் என் செப்பமாகப் படிக்கலாம். திங்களன் என்ற பெயரோடு உள்ள சிலர் இன்றும் உள்ளனர். திங்களூர் கோபிச்செட்டிப் பாளையத்தருகேயும், திருவையாறு அருகேயும் உள்ள ஊர்கள்.
caman ampi titin.jpg
சிந்து முத்திரைகளில் எழுத்துகள் அடைப்பில் இடப்பட்டிருந்தால் உள்ளே உள்ள எழுத்துகளைத்தான் முதலில் படிக்க வேண்டும். அதன்படி இருபுறம் கோடுள்ள மீன் - சா ஒலி, அதன் மேல் கூரை வடிவு - ம ஒலி, அடைப்பாக நான்கு கோடுகள் - ன் ஒலி, ஆள் உரு - அ ஒலி, ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி, அதன் ஊடுருவிய கோட்டுடன் அரசு இலை - பி ஒலி, சாய் கோடு ஊடுருவிய ஆங்கில D வடிவு - தி ஒலி, மீண்டும் சாய் கோடு ஊடுருவிய ஆங்கில D வடிவு - தி ஒலி, ைசூர் பாகு வடிவம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் சாமன் அம்பி திதின் என்பது. திதின் வரும் னகர மெய்க்கு முன் அகரம் சேர்த்து திதிஅன் என படிக்க வேணடும். இனி, இதை சாமன் அம்பி திதியன் என படிக்கலாம். சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் தலையாளங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞசெழியனுடன் போரிட்டனர். அம்பி அம்பன் எனவும் வழங்கும். அம்பத்தன் என்ற பெயர் உடையவரின் நினைவாக சென்னையின் புறநகர் அம்பத்தூர் விளங்குகின்றது.
kaunta caman nancu.jpg
இருபுறம் இரு கோடுகளுடன் ஆங்கில U வடிவம் - கா ஒலி, சூலம் - உ ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு நெடுங் கோடு - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, இருபுறம் கோடுள்ள (செதில்) மீன் -- சா ஒலி, மீன் மேல் கூரை - ம் ஒலி, இரு சிறு கோடுகள் - அ ஒலி, இலையுடன் பூ - ன் ஒலி, பிளந்த கிடுக்கியன் மேல் ஓரு சிறு கோடு - அ ஒலி, ஆற்றோட்டம் போல் நான்கு கீறல்கள் - ற ஒலி, வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி, காற்றில் பறக்கும் விதைப் பஞ்சு வடிவில் கிடைமட்டக் கோடு - ன் ஒலி, ஆங்கில U வடிவுடன் கூடிய நாமம் - கு ஒலி. இதில் உள்ள ஒலிகள் கா உண்ட சாம்அன் அறவன்கு என்பது. இதை கா உண்ட சாமன் அறவங்கு என செப்பமாகப் படிக்கலாம். கா (Qaa) என்ற பெயருடன் ஒரு எகிபது மன்னன் 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். கா அப்பர் என்பது ஒரு எகிபது குடிமகன் பெயர்.
m297a a ka ceppan kannan.jpg
இந்த நட்சத்திர மீன் முத்திரையில் எழுத்துகள் கீழே இடமிருந்து வலமாக மேல் நோக்கி ஏறியபடி எழுதப்பட்டு உள்ளன. ஆள் உரு - அ ஒலி, இருபுறம இரு கோடுள்ள ஆங்கில U வடிவு - கா ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி, கவிழ்தாற் போன்ற ப வடிவு - ப் ஒலி, அதன் மேல் கவிழந்த ஒரு சிறு ப - ப ஒலி, ஆங்கில U வடிவம் - க ஒலி, U வடிவின் மேல் மூன்று கோடுகள் - த் ஒலி, இணையான ஒரு சிறு கோடுகள் - அ ஒலி, தினைக் கதிர் - ஒலி. இதில் உள்ள ஒலிகள் கா சேப்ப கத்அன் என்பது. இதை அ கா சேப்ப கத்தன் என செப்பமாகப் படிக்கலாம். டாக்டர் சேப்பன் அவர்கள்" உணர்வு" என்ற மாத இதழை நடத்துகிறார். கத்தப்பட்டி(கத்தன்+பட்டி) என்ற ஊர் மதுரை அருகே உள்ளது. சிந்து முத்திரைப் பெயர்களை இன்றளவும் தமிழக ஒடுக்கப்பட்ட மக்களிடம் காண இயல்கினறது.


2011/8/24 seshadri sridharan <sseshadri69@gmail.com>
Dholavira Indus script Inscription
dolavira insccanan ayan.JPG
இந்த சிந்து எழுத்து பொறிப்பு கொண்ட பாறை குசராத்தின் தோலவீரா என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஐந்து எழதத்பொறிக்கப்பட்டு உள்ளன. முதல் எழுத்து செதில் உள்ள மீன் - சா ஒலி, ஒரு நெடுங்கோடு - ண ஒலி, கண் போன்ற நீள் வட்டம் - ன் ஒலி, ஒரு சிறு கோடு - அ ஒலி, ஐந்து கோடுடன் கீழ் வலிக்கப்பட்ட கோடு - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் சாணன் அய என்பது. இதை சாணன் அய்யன் என படிக்கலாம்.
ka pana acca kanta caya.jpg
இருபுறம் இரு கோடுகளுடன் ஆங்கில U வடிவம் - கா ஒலி, காம்புடன் கூடிய அரசு இலை -ப ஒலி, ஆள் உரு - அ ஒலி, மீன் உரு - ச ஒலி, இருபுறம் கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, ஆதன் மேல் ஒரு சிறு கோடு - ந் ஒலி, மூன்று நெடுங் கோடுகள் - த ஒலி.அடுத்துள்ள எழுத்துகள் தெளிவாக இல்லை. இதில் உள்ள எழுத்துகள் காபஅச காந்த என்பது.
இதை ஒற்றெழுத்துகளுடன் காப்பச்ச காந்த எனப் படிக்கலாம்.
UR Seal
URSEA-11 nan allan.jpg
இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் - நா ஒலி, கண் உரு - ண ஒலி, சிறு மேல் கோடு - அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை - ள ஒலி, இரு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அள்ளன் என படிக்கலாம்.
puyan.jpg
இது மேலை ஆசியாவில் கிட்டிய இன்னொரு ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் கொடுக்கு - பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் - ய ஒலி, வாலில் ஆள் உரு - அ ஒலி, கொடுக்கு முனையில் கண் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்கலாம். மேலை நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் puannam buannam > பூயன்னம் உய்யன்னம் என்பது. இப்பெயரில் பூயன் உள்ளதை நோக்குக.

0 comments:

Post a Comment

Kindly post a comment.