Saturday, March 31, 2012

54 ஆண்டுகள் கலைமாமணி விருதாளர்கள் தமிழ் விக்கிபீடியாவில் இணைக்கப்படும் விபரம்



கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று விக்கிபிடியா தமிழில் அழைக்கப்படுகின்றது.   நம்மில் பலர் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக
மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கின்ரோம். இந்தக் களஞ்சியத்திற்குச் செல்வத்தையும் சேமித்து வைத்திட இயலும் என்பதை உணர்த்தியது கோச்சடையன் பற்றிய அறிவிப்பாகும்.

மேற்படி திரைப்படம் வெளிவரப் போகின்றது என்ற செய்தி வெளி வந்த பின்னரே, தமிழ் விக்கி பிடியாவில் கோச்சடையன் பற்றிய தகவலும் பதிவு செய்யப்பட்டது. நன்றாகக் கவனிக்கவும், கோச்சடையன் அல்ல! கோச்சடையான் .

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்றொரு அனுபவ மொழி உண்டு. அது போல்தான் இதுவும். தெய்வத்தின்  பெயராக இருந்தாலும், அரசனின் பெயராக இருந்தாலும் நக்கீரன் தொனியில் நான் கூறிக் கொண்டிருப்பது கோச்சடையன் என்பதுதான். வருகின்ற திங்கள் 02-04-2012 அன்று இந்த வலைப்பதிவின் நகல் உள்ளது உள்ளபடி, சென்னை, இராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் உள்ள இரஜினியின்  சிறப்பு அலுவலரிடம் சேர்ப்பிக்கப்படும் நேரடியாக! ஏற்பதும் மறுப்பதும் அவர் கையில்.!

 30-01-2012-ல் தமிழ் விக்கிபிடியாவில் ஒரு தகவலைப் படித்தேன். கலைமாமணி விருதாளர்கள் 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கான பட்டியல்  சோதரி பார்வதி என்ற பயனரால் பதிவு செய்யப் பட்டிருந்தது. அதனை நிறைவு செய்வது என்று உறுதி பூண்டேன். புன்னகை வெல்ஃபேர் பவுண்டேசன் குணா உள்ளிட்ட நண்பர்கள் உதவிக்கு வந்தனர். ஒருவாறாக மார்ச் மத்தியில் விபரங்களடங்கிய சிறு நூல் கைக்கு வந்து சேர்ந்தது.

பணியும் தொடங்கியது. இதை எழுதும்பொழுது ,31-03-2012 வரை 1991-1992 வரை கலைமாமணி விருதாளர் பட்டியல் விக்கிபிடியாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.குமரி வினோத் சொன்னபடி இது வரை இணத்தோர் பட்டியலையும் எனது வலைப் பூவில் இணைத்துள்ளேன். அவ்வப்போழுது ஆலோசனை கூறிவரும், முனைவர் மணிகண்டன், குமரி வினோத், குலசை நாகமணி, தேனி முத்துக் கமலம் புகழ் சுப்பிரமணி , ஊக்குவித்துவரும் வீ.கே.டி.பாலன், மீடியா வாய்ஸ் தலைமை நிருபர் பாலா, வல்லமை இணைய் இதழ் நிறுவனர் அண்ணா கண்ணன், ஆசிரியர் பவள சங்கரி, யாளி நாவலின் ஆசிரியர் மணி தணிகை அரசு ஆகியோருக்கும், சிந்திக்கத் தூண்டிய  சேலம் முனைவர் அன்புச் சோதரி பார்வதிக்கும் நெஞார்ந்த நன்றி.


கலைமாமணி விருது 1954 முதல் கொடுக்கப்பட்டு வருகின்றது ஆனால் 2008, 2009, 2010 மூன்று ஆண்டுகள் விருது பெற்றோர் மட்டுமே விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ளது. விக்கி பீடியாவில் 54 ஆண்டுகள் விருது பெற்றவர்கள் பெயர் இடம்பெறாமைக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.


அன்று எழுதியது:-

ஏனெனில், தொண்டுளங்கொண்ட, சேவை மனப்பான்மை உடையோரால் தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களது ஓய்வு நேரத்தில் விக்கிபீடியா எழுதப்படுகின்றது.இக்குறையை நீக்கிட விக்கிபீடியா எழுதுவோர் இதிலும் கவனம் செலுத்தினால் கலைமாமணி விருது பெற்றோரின் சரியான பட்டியல் 1954லிலிருந்து பிழையின்றிஆவணமாக்கப்படும் வருங் காலத்தலை முறைக்கு!

அண்மையில் பதிவு செய்யப்பட்ட கலைமாமணி விருதாளர்கள்;-

1959 - 1960

    வி.சி.கோபாலரத்தினம் - தொழில் முறையில்லாத நாடக நடிகர்
    கே.சுப்பிரமணியம் - திரைப்பட இய்க்குநர்
    டி.எஸ்.பாலையா - திரைப்பட நடிகர்
    டி.ஆர்.இராஜகுமாரி - திரைப்பட நடிகை

[தொகு] 1960 - 1961

    எப்.ஜி. நடேசய்யர் - தொழில் முறையில்லாத நாடக நடிகர்
    டி.எஸ்.திரௌபதி - நாடக நடிகை
    பஞ்சு - திரைப்பட இயக்குநர்
    கிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்
    எம்.கே.ராதா - திரைப்பட நடிகர்
    பி. கண்ணாம்பாள் - திரைப்பட நடிகை

[தொகு] 1961 - 1962

    பாபநாசம் சிவன் - இசைப் பாடல் ஆசிரியர்
    உத்திராபதி பிள்ளை - தவில் கலைஞர்
    சி.சரஸ்வதிபாய் - கதா காலட்சேபக் கலைஞர்
    பி.எஸ்.இராமையா - நாடக ஆசிரியர்
    டி.கே. முத்துசாமி - நாடகத் தயாரிப்பாளர்
    கே. ஆர். இராமசாமி - நாடக நடிகர்
    கோமதிநாயகம் பிள்ளை - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்
    டி.பி.இராஜலட்சுமி - நாடக நடிகை

[தொகு] 1962 - 1963

    பி.வைத்தியலிஙம் பிள்ளை - கொன்னக்கோல் கலைஞர்
    தஞாவூர் துரையப்ப பாகவதர் - கோட்டு வாத்தியக் கலைஞர்
    திருக்கடையூர் என். சின்னையா - தவில் கலைஞர்
    டி.ஆர்.சுந்தரம் ஏ. வி.மெய்யப்பன் - திரைப்படத் தயாரிப்பாளர்
    ஒய். வி.ராவ் - திரைப்பட இயக்குநர்
    சிவாஜி வி.சி. கணேசன் - திரைப்பட நடிகர்
    இராஜா சந்திரசேகர் - திரைப்பட நடிகர்
    வி.நாகையா - திரைப்பட நடிகர்
    என்.எஸ்.கே. மதுரம் - திரைப்பட நடிகை
    எஸ்.டி.எஸ்.யோகி - திர்டைப்பட வசனகர்த்தா
    ஜிந்தன் பானர்ஜி - திரைப்பட ஒளிப்பதிவாளர்
    வி.எஸ்.இராகவன் -திரைப்பட ஒலிப்பதிவாளர் ( ரேவதி ஸ்டூடியோ )
    புளியம்பட்டி கே.சுப்பாரெட்டியார் - நாடகத் தயாரிப்பாளர்
    எம்.என். இராஜம் -நாடக நடிகை
    எஸ்.ஜே.ஆசாரியா- தொழில் முறை இல்லாத நாடக நடிகர்

[தொகு] 1963 - 1964

    மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் - இசை கலைஞர்
    மதுராஸ் பாலகிருஷ்ண அய்யர் - வயலின் கலைஞர்
    திருமுல்லைவாயில் முத்துவீருப் பிள்ளை - தவில் கலைஞர்
    ஆவுடையார் கோவில் ஹரிஹர பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்
    திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை - பரத நாட்டியத் துறை
    எம்.ஜி.இராமச்சந்திரன் - திரைப்பட நடிகர்
    எம்.வி.இராஜம்மா - திரைப்ப்ட நடிகை
    சி.என். அண்ணாத்துரை - திரைப்பட வசன கர்த்தா
    நாரண துரைக் கண்ணன் (ஜீவா) - நாடக ஆசிரியர்
    சக்தி கிருஷ்ணசாமி - நாடகத் தயாரிப்பாளர்
    கே.பி. கேசவன் - நாடக நடிகர்
    ஜி.சகுந்தலா - நாடக நடிகை
    ஈ.கிருஷ்ணையா - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்
    முருகதாஸ் என்ற முத்துசாமி ஐயர் - திரைப்பட இயக்குநர்

[தொகு] 1964 - 1965

    திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    எம்.எம். தண்டபாணி தேசிகர் - இசைக் கலைஞர்
    திருவாலங்காடு சுந்தரேச ஐயர் - வயலின் கலைஞர்
    மைலாட்டூர் சாமி அய்யர் - மிருதங்கக் கலைஞர்
    அண்ணாசாமி பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்
    கே.என். தண்டாயுதபாணி பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    எஸ்.எஸ்.முத்துக் கிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்
    டி.கே பகவதி - நாடக நடிகர்
    சி.எஸ்.கமலபதி - தொழில் முறையில்லாத நாடக நடிகர்
    எஸ்.ஆர். ஜானகி - நாடக நடிகை
    எஸ். சவுந்தரராஜ ஐயங்கார் - திரைப்படத் தயாரிப்பாளர்
    சி.ஆர் ரகுநாத் - திரைப்பட இயக்குநர்
    எஸ்.வி. சுப்பையா _ திரைப்பட நடிகர்
    அஞ்சலிதேவி - திரைப்பட நடிகை
    ஏ.பி. நாகராஜன் - திரைப்பட வசனகர்த்தா

[தொகு] 1965 - 1966

    டி.கே. ரெங்காச்சாரி - இசைக் கலஞர்
    கே.ரெங்கு அய்யர் - மிருதங்கக் கலைஞர்
    செம்பனார்கோவில் தட்சிணாமூர்த்திப் பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    கும்பகோணம் தஙகவேலுப் பிள்ளை - தவில் கலைஞர்
    சுப்பிரமணிய தீட்சிதர் - ஆர்மோனியக் கலைஞர்
    செய்யூர் திருவேங்கடம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    கு.சா.கிருஷ்ணமூர்த்தி - நாடக ஆசிரியர்
    யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை - நாடகத் தயாரிப்பாளர்
    என். என். கண்ணப்பா - நாடக நடிகர்
    டாக்டர்.வி.இராமமூர்த்தி - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்
    பண்டரிபாய் - நாடக நடிகை
    ஏ.எல்.சீனிவாசன் - திரைப்படத் தயாரிப்பாளர்
    பி.புல்லையா - திரைப்பட இயக்குநர்
    டி.ஆர்.இராமச்சந்திரன் - திரைப்பட நடிகர்
    பத்மினி இராமச்சந்திரன் - திரைப்பட நடிகை
    ஏ.டி. கிருஷ்ணசாமி - திரைப்பட வசனகர்த்தா
    எஸ். வி. வெங்கட்ராமன் - திரைப்பட இசை அமைப்பாளர்

[தொகு] 1966 - 1967

    கீவளுர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - இசைப்பாடல் ஆசிரியர்
    சாத்தூர் ஏ.ஜீ. சுப்பிரமணியம் - இசைக் கலைஞர்
    தின்னியம் வெங்கட்ராமையர் - மிருதங்கக் கலைஞர்
    டி.எஸ். வில்வாத்திரி ஐயர் - கடம் கலைஞர்
    கோமதி சங்கர ஐயர் - வீணைக் கலைஞர்
    எச். ராமச்சந்திர சாஸ்திரி - புல்லாங்குழல் கலைஞர்
    ஏ. நாராயண ஐயர் - கோட்டு வாத்தியக் கலைஞர்
    கும்பகோணம் எஸ். வாதிராஜ பாகவதர் - கதா காலசேபக் கலைஞர்
    அரு.இராமநாதன் - நாடக ஆசிரியர்
    பி.டி,சம்பந்தம் - நாடகத் தயாரிப்பாளர்
    என்.எஸ். நடராஜன் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    ஹேமலதா - நாடக நடிகை
    பி.ஆர் பந்தலு - திரைப்படத் தயாரிப்பாளர்
    எம்.வி.இராமன் - திரைப்பட இயக்குநர்
    ஜெமினி ஆர்.கணேசன் - திரைப்பட நடிகர்
    சாவித்திரி கணேஷ் - திரைப்பட நடிகை
    மு. கருணாநிதி - திரைப்பட வசனகர்த்தா
    உடுமலை நாராயண கவி - திரைப்படப் பாடலாசிரியர்
    ஜி. கோவிந்தராஜுலு நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்

[தொகு] 1967 - 1968

    தவத்திரு. சுத்தானந்த பாரதியார் - இசைப்பாடல் ஆசிரியர்
    குன்னக்குடி வெங்கடராமையர் - இசைக் கலைஞர்
    வரகூர் முத்துசாமி அய்யர் - வயலின் கலைஞர்
    காரைக்குடி முத்து ஐயர் - மிருதங்கக் கலைஞர்
    சேலம் கே.எல்.ரெங்கதாஸ் - புல்லாங்குழல் கலைஞர்
    சாவித்திரி அம்மாள் - கோட்டு வாத்தியக் கலைஞர்
    இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    திருமுருக கிருபானந்த வாரியார் - கதா காலட்சேபக் கலைஞர்
    தி. ஜானகிராமன் - நாடக ஆசிரியர்
    தேசியகவி ராஜா சண்முக தாஸ் - நாடகப் பாடலாசிரியர்
    ஏ.எம். மருதப்பா - நாடகத் தயாரிப்பாளர்
    எம்.என். நம்பியார் - நாடக நடிகர்
    ஒய். ஜி.பார்த்தசாரதி - தொழில் முறை அல்லாத நடிகர்
    டி.ஏ.ஜெயலட்சுமி - நாடக நடிகை
    ஏ.இராமையா - திரைப்படத் தயாரிப்பாளர்
    ப. நீலகண்டன் - திரைப்பட இயக்குநர்
    எஸ்.எஸ் இராஜேந்திரன் - திரைப்பட நடிகர்
    விஜயகுமாரி - திரைப்பட நடிகை
    கொத்தமங்கலம் சுப்பு - திரைப்பட வசனகர்த்தா
    கம்பதாசன் - திரைப்படப் பாடலாசிரியர்
    ஆர். சுதர்சனம் - திரைப்பட இசையமைப்பாளர்

[தொகு] 1968 - 1969

    ம. ப. பெரியசாமித்தூரன் - இசைப்பாடல் ஆசிரியர்
    ஆலத்தூர் எஸ். சீனிவாச ஐயர் - இசைக் கலைஞர்
    மாயூரம் கோவிந்தராஜ பிள்ளை - வயலின் கலைஞர்
    ஆலங்குடி இராமச்சந்திரன் - கடம் கலைஞர்
    மாயூரம் கே.வி.இராஜாராம் ஐயர் - புல்லாங்குழல் கலைஞர்
    மதுரை டி.வி. சீனிவாச ஐயங்கார் - ஜலதரங்கக் கலைஞர்
    சி.பி.நாராயணசாமிப் பிள்ளை - தவில் கலைஞர்
    ந. இராதாகிருஷ்ண நாயுடு - கிளாரினெட் கலைஞர்
    கும்பகோணம் கே.பானுமதி - பரத நாட்டியக் கலைஞர்
    சலங்கை ப.கண்ணன் - நாடக ஆசிரியர்
    இசக்கிமுத்து வாத்தியார் - நாடகப் பாடலாசிரியர்
    சி. கிருஷ்ணையா - நாடகத் தயாரிப்பாளர்
    டி.வி. நாராயணசாமி - நாடக நடிகர்
    டி.எஸ். கோபாலசாமி - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    என்.ஆர். சாந்தினி - நாடக நடிகை
    எஸ்.எம். ஸ்ரீரமுலு நாயுடு - திரைப்படத் தயாரிப்பாளர்
    ஏ. பீம்சிங் - திரைப்பட இயக்குநர்
    கே.ஏ. தங்கவேலு - திரைப்பட நடிகர்
    வைஜயந்திமாலா - திரைப்பட நடிகை
    ஏ.கே.வேலன் - திரைப்பட வசனகர்த்தா
    கா.மு.ஷெரிப் - திரைப்படப் பாடலாசிரியர்
    எஸ்.எம்.சுப்பையா நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்
    எஸ்.வி. சுந்தரம் - காவடி ஆட்டக் கலைஞர்

[தொகு] 1969 - 1970

    சுவாமி சரவணபவானந்தா - திரை இசைப் பாடல் ஆசிரியர்
    மாயூரம் எஸ்.இராஜம் - இசைக் கலைஞர்
    ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரி - வயலின் கலைஞர்
    உடுமலைப் பேட்டை ஜி. மாரிமுத்துப் பிள்ளை - கஞ்சிராக் கலைஞர்
    டி.ஆர்.நவநீதம் - புல்லாங்குழல் கலைஞர்
    சிதம்பரம் எஸ். இராதாகிருஷ்ணபிள்ளை - நாதசுரக் கலைஞர்
    சி.பி.நாராயணசாமிப் பிள்ளை - தவில் கலைஞர்
    ஏ.கே.சி.வேணுகோபால் - கிளாரினெட் கலைஞர்
    கே.திரிபுர சுந்தரி - கதா கலாட்சேபக் கலைஞர்
    கவி.க. அ. ஆறுமுகனார் - நாடகப் பாடலாசிரியர்
    வைரம் அருணாசலம் செட்டியார் - நாடகத் தயாரிப்பாளர்
    டி.வி.நாராயணசாமி - நாடக நடிகர்
    நாரதர் டி.சீனிவாசராவ் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    எஸ்.மைனாவதி - நாடக நடிகை
    பி.இராஜமாணிக்கம் - திரைப்படத் தயாரிப்பாளர்
    ஆ.காசிலிஙம் - திரைப்பட இயகுநர்
    கே.ஏ. தங்கவேலு - திரைப்பட நடிகர்
    சவுகார் ஜானகி - திரைப்பட நடிகை
    கா.மு.ஷெரிப் - திரைப்படப் பாடல் ஆசிரியர்
    எஸ்.எம்.எஸ். சுப்பையா நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்
    திண்டுக்கல் ஸ்ரீரங்கம் செட்டியார் -கரக ஆட்டக் கலைஞர்

[தொகு] ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1971 - 1980
[தொகு] 1970 - 1971

    ’வெளிச்சம்’ திருச்சி தியாகராஜன் - திரை இசைப் பாடலாசிரியர்
    சாட்டியக்குடி மீனாட்சி சுந்தரம்மாள் - இசைக் கலைஞர்
    திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்திப் பிள்ளை - வயலின் கலஞர்
    மதராஸ் ஏ. கண்ணன் - மிருதங்கக் கலைஞர்
    மன்னார்குடி வி,நடேசப் பிள்ளை - முகர்சிங் கலைஞர்
    க்.ஏன்.தண்டபாணி - வீணைக் கலைஞர்
    குளிக்கரை பிச்சையப்பா - நாதசுரக் கலைஞர்
    பி.ஆர்.மணி - கிளாரினெட் கலைஞர்
    டி.என். சுப்பிரமணிய பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்
    திருவிடைமருதூர் ஆர்.டி. கோவிந்தராஜ பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    சகுந்தலா ( நடராஜ்- சகுந்தலா )
    மதுரை திருமாறன் - நாடக ஆசிரியர்
    கே.டி.சந்தானம் - நாடகப் பாடலாசிரியர்
    வைரம் அருணாசலம் செட்டியார் -
    ஆர்.முத்துராமன் - நாடக நடிகர்
    பூர்ணம் விஸ்வநாதன் - தொழில் முறை அல்லாத நடிகர்
    மனோரமா - நாடக நடிகை
    எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் - திரைப்படத் தயாரிப்பாளர்
    பி.மாதவன் - திரைப்பட இயக்குநர்
    வி.கே.இராமசாமி - திரைப்பட நடிகர்
    எஸ்.வரலட்சுமி - திரைப்பட நடிகை
    சி.வி. ஸ்ரீதர் - திரைப்பட வசன கர்த்தா
    கவிஞர் கண்ணதாசன் - திரைப்படப் பாடலாசிரியர்
    எம். எஸ். விஸ்வநாதன் - திரைப்பட இசையமைப்பாளர்
    சிவஞான பாண்டியன் - தெருக் கூத்துக் கலைஞர்
    அங்கு பிள்ளை - கரக ஆட்டக் கலைஞர்

[தொகு] 1972 - 1973

    சுவர்ண வெங்கடேச தீட்சிதர் - இசைப்பாடல் ஆசிரியர்
    வி.கோவிந்தசாமி நாயக்கர் - வயலின் கலைஞர்
    கோவை என். இராமசாமி - மிருதங்கக் கலைஞர்
    பி.ஐ. நடேசப் பிள்ளை - நாகசுரக் கலைஞர்
    டி.எஸ். மகாலிங்கம் பிள்ளை - தவில் கலைஞர்
    டி.கே. மகாலிங்கம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    நிர்மலா (வெண்ணிற ஆடை) - பரத நாட்டியக் கலைஞர்
    இரா. பழனிச்சாமி - நாடக ஆசிரியர்
    மதுரை வி.எஸ். வீரநாதக் கோனார் -நாடகப் பாடலாசிரியர்
    எச்.ஏ.கண்ணன் - நாடகத் தயாரிப்பாளர்
    எஸ்.எம். இராமநாதன் - நாடக நடிகர்
    டி.எஸ். சேஷாத்ரி - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    எம். பானுமதி - நாடக நடிகை
    பி. நாகிரெட்டி - திரைப்படத் தயாரிப்பாளர்
    ஏ.சி.திருலோகசந்தர் - திரைப்பட இயக்குநர்
    மேஜர் சுந்தர்ராஜன் - திரைப்பட நடிகர்
    கே.ஆர். விஜயா - திரைப்பட நடிகை
    ஆரூர் தாஸ் - திரைப்பட வசனகர்த்தா
    சுரதா - திரைப்படப் பாடலாசிரியர்
    டி.ஆர்.பாப்பா - திரைப்பட இசை அமைப்பாளர்
    புரிசை வி.இராஜு தம்பிரான் - தெருக்கூத்துக் கலைஞர்
    செவல்குளம் சி.தங்கையா - கணியான் கூத்துக் கலைஞர்

[தொகு] 1973 - 1974

    சதத சத்வானந்தா - இசைப்பாடல் ஆசிரியர்
    பி.கே.விஸ்வநாத சர்மா - வயலின் கலைஞர்
    டி.டி.பி.நாகராஜன் - மிருதங்கக் கலைஞர்
    ஆர்.வி,பக்கிரிசாமி - முகர்சிங் கலைஞர்
    என். இராமச்சந்திர ஐயர் - வீணைக் கலைஞர்
    திருக்குவளை டி.வி.அருணாசலம் பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளை - தவில் கலைஞர்
    ஜே.ஜே.சரசா - பரதநாட்டிய ஆசிரியர்
    நடனம் நடராஜ் - பரத நாட்டியக் கலைஞர்
    திருவாரூர் தங்கராஜூ - நாடக ஆசிரியர்
    எம்.ஜி.கிருஷ்ணமூர்த்தி பிள்ளை - நாடகப் பாடலாசிரியர்
    பூ.சா;தட்சிணாமூர்த்தி - நாடகத் தயாரிப்பாளர்
    எஸ்.எம்.இராமநாதன் - நாடக நடிகர்
    ஆர்.சீனிவாச கோபாலன் - தொழில்முறை அல்லாத நாடக நடிகர்
    எஸ்.என்.லட்சுமி - நாடக நடிகை
    பி.எஸ்.வீரப்பா - திரைப்படத் தயாரிப்பாளர்
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்
    ஜெய்சங்கர் - திரைப்பட நடிகர்
    லட்சுமி - திரைப்பட நடிகை
    இராம.அரங்கண்ணல் - திரைப்பட வசனகர்த்தா
    ஆலங்குடி சோமு - திரைப்படப் பாடலாசிரியர்
    கே.வி.மகாதேவன் - திரைப்பட இசையமைப்பாளர்
    டி.எம்.தஙப்பன் - வில்லுப்பாட்டுக் கலைஞர்
    எம்.ஆர்.நாகராஜ பாகவதர் - இசை நாடக நடிகர்
    என்.எம்.சுந்தராம்பாள் - இசை நாடக நடிகை
    எஸ்.பி.ரத்தின பத்தர் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்

[தொகு] 1974 - 1975

    உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் - இசைப்பாடல் ஆசிரியர்
    திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை - வயலின் கலைஞர்
    தஞ்சாவூர் உபேந்திரன் - மிருதங்கக் கலைஞர்
    உமையாள்புரம் விசுவஐயர் - கடம் கலைஞர்
    ஹரிஹர சர்மா - முகர்சிங் கலைஞர்
    தஞ்சாவூர் லட்சுமணன் ஐயர் - வீணைக் கலைஞர்
    கீரனூர் இராமசமி பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    திருசேறை முத்துக்குமாரசாமி பிள்ளை - தவில் கலைஞர்
    தருமபுரம் சுவாமிநாதன் - அருள்நூல் பண்ணிசைக் கலைஞர்
    மன்னார்குடி சாம்பசிவ பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்
    நால்வர் நடேசன் - நாடக நடிகர்
    வேலூர் டி.கோவிந்தசாமி - தொழில் முறை அல்லாத நடிகர்
    ஆர்.காந்திமதி - நாடக நடிகை
    கே.பாலாஜி - திரைப்படத் தயாரிப்பாளர்
    கே.பாலச்சந்தர் - திரைப்படத் தயாரிப்பாளர்
    நாகேஷ் - திரைப்பட நடிகர்
    வாணிஸ்ரீ - திரைப்பட நடிகை
    முரசொலி மாறன் - திரைப்பட வசனகர்த்தா
    கு.மா.பாலசுப்பிரமணியன் - திரைப்படப் பாடலாசிரியர்
    டி.ஜி.நிஜலிங்கப்பா - திரைப்பட இசயமைப்பாளார்
    டி.எம்.சவுந்தரராஜன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    புரிசை எல்லப்பத் தம்பிரான் - தெருக்கூத்துக் கலைஞர்
    பி.எஸ்.தொண்டைமான் - இசை நாடக நடிகர்
    சி.எஸ்.கே.சுந்தராம்பாள் - இசைநாடக நடிகை
    கே.என்.பி.சண்முக சுந்தரம் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்
    டி.எஸ்.இராஜப்பா - இசை நாடக ,இருதம்க்கக் கலைஞர்

[தொகு] 1975 - 1976

    ம.பொ.சிவஞானம் - இயற்றமிழ்க் கலைஞர்
    திருப்பாம்புரம் என்.சிவசுப்பிரமணிய பிள்ளை
    தஞ்சாவூர் டி. டி.சங்கர ஐயர் - வயலின் கலைஞர்
    கரந்தை சண்முகம் பிள்ளை - தவில் கலைஞர்
    குத்தாலம் வி.இராமசாமி பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    திலகம் நாராயணசாமி - நாடக ஆசிரியர்
    புத்தனேரி சுப்பிரமணியம் - நாடகப் பாடலாசிரியர்
    பி.ஏ.கிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்
    வி.சி.மாரியப்பன் - நாடக நடிகர்
    எஸ்.கஸ்தூரி - தொழில் துறை இல்லாத நாடக நடிகர்
    விஜயசந்திரிகா - நாடக நடிகை
    எம்.ஏ.திருமுகம் - திரைப்பட இயக்குநர்
    எஸ்.மஞ்சுளா - திரைப்பட நடிகை
    சி.எஸ்.பாண்டியன் - வில்ல்லுப்பாட்டுக் கலைஞர்
    எம்.கே.துரைராஜ் - இசை நாடக நடிகர்
    டி.எஸ்.கமலம் - இசை நாடக நடிகை

[தொகு] 1976 - 1977

    மே.வீ.வேணுகோபால் பிள்ளை - இயற்றமிழ்க் கலைஞர்
    சேதுராமையா - வயலின் கலைஞர்
    டி.என்.இராஜரத்தினம் பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    தேவாரன் சோமசுந்தரம் - அருள்நூல் பண்ணிசைக் கவிஞர்
    கும்பகோணம் சண்முகசுந்தரம் - பரதநாட்டிய ஆசிரியர்
    எம்.கே.சரோஜா - பரதநாட்டியக் கலைஞர்
    கோமல் ச்வாமிநாதன் - நாடக ஆசிரியர்
    பாலகவி வெங்காடசலன் - நாடகப் பாடலாசிரியர்
    டி.எஸ்.சிவதாணு - நாடகத் தயாரிப்பாளர்
    நரசிம்மபாரதி - நாடக நடிகர்
    சுப்புடு - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    தாம்பரம் லலிதா - நாடக நடிகை
    சிவகுமார் - திரைப்பட நடிகர்
    சுஜாதா - திரைப்பட நடிகை
    குலதெய்வம் இராஜகோபால் -வில்லுப்பாட்டுக் கலைஞர்
    எம்.எம்.மாரியப்பா - இசை நாடக நடிகர்
    ஜானகி - இசை நாடக நடிகை

[தொகு] 1977 - 1978

    கி.ஆ. பெ. விசுவநாதம் - இயற்றமிழ்க் கலைஞ
    மதுரைசி.எஸ்.சங்கர சிவம் - இசைப்பாடல் ஆசிரியர்
    பாலக்காடு கே.குசுமணி - மிருதங்கக் கலைஞர்
    அரெங்கநாயகி இராஜகோபாலன் - வீணக் கலைஞர்
    டி.விசுவநாதன் - புல்லாங்குழல் கலைஞர்
    என்.பி.என்.பொன்னுசாமி - நாகசுரக் கலைஞர்
    என்.பி.என். பொன்னிசாமி - நாகசுரக் கலைஞர்
    இலுப்பூர் ஆர்.சி. நல்ல குமார் - தவில் கலைஞர்
    குருவாயூர் பொன்னம்மாள் - அருட்பா இசைக் கலைஞர்
    டி.கே.இராஜலட்சுமி - பரத நாட்டிய ஆசிரியர்.
    எம்.கே. சரோஜா - பரத நாட்டியக் கலைஞர்
    சி.எம்.வி.சரவணன் - நாடக ஆசிரியர்
    எம்.லே.ஆத்மநாதன் - நாடகப் பாடலாசிரியர்
    டி.வி. வேதமூர்த்தி - நாடகத் தயாரிப்பாளர்
    எஸ்.எஸ்.எஸ். சிவசூரியன் - நாடக நடிகர்
    எஸ். ஆர்.கோபால் - தொழில் முறையல்லாத நாடக நடிகர்
    நாஞ்சில் நளினி - நாடக நடிகை
    கே.பாலாஜி - திரைப்படத் தயாரிப்பாளர்
    கே. சங்கர் - திரைப்பட இய்க்குநர்
    தேங்காய் சீனிவாசன் - திரைப்பட நடிகர்
    சுஜாதா - திரைப்படச் நடிகை
    ஸ்ரீவித்யா- திரைப்பட நடிகை
    பால முருகன் - திரைப்பட வசனகர்த்தா
    புதுமைப்பித்தன் - திரைப்ப்டப் பாடலாசிரியர்
    வி.குமார் - திரைப்பட இசையமைப்பாலாலாளர்
    சி.ஆர். சங்கர் - திரைப்பட இசையமைப்பாளர்
    ஏ.எம். இராஜா - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    புரிசை எல்லத் தம்பிரான் - தெருக் கூத்துக் கலைஞர்
    டி.எம்.கணேசன் - புரவி ஆட்டக் கலைஞர்
    பி.எஸ். சிவபாக்கியம்

[தொகு] 1978-1979

    தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - இயல் துறை
    ஸ்ரீராமுலு - மிருதங்கக் கலைஞர்
    அரெஙநாயகி இராஜகோபாலன் - வீணைக் கலைஞர்
    நாச்சியார் கோவில்பென்.கே.இராஜம் பிள்ளை - நாதசுர ஆசிரியர்
    திருவீழிமிழலை எஸ். கோவிந்த ராஜ பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    திருவீழிமிழலை எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை - நாதசுரக் கலஞர்
    தேன்கனிக் கோட்டைபார்.முனிரத்தினம் - தவில் கலைஞர்
    தேவாரம் சைதை நடராஜன் - அருள்நூல் பண்னிசைக் கலஞர்
    மெலட்டூர் எஸ்.நடராஜன் - பாகவத மேளா கலைஞர்
    தஞ்சை மு,இராமசுப்பிரமணிய சர்மா - கதா காலட்சேபக் கலைஞர்
    பந்தணை நல்லூர் ஜெயலட்சுமி - பரத நாட்டியக் கலைஞர்
    டி.என்.சுகி சுப்பிரமணியன் - நாடக ஆசிரியர்
    தஞ்சை பாலு - நாடகப் பாடலாசிரியர்
    டி.எம்.இராஜநாயகம் - நாடகத் தயாரிப்பாளர்
    டி. கே சம்பங்கி - நாடக நடிகர்
    டெல்லி குமார் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    ஷோபா - நாடக நடிகை
    எஸ்.பி.முத்துராமன் - திரைப்பட இயக்குநர்
    கமலஹாசன் - திரைப்பட நடிகர்
    லதா - திரைப்பட நடிகை
    வி.சி.குகநாதன் - திரைப்பட வசனச்கர்த்தா
    பஞ்சு அருணாசலம் - திரைப்படப் பாடலாசிரியர்
    சி.எஸ். கணேஷ் - திரைப்பட இசையமைப்பாளர்
    பி.சுசீலா - திரைப்படப் பின்னணிப் பாடகி

[தொகு] 1979 - 1980

    அவ்வை துரைசாமிப் பிள்ளை - இயற்றமிழ்க் கலைஞர்
    எம்.என்.கணேசப் பிள்ளை - வயலின் கலைஞர்
    தஞாவூர் எஸ்.எம்.சிவப்பிரகாசம் - மிருதங்கக் கலைஞர்
    கல்பகம் சுவாமிநாதன் - வீணைக் கலைஞர்
    டாக்டர் பிரபஞ்சம் சீடாரம் - புல்லாங்குழல் கலைஞர்
    செம்பனார்கோவில் என்.ஆர்.ஜி.சம்பந்தம் - நாதசுரக் கலைஞர்
    செம்பனார்கோவில் என்.ஆர்.ஜி.ராஜண்ணா - நாதசுரக் கலைஞர்
    பி.தாமோதரன் - இசைக் கருவித் தயாரிப்புக் கலைஞர்
    தஞ்சாவூர் ஜி.இராமமூர்த்தி பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்
    கே.என்.பக்கிரிசாமிப் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    சி.பி.இரத்தின சபாபதி - பரத நாட்டியக் கலைஞர்
    குடியேற்றம் ஈ நாகராஜ் - நாடக ஆசிரியர்
    கருப்பையா - நாடகப் பாடலாசிரியர்
    வி.எசிராகவன் - நாடக நடிகர்
    டி.பி.சங்கரநாராயணன் - நாடக நடிகர்
    திருமதி ரமணி - நாடக நகைச்சுவைக் கலைஞர்
    கலாவதி - நாடக நடிகை
    ஆர்.சுந்தரம் - திரைப்படத் தயாரிப்பாளர்
    டி.யோகானந்த் - திரைப்பட இயக்குநர்
    ஆர்.விஜயகுமார் - திரைப்பட நடிகர்
    ஜெயசித்ரா - திரைப்பட நடிகை
    டி.எஸ்,துரைராஜ் - திரைப்படக் கலைஞர்
    ஆர்.கே.சண்முகம் - திரைப்பட வசனகர்த்தா
    பூவை செங்குட்டுவன் - திரைப்படப் பாடலாசிரியர்
    க்.கே.வென்கச்டெஷ் - திரைப்பட இசையமைப்பாளர்
    எச்.ஜானகி - திரைப் படப் பின்னணிப்பாடகி
    கோடம்பாக்கம் கலைமணி - கரக ஆட்டக் கலைஞர்
    எம்.ஏ.மஜீத் - இசை நாடக நடிகர்
    எஸ்.ஆர்.பார்வதி - இசை நாடக நடிகை
    தஞ்சை வி.பாபுப் - புரவி ஆட்டக் கலைஞர்
    எஸ்.எஸ். சாப்ஜான் - இசை நாடக் நடிகர்
    டி.ஏ.சுந்தர லட்சுமி - இசை நாடக நடிகை
    கிளவுன் எம்.எஸ்.சுந்தரம் - இசை நாடகப் பாடலாசிரியர்
    ஏ.எம்.பேச்சிமுத்துப் பிள்ளை - இசைநாடக மிருதங்கக் கலைஞர்

[தொகு] 1980 - 1981

    பன்மொழிப்புலம அப்பாத்துரை - இயற்றமிழ்க் கலைஞர்
    தஞாவூர் ஆர்.இராமமூர்த்தி - மிருதங்கக் கலைஞர்
    மன்னார்குடி என்,ஆறுமுகம் - கொன்னக்கோல் கலைஞர்
    இராஹேஸ்வரி பத்மனாபன் - வீணைக் கலைஞர்
    டி.எச்.லெட்சப்பா பிள்ளை - நாதசுர ஆசிரியர்
    எச்.ஆர். டி.முத்துக்குமாரசாமி - நாதசுரக் கலைஞர்
    எஸ்,ஆர்.டி. வைத்தொஇயநாதன் - நாதசுரக் கலைஞர்
    மன்னார்குடி என்.இராஜகோபால் - தவில் ஆசிரியர்
    திருவாளப்புத்தூர் டி.ஏ.கலிய மூர்த்தி - தவில் கலைஞர்
    டாக்டர்.எஸ்.இராமநாத்ன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்
    பி.கே.ரகுநாத பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்
    தஞ்சை டி.எம். அருணாசலம்- பரத நாட்டிய ஆசிரியர்
    ப.சுவர்ணமுகி - பரத நாட்டியக் கலைஞர்
    திருவாரூர் மா வரதராஜன் - நாடகப் பாடலாசிரியர்
    சி,வி,ரங்ஜசாமி, - நாடகத் தயாரிப்பாளர்
    ஹெரான் ராமசாமி - நாடக நடிகர்
    என்னத்தெ கன்னையா - நாடக நகைச்சுவைக் கலைஞர்
    வி.வசந்தா - நாடக நடிகை
    வேனஸ் எஸ்.கிருஷ்ணமூர்த்தி - திரைப்படத் தயாரிப்பாளர்
    டி.யோகானந்த் - திரைப்பட இயக்குநர்
    ப்.எஸ்.இரவிச்சந்திரன் - திரைப்பட நடிகர்
    ஸ்ரீப்ரியா - திரைப்பட நடிகை
    சுருளிராஜன் -திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்
    எம்.சரோஜா - திரைப்பட நகைச்சுவை நடிகை
    சுமித்ரா - திரைப்பட குணச்சித்திர நடிகை
    பண்ருட்டி மா.லட்சுமணன் - திரைப்பட வசனகர்த்தா
    கவிஞர் முத்து.லிஙக்ம் - திரைப்படப் பாடலாசிரியர்
    இளையராஜா - திரைப்பட இசையமைப்பாளார்
    எஸ்.பி. பாலசுப்பிரமணியன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    இரா.வெ.உடையப்பா - இசை நாடக நடிகர்
    டி.ஜி.தாராபாய் - இசை நாடக நடிகை
    கண்ணாடி மாஸ்டர் சி.ஏ.என்.ராஜ் - பழம் பெரும் இசை நடிகர்
    திருவாரூர் அ.இராமசாமி - பழம் பெரும் இசை நடிகர்
    எம்.ஆர்.வாசவாம்பாள் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்

[தொகு] ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1981 - 1990
[தொகு] 1981 - 1982

    புரிசை சு.முருகேச முதலியார் - இயற்றமிழ்க் கலைஞர்
    நாகூர்டி.எஸ்.அம்பி அய்யர் - மிருதங்கக் கலைஞர்
    செந்தில் எம்.கே.சின்ன சுப்பிஅஹ் - நாகசுரக் கலைஞர்
    வடபாதிமஙலம் வி.என்.ஜி தட்சிணாமூர்த்தி - தவில் கலைஞர்
    கே.வீரமணி - இறையருட் பாடற் கலைஞர்
    டாக்டர். சேலம் எஸ் ஜெயலட்சுமி - இசை ஆராய்ச்சிக் கலைஞர்
    சுவாமிமலை எஸ்.கே. இராஜரத்தினம் - பரத நாட்டிய ஆசிரியர்
    சாமுண்டீஸ்வரி - பரத நாட்டியக் கலைஞர்
    அபயாம்பிகை - பரத நாட்டியக் கலைஞர்.
    டி.ஜி.பாவுப் பிள்ளை - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்.
    பட்டுக்கோட்டை குமாரவேலு - நாடக ஆசிரியர்
    சி.வி.ரெங்கசாமி - நாடகத் தயாரிப்பாளர்
    இராஜராஜ .பி.பெருமாள்ராஜ் - நாடக நடிகர்
    எஸ்.கே.கரிக்கோல்ரஜ் - நாடக நகைச்சுவைக் கலைஞர்
    எஸ்.ஆர்.சிவகாமி - நாடக நடிகை
    துரை - திரைப்பட இயக்குநர்
    ஸ்ரீகாந்த் - திரைப்பட நடிகர்
    ஸ்ரீதேவி - திரைப்பட நடிகை
    இரவீந்தர் - திரைப்பட வசனகர்த்தா
    தஞ்சைவாணன் - திரைப்படப் பாடலாசிரியர்
    திருச்சிலோகநாதன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    டி.வி.ரத்தினம் - திரைப்படப் பின்னணிப் பாடகி
    என்.அய்யம்மாள் - கரக ஆட்டக் கலைஞர்
    எம்.வி.கிருஷ்ணப்பா - இசை நாடக நடிகர்
    டி.எஸ்.ரெங்கநாயகி - இசைநாடக நடிகை
    ந.மு.க.சண்முகசுந்தரக் கவிராயர்
    ஏ.எஸ்.தகவேலு - இசை நாடகப் பாடலாசிரியர்
    டி.கே.அப்புக்குட்டி பாகவதர்

[தொகு] 1982 - 1983

    கி.வா.ஜகந்நாதன் - இயற்றமிழ்க் கலைஞர்
    மயிலம் ப.வஜ்ஜிரவேலு - இசைக் கலைஞர்
    சிக்கில் ஆர்.பாஸ்கரன் - வயலின் கலைஞர்
    சாரதா சிவானந்தம் - வீணைக் கலைஞர்
    இஞ்சிக்குடி இ.பி.கந்தசாமி - நாதசுரக் கலைஞர்
    இஞ்சிக்குடி இ.பி.கணேசன் - நாதசுரக் கலைஞர்
    தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் - தவில் கலைஞர்
    சூலமங்கலம் ஆர்.ஜெயலட்சுமி - இறையருட் பாடற் கலைஞர்
    சூலமங்கலம் ஆர். இராஜலட்சுமி - இறையருட் பாடற் கலைஞர்
    வடபழனி ந.ஆறுமுக ஓதுவார் - இறையருட் பாடற் கலைஞர்
    பாலமீரா சந்திரா - கதா காலட்சேபக் கலைஞ்ர்
    பி.எஸ்.குஞிதபாதம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்
    அடியார் - நாடக ஆசிரியர்
    வி.கோபாலகிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்
    சண்முகசுந்தரி - நாடக நடிகை
    ஆறு.அழகப்பன் - நாடகக் கலை ஆய்வாளர்
    பாரதிராஜா - திரைப்பட இயகுநர்
    ரஜினிகாந்த் - திரைப்பட நடிகர்
    சரிதா - திரைப்பட நடிகை
    எஸ்.சி.கிருஷ்ணன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    புரிசை மண்ணுசாமி உடையார்
    என்.வி. மாமுண்டி - இசை நாடக நடிகர்
    கே.பி.மெய்ஞானவல்லி - இசை நாடக நடிகை
    ஏ.கே.காளீஸ்வரன் - பழம் பெர் இசை நாடக நடிகர்
    ஆர்.ஜீ. மூர்த்தி - விகடக் கலைஞர்

[தொகு] 1983 - 1984

    திருக்குறள் வீ.முனிசாமி - இயற்றமிழ்க் கலைஞர்
    வி.தியாகராஜன் - வயலின் கலைஞர்
    டி.ஆர். சீனிவாசன் - மிருதங்கக் கலைஞர்
    ஈ.காயத்ரி - வீணைக் கலைஞர்
    கோட்டூர் என்.இராஜரத்தினம் - நாதசுரக் கலைஞர்
    கோட்டூர் என்.வீராசாமி - நாதசுரக் கலைஞர்
    தென்சித்தூர் எஸ்.என்.சுந்தரம் - தவில் கலைஞர்
    எஸ்.நமசிவாய ஓதுவார் - இறையருட் பாடற் கலைஞர்
    கே.ஆர்.இராதாகிருஷ்ணன் - பரத நாட்டிய ஆசிரியர்
    மாலதி டாம்னிக் - பரத நாட்டியக் கலைஞர்
    எஸ்.இராஜேஸ்வரி - பரத நாட்டிய இசைக் கலைஞர்
    மனசை ப. கீரன் - நாடக ஆசிரியர்
    இரா.முருகேச கவிராயர் - நாடகப் பாடலாசிரியர்
    பி.எஸ்.வெங்க்டாசலம் - நாடக நடிகர்
    என்.விஜயகுமாரி - நாடக நடிகை
    டாக்டர் ஏ.என் பெருமாள் - நாடகத் திறனாய்வுக் கலைஞர்
    டாக்டர். பானுமதி கிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்
    கே.பாக்கியராஜ் - திரைப்பட நடிகர்
    இராஜ சுலோசனா - திரைப்பட நடிகை
    ஒய்.ஜி.மகேந்திரா - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்
    வலம்புரி சோமநாதன் - திரைப்பட வசனகர்த்தா
    எல்.ஆர்.ஈஸ்வரி - திரைப்படப் பின்னணிப் பாடகி
    பி.சின்னப்பா - வில்லுப்பாட்டுக் கலைஞர்
    எம்.ஆர்.முத்துசாமி - இசை நாடக நடிகர்
    எம்.கே.கமலம் - இசைநாடக நடிகை
    எம்.ஆர்.கமலவேணி - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்
    எச்.எம்.கெள்ரிசங்கர ஸ்தபதியார் - பல்கலை விற்பன்னர்

[தொகு] 1984 - 1985

    பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் - இயற்றமிழ்க் கலைஞர்
    ஆ.க.முத்துக்குமாரசாமி - இசைப் பாடல் ஆசிரியர்
    எம்.எஸ்.அனந்தராமன் - வயலின் கலைஞர்
    குத்தாலம் ஆர். விசுவநாதய்யர் - மிருதங்கக் கலைஞர்
    திருக்கருகாவூர் டி.கி.சுப்பிரமணியம் - நாதசுரக் கலைஞர்
    திருப்பனந்தாள்சோ.முத்துக்கந்தசாமிதேசிகர் - இறையருட் பாடற் கலைஞர்
    திருவாரூர் தி. சுப்ரமணிய தேசிகர் - இறையருட் பாடற் கலைஞர்
    பேராசிரியர் ஆர்.வி.கிருஷ்ணன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்
    கே.என்.தட்சிணாமூர்த்தி - பரத நாட்டிய ஆசிரியர்
    கே.ஜெயலட்சுமி - பரத நாட்டியக் கலைஞர்
    டி.எஸ்.நாகப்பன் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்
    நடனமணி நூலூ - நாட்டிய நாடகக் கலைஞர்
    கவிஞர் ஏ.எஸ்.முத்துசாமி - நாடக ஆசிரியர்
    கவிஞர் வானம்பாடி (சுந்தரேச துரை)
    பி.எஸ்.சிவானந்தம் - நாடகத் தயாரிப்பாளர்
    ஏ.கே. வீராச்சாமி - நாடக நடிகர்
    எஸ்.இராமாராவ் - நாடக நகைச் சுவைக் கலைஞர்
    எஸ்.என்.பார்வதி - நாடக நடிகை
    ஜி.ம்கேந்திரன் - திரைப்பட இய்க்குநர்
    விஜகாந்த் - திரைப்பட நடிகர்
    இராதிகா - திரைப்பட நடிகை
    மெள்லி - திரைப்பட வசனகர்த்தா
    நா.காமராசன் - திரைப்ப்டப் பாடலாசிரியர்
    எஸ்.ஆர்.கல்யாணி - கரக ஆட்டக் கலைஞர்
    கொத்தமங்கலம் சீனு - இசை நாடக நடிகர்
    டி.ஆர்.கோமளலட்சுமி - இசை நாடக நடிகை
    டி.ஏ. சண்முகசுந்தரப் புலவர் - பழம் பெரும் இசை நாடக நடிகர்
    மணவை முஸ்தபா - பண்பாட்டுக் கலை பரப்புநர்

[தொகு] 1985 - 1986

    பேராசிரியர் அ.ச ஞானசம்பந்தன் - இயற்றமிழ்க் கலைஞர்
    திருமதி. டி. பட்டம்மாள் - இசைப் பாடல் ஆசிரியர்
    நாகர்கோவில் கே.மகாதேவன் - இசைக் கலைஞர்
    கே.ஷியாம் சுந்தர் - கஞ்சிராக் கலைஞர்
    இராஜேஷ் - திரைப்பட நடிகர்
    அம்பிகா - திரைப்பட நடிகை
    கங்கை அமரன் - திரைப்பட இசை அமைப்பாளர்
    கே.ஜே.யேசுதாஸ் - திரைப்படப் பன்னணிப் பாடகர்
    கே.நாராயணன் - கரக ஆட்டக் கலைஞர்

[தொகு] 1986 - 1987

    பேராசிரியர் டாக்டர் நா.பாண்டுரங்கன் - இயற்றமிழ்க் கலைஞர்
    டாக்டர் பழனி இளங்கம்பன் - இயற்றமிழ்க் கலைஞர்
    டாக்டர் வசந்தா சீனிவாசன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்
    எஸ்.கே.காமேஸ்வரன் - பரத நாட்டிய ஆசிரியர்
    கோமளா வரதன் - பரத நாட்டியக் கலைஞர்
    டாக்டர் வாசவன் - நாடக ஆசிரியர்
    டி.எம்.சாமிக்கண்ணு - நாடக நடிகர்
    கார்த்திக் - திரைப்பட நடிகர்
    சுஹாசினி - திரைப்பட நடிகை
    எம்.எஸ்.இராஜலட்சுமி - வில்லுப் பாட்டுக் கலைஞர்
    ஏ.எஸ்.மகாதேவன் - இசை நாடக நடிகர்

[தொகு] 1987 - 1988

    விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

[தொகு] 1988 - 1989

    விருதுகள் அறிவிக்கப்படவில்லை.


[தொகு] 1989 - 1990

    டாக்டர் வா.மு. சேதுராமன் - இயற்றமிழ்க் கலைஞர்
    கவிஞர் மன்னர் மன்னன் - இயற்றமிழ்க் கலைஞர்
    திருப்பாம்புரம் டாக்டர் சோ.சண்முக சுந்தரம் - இசைக் கலைஞர்
    களக்காடு எஸ்.இராமநாராயண அய்யர் - இசைக் கலைஞர்
    சித்தூர் கோபாலகிருஷ்ணன் - வயலின் கலைஞர்
    மதுரை திருமதி எம்.எஸ். பொன்னுத்தாய் - நாதசுரக் கலைஞர்
    நாகூர் ஈ.எம். ஹனிபா - பாடற் கலைஞர்
    பேராசிரியர் து.ஆ.தன பாண்டியன்
    எல். பழனிச்சாமி - பரத நாட்டிய ஆசிரியர்
    வி.பி.இராமதாஸ் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்
    கள்ளபார்ட் டி. ஆர். நடராஜன் - நாடக நடிகர்
    லியோ பிரபு - நாடக நடிகர்
    கே.சோமு - திரைப்பட இயக்குநர்
    இராதா ரவி - திரைப்ப்ட நடிகர்
    பிரபு - திரைப்பட நடிகர்
    செந்தாமரை - திரைப்பட நடிகர்
    எஸ்.எஸ். சந்திரன் - திரைப்பட நடிகர்
    பி.எஸ்.சீதா - திரைப்பட நடிகை
    கே.சொர்ணம் - திரைப்பட வசனகர்த்தா
    கவிஞர் வைரமுத்து - திரைப்படப் பாடலாசிரியர்
    டி.கே.இராமமூர்த்தி - திரைப்பட இசையமைப்பாளர்
    மலேசியா வாசுதேவன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    எம்.எஸ்.இராஜேஸ்வரி - திரைப்படப் பிண்ணணிப் பாடகி
    பல்லிசைக் கலைஞர் - திரைப்பட ஒலிப்பதிவாளர்

[தொகு] 1990 - 1991

    எஸ்.எஸ்.தென்னரசு - இயற்றமிழ்க் கலைஞர்
    கவிஞர் எஸ்.அப்துல் ரகுமான் - இயற்றமிழ்க் கவிஞர்
    அன்பு வேதாசலம் - இலக்கியப் பேச்சாளர்
    பி.இராமச்சந்திரைய்யா - இசை ஆசிரியர்
    ஏ.கன்னியாகுமரி - வயலின் கலைஞர்
    டி.ருக்குமணி - வயலின் கலைஞர்
    திருவாரூர் ஏ.பக்தவத்சலம் - மிருதங்கக் கலைஞர்
    யூ.சீனிவாஸ் - மாண்டலின் கலைஞர்
    சித்தாய்மூர் திரு.பி.எஸ்.பொன்னையா பிள்ளை - நாதசுரக் கலைஞர்
    யாழ்ப்பாணம் க.கணேசப் பிள்ளை - தவில் கலைஞர்
    உமா ஆனந்த் - பரத நாட்டிய ஆசிரியர்
    கே.எஸ்.நாகராஜன் - நாடகத் தயாரிப்பாளர்
    என்.எஸ்.கே.தாமு - நாடக நடிகர்
    டி.வி.குமுதினி - பழம் பெரும் நாடக நடிகை
    எம்.எஸ். சுந்தரி பாய் - பழம் பெரும் நகச்சுவை நடிகை
    கி.உமாபதி - திரைப்படத் தயாரிப்பாளர்
    இராம. நாராயணன் - திரைப்பட இயக்குநர்
    பாண்டியன் - திரைப்பட நடிகர்
    இராதா - திரைப்பட நடிகை
    ஏ.வீரப்பன் - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்
    எம்.சரோஜா - திரைப்பட நகைச்சுவை நடிகை
    சுமித்ரா - திரைப்ப்ட குணச்சித்திர நடிகை
    சந்திரசேகர் - திரைப்பட குணச்சித்திர நடிகர்
    அவினாசி மணி - திரைப்பட வசனகர்த்தா
    சந்திரபோஸ் - திரைப்பட இசையமைப்பாளர்
    பி.பி.சீனிவாஸ் - திரைப்படப் பின்னணிப் பாடகர்
    வாணி ஜெயராம் - திரைப்படப் பின்னணிப் பாடகி
    எஸ். மாருதிராவ் - திரைப்பட ஒளிப்பதிவாளர்
    என்.கே. விஸ்வநாதன் - திரைப்பட ஒளிப்பதிவாளர்
    அறந்தை நாராயணன் - திரைப்பட ஆய்வாளர்
    பிலிம் நியூஸ் ஆனந்தன் - திரைப்பட வரலாற்றுத் தொகுப்பாளர்
    சுலோசனா - கரக ஆட்டக் கலைஞர்
    கவிஞர் முகவை மாணிக்கம் - நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளர்
    டாக்டர் விசயலக்குமி நவநீத கிருட்டினன் - நாட்டுப்புற இசை ஆய்வாளர்
    எஸ்.கோபாலன் (கோபுலு) - ஓவியக் கலைஞர்

[தொகு] ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1991 - 2000
[தொகு] 1991 - 1992

    நீதிபதி இஸ்மாயில் - இயற்றமிழ்க் கவிஞர்
    டாக்டர் விக்கிரமன் - இயற்றமிழ்க் கவிஞர்
    தஞ்சாவூர் வி.சங்கர ஐயர் - இசைக் கலைஞர்
    டி.ருக்குணி - வயலின் கலைஞர்
    டி.கே.தட்சிணாமூர்த்தி - கஞ்சிராக் கலைஞர்
    சித்தூர் ஜி.வெங்கடேசன் - புல்லாங்குழல் கலைஞர்
    ஏ.பி. சண்முகம் - தில்ரூபா கலைஞர்
    திருவிழா ஜெய்சங்கர் - நாகசுரக் கலைஞர்
    மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன் - தவில் கலைஞர்
    டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் - இறையருட் பாடற் கலைஞர்
    சரஸ்வதி - பரத நாட்டியக் கலைஞர்
    மதுரை டி. சேதுராமன் - பரத நாட்டியக் கலைஞர்
    பந்தணை நல்லூர் பி.சீனிவாசன் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்
    ஆர்.சி.தமிழன்பன் - நாடக ஆசிரியர்
    கே.எஸ்.நாகராஜன் - நாடகத் தயாரிப்பாளர்
    கே.டி.இராஜகோபால் - நாடக நடிகர்
    ஏ.ஆர்.சீனிவாசன்( ஏ.ஆர்.எஸ்)- தொழில் முறை அல்லாத நாடக நடிகர்
    ஒருவிரல் கிருஷ்ணாராவ் - நாடக நகைச்சுவைக் கலஞர்
    எஸ்.சுகுமாரி - நாடக நடிகை
    ஜி.வெங்கடேஸ்வரன் - திரைப்படத் தயாரிப்பாளர்
    சி.வி.இராஜேந்திரன் - திரைப்பட இயக்குநர்
    சத்யராஜ் - திரைப்பட நடிகர்
    பானுப்பிரியா - திரைப்பட நடிகை
    வெண்ணிற ஆடை மூர்த்தி - திரைப்பட நடிகர்
    சித்திராலயா கோபு - திரைப்பட வசனகர்த்தா
    தேவா - திரைப்பட இசையமைப்பாளர்
    பி.லீலா - திரைப்ப்டப் பின்னணிப் பாடகி
    மேலக்கரந்தை பொன்னம்மாள் - வில்லுப்பாட்டுக் கலைஞர்
    பி.சுந்தரராஜ் நாயுடு - கரக ஆட்டக் கலைஞர்
    டி.ஏ.ஆர்.நாடி ராவ் - புடவி ஆட்டக் கலைஞர்
    கே.வி.இராஜம் - இசை நாடக நடிகை
    ஞானாம்பாள் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்
    கும்பகோணம் டி.எஸ். சங்கரநாதன் - பொம்மலாட்டக் கலைஞர்.

[தொகு] ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 2001 - 2010
[தொகு] 2008

    சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
    காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை
    வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
    எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
    இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
    பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
    காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
    பிரேமா ஜெகதீசன் - நாட்டியம் 9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
    நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
    திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக்கலைஞர்கள்
    கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
    ச. சுஜாதா /பெயர் பீர் முகமது - நாட்டியம்
    இராணிமைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
    ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
    கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
    தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
    சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
    திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
    பரத்வாஜ் - இசையமைப்பாளர்
    ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
    சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
    தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
    என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
    கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

[தொகு] 2009

    காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
    சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
    சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
    மாளவிகா - சின்னத்திரை நடிகை
    பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்
    எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
    பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
    ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
    தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
    எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
    ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
    கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
    கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
    எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
    சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
    டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்
    மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
    சா. கந்தசாமி - இயற்றமிழ்
    ராஜேஷ்குமார் - இயற்றமிழ்
    நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
    ரோகிணி - குணச்சித்திர நடிகை
    சரண்யா - குணச்சித்திர நடிகை
    சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

[தொகு] 2010

    பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்
    பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்
    டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
    டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
    திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
    சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்
    தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
    டி. வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
    கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
    குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
    ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
    என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
    ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
    ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
    திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
    கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்
    டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்
    கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி
    திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்
    ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
    ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
    பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
    எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
    ஆர்யா - திரைப்பட நடிகர்
    அனுஷ்கா - திரைப்பட நடிகை
    தமன்னா - திரைப்பட நடிகை

பகுப்பு:

    தமிழ்நாடு அரசு விருதுகள்

1959-60, 1960-61, 1961-62 தெரிந்தபின் குறிப்பிடுவேன்.

2008.2009.2010 பதிந்தவர் பார்வதி!

மேலும், 

புது டெல்லி சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்

பொற்கிழி வழங்கப் பெற்றவர்கள்

சிறந்த கலை நிறுவனங்களின் பட்டியல்

சிறந்த நாடகக் குழுக்களின் பட்டியல்

மறைந்த கலை மேதைகளின் திருவுருவப் படப் பட்டியல்

பதிவு  63 வயது முதியவரால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  வெளியிடப்பட்ட  பட்டியல் இரவிலும் பதிவேற்றப்படுகின்றது. எனவே மீண்டும்  இறுதியாக  விரைவில் சரிபார்த்து அறிவிக்கப்படும்.

மேலும் சில கோரிக்கைகளும் இப்பொழுது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகத் திகழும் திரு. தேவா அவர்கள் மூலமாக அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும். ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

எடுத்துக்காட்டாக, திருவள்ளுவர் உஉருவப்படம் நம்மிடம் இல்லை . பலர் சேர்ந்து அதனை உருவாக்கினர். பல திருமடங்களின் குரு மகா சந்நிதானங்களும், இறை உருவங்களும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனது இளமைக் காத்தில் பார்த்த வினாயகற் உருவம் வேறு. அது ரவிவர்மா பக்தி உணர்வுடன் வரையப்பட்டது. 

தற்போது வரையப்படும்  விநாயக உருவங்கள்  கேலிக்கூத்தாகி விட்டன. அவற்றிற்கெல்லாம் எத்தகைய எதிர்ப்பும் இல்லை. ஆனால், உய்ர் இன மக்களால் தன்னைக் காட்டிலும் தாழ்ந்தோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நூல் வடிவம் (  தாண்டவபுரம் ) பெறும் பொழுது  எதிர்ப்புக் குரல்கள் வலுக்கின்றன. எரிக்கவும் படுகின்றன. நீதிமன்றத்திற்குச் செல்வதென்று  தீர்மானித்து விட்டபின் கூச்சல்கள் எதற்கு ? கூப்பாடுகள் எதற்கு?

எழுத ந்னைத்தது திசை திரும்புகின்றது. பாரதியார் நம் கண் முன்பாக வாழ்ந்தவர். கற்பனைப் பாரதியார் எதற்கு? நம் வீட்டில்  உயிரோடு வாழும் மூதாதையர் அழகாக இல்லை என்றால் பிளாஸ்டிக் சர்ஜரிக்கா செல்ல முடியும். பாரதியாரின் அசல் தோற்றம்தான் பயன் படுத்தப் படவேண்டும். இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு  இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் மேற்கொள்வோமே ?

இன்னும் பல கோரிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நடிகர்களும் மனிதர்கள்தானே ? யோசியுங்கள் தோழர்களே !

அதே நேரத்தில் மேற்கொண்ட பணியும் விரைவில் நிறைவடையும் என்றும் உறுதி அளித்து, அசல் பாரதியின் படத்தை மீண்டும் பதிவிடுகின்றேன்.

அசல் இருக்கப் போலி ஏன்? அவரது வாரிசுகளின் மெள்னமும் கலையாதோ ?



பூமியிலெ, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸ்சி மார்க்கம்,
சாமியென யேசுபதம், போற்றும் மார்க்கம்
சநாதனமாம் ஹிந்து மச்தம், இஸ்லாம், யூதம், 
நாமமுயர் சீனத்துத் “தரவு” மார்க்கம்,
நல்ல ”கண்” பூசி மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.
”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்
சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே!
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்!
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கிச் 
சதாகாலம் “சிவோஹ” மென்று சாதிப்பாயே! “


மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்.





2 comments:

  1. வலைப்பதிவருக்கு, விக்கிப்பீடியாவில் “கலைமாமணி விருது” பட்டியலில் மூன்று ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் தன்னார்வலர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே பதிவு செய்து வருகின்றனர். தங்களிடம் 1954 ஆம் ஆண்டு முதல் கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியல் இருந்தால் தாங்களே விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யலாம். 1955 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்ற பெயரில் மாற்றம் பெற்றது. எனவே இந்த அமைப்பு வழங்கும் கலைமாமணி விருதுகள் 1956 ஆம் ஆண்டிலிருந்துதான் இருக்குமென கருதுகிறேன். தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப விரைவில் பதிவுகள் இடம் பெறும். - தேனி. எம்.சுப்பிரமணி. on 54ஆண்டுகள் கலைமாமணி விருது பெற்றோர் பட்டியலை விக்கிபீடியாவில் சேர்க்க வேண்டும்!

    M.Subramaniam

    ReplyDelete
  2. பெயர் மாற்றம் குறித்த தகவல் எனக்குக் கிடைத்த புத்தகத்தில் இல்லை.1959 முதல் -2000 ஆம் ஆண்டுவரை உள்ள விருதாளர் கொண்ட தொகுப்பே மேற்படி நூலில் உள்ளன.

    புன்னகை வெல்ஃபேர் பவுண்டேசன் நண்பர்களின் முயற்சியால் கிடைத்த புத்தகத்திலிருந்து பதிந்த விபரங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. இது குறித்து முயற்சி எடுக்கத் தூண்டியது சோதரி பார்வதி பதிந்த 2008. 2009. 2010 பற்றிய தகவல்களே ஆகும்.

    அத்தகவல்களைப் படித்த பின்னரே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இரண்டு மாதங்கள் ஆயின புத்தகம் கைக்கு வந்து சேர்ந்திட. 94-95, 95-96, 96-97, 98-99, 99-2000 மற்றும் மீதியுள்ளவற்றையும் சேர்க்கும் முயற்சிகளைச் சென்னையில் வாழும் புன்னகை வெல்ஃபேர் பவுண்டேசன் முடித்து வைக்கும்.

    ஒவ்வொருவரது தகுதியும் திறமையும் வெவ்வேறாக இருக்கும். அனைத்தும் ஐக்கியமாகும்பொழுது கிடைக்கும் வெற்றி பிரமாண்டமாக இருக்கும். ஐக்கியமாவோம். அயராது உழைப்போம்.

    எஞ்சிய பதிவுகள் தொடர்கின்றன. தமிழ் விக்கிபீடியாவிற்கு எங்களது பங்களிப்பும் பலமாகவே இருக்கும்.

    எந்த அமைப்பின் பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டனவோ அந்த அமைப்பின் பெயரையே குறிப்பிடுவதுதானே சரியான திசைவழி ?
    .
    நன்றியுடன், அன்பு, சீராசை சேதுபாலா.

    ReplyDelete

Kindly post a comment.