Monday, March 5, 2012

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் நிகழ்த்திய, 4ஆம் கருத்தரங்க நிகழ்வு....தொகுப்பு ..( ! )


 
அறியாமை இருளகற்றி அறிவொளி ஏற்றும் புனிதப்பணியிலும் ஈடுபட்டது, கிறித்துவம்,இந்தியாவில், ஆங்கிலேயர், ஆட்சியில்!

கல்வி என்பது சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும்; எட்டாக் கனியாக இருந்தகாலத்திலேயே, எட்டிப் பறித்திடும் கனியாகக் கல்வி அறிவையும் ஊட்டியது, கிறித்துவம்!

 ”இந்துத்வா என்பது ஓர்  மதமல்ல மக்களின் வாழ்க்கை முறை” என்று உரக்கச் சொல்வோரும் மறுக்க முடியாத உண்மை இது.

கிறித்துவ மதம் இந்தியாவில் ப்ரவிய காலக்கட்டத்தில் தமிழகமும் அந்தப் பயனைப் பெற்றது. நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடிவிட்டு, ”டபுள் செஞ்சுரி”-யை எட்டிப்படித்திடப்  பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் கல்விக்கூடங்களே, அதற்குச் சான்று!

உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படுவோர்  கல்வி கற்றிட வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவே  கிறித்துவ மதத்திற்கு  மாறியது திருச்சியில்தான் அதிகம்.  அந்தத் தலைமுறைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் , பதிவு அலுவலகத்தில் பாதுகாக்கப்படும் சொத்து விற்பனை மற்றும்
உயில் பத்திரங்கள், தமிழகத்தின் மையப் புள்ளியாகத் திகழும் திருச்சிராப்பள்ளியில்!

திருச்சி என்றாலே எல்லோரது  நினைவுக்கும் வருவது மலைக் கோட்டையும்,தெப்பக்குளமும்தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வைத்தது, அண்மையில், நடைபெற்றதோர் இலக்கிய நிகழ்ச்சி!

அந்த இலக்கிய நிகழ்வின் தகவலைத் தந்தவர் முனைவர், துரை.மணிகண்டன் அவரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தவை தமிழ் வலைப்பூக்கள்!

நடமாட முடியாத நிலையிலும் கணினி மூலம்தமிழ்த் தொண்டடாற்றிவரும் விசுவின் இலவச மென்பொருள் அழகி! அழகியை எனக்கு அறிமுகப்படுத்தி  60 வயதுக்கு மேல் என்னையும் வலைப்
பதிவாளராக்கியவர்  பாசிட்டிவ் அந்தோணி முத்து.

இன்று தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பூக்களில் மட்டும்தான் உலகினை வலம் வந்து கொண்டிருக்கின்றார். அழ்கியும் அந்தோணிமுத்துவும் சிறப்புத் தகவல்கள் விரைவில் இடம்பெறும்.

இலவ்சத் தமிழ் மென்பொருட்கள் அனைத்தும் விரும்பும் வண்ணம் தாராளமாகக் கிடைக்கின்ற இன்றையச் சூழலிலும், சிலரால் அவை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

இவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பேருவகை கொள்கின்றது, எனது மனம்.!

தன்னைத், தன் சந்ததியினரைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்து கல்விப் பணியில், தன்னிகரற்றுத் திகழும், திருச்சி, தூய வளனார் கல்லூரியின் நினைவுகளில் நெஞ்சம் நிறைந்து, கன்ணீர்மல்க நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் மற்றொரு நினைவும் திருச்சி என்றவுடன் ஏற்படும் என்று சொல்வோரையும் நேரில் சந்திக்கும், வாய்ப்பை வழங்கியது இன்றைய இளைய தலைமுறைக்கு, இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள், கருத்தரங்கம்!

தமிழ்த் திணை இணைய இதழின் சார்பு அமைப்பாகச் செயல்படுகின்றது, சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம். தனது நான்காம் கருத்தரஙகத்திற்கு, இதழியல் வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது.. தொடக்க விழாவிற்கு, முனைவர், தி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தி. மா.சரவணன் வரவேற்புரை வழங்கினார்.

வெளியிடப்பட்ட ஆய்வு நூலை, தீக்கதிர் ஆசிரியர், மதுக்கூர் இராமலிஙகம் பெற்றுக்கொண்டு மைய உரை நிகழ்த்தினார். ஈ.வே.ரா. கல்லூரி முதல்வர் பழ. கெளதமன் வாழ்த்துரையும், முனைவர் கா.வாசுதேவன் நன்றியுரையும் நல்கியதும் காலையில் தொடக்க விழா நிகழ்வுகளாக அமைந்தன.

இந்த இலக்கிய நிகழ்வினை ஒட்டிச் சிறப்பு மலர்  வெளியிட வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அந்த்ப் பொறுப்பினத் தட்டிக் கழித்துவிட்டு நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்ட பாரபட்சமான போக்கினைப் போக்குவதற்கான ஒரு முயற்சியே இந்த வலைப்பதிவு.

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, சமுதாய மன்றத்தில் உள்ள தொலக்காட்சி அறையில்,இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்- ஆய்வுநூல், மின்நூல் வெளியிட்டு, அருட்திரு.முனைவர், சூ.ஜான்பிரிட்டோ அவர்களின் ஆசியுரையில் இடம்பெற்ற கருத்துக்கோவை.

அருட்தந்தை என்றால் கிறிஸ்துவ மதபோதகர் என்று மட்டும்தானே நினைக்கத் தோன்றும்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால் சிஙகப்பூரில் நடைபெற்ற அனைத்துலகக் கம்பராமயணக் கருத்தரங்கில் பங்கேற்றதைச் சொன்னபோது அரஙகமே வியப்பெய்தியது. பார்வையாளராகத்தான் சென்றிருப்பார் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது.. ஆனால், ”கம்பராமாயணத்தில் உயிரியல் பார்வை”  என்ற ஆய்வுக் கட்டுரையை அவர் கருத்தரங்கில் சமர்ப்பித்ததாகக் குறிப்பிட்ட தகவல் அனைவரது வியப்பினையும் மேலும் அதிகரிக்கச் செய்தது.

கம்பனில் உள்ள தமிழ்ச்சுவையுடன், மானுட நேயத்தையும், பார்ப்பனீயக் கவிஞன் என்று வெறுத்தொதுக்கப்பட்ட பாரதியைப் பட்டி தொட்டிகளெங்கும் பரவச் செய்த தோழர். ப. ஜீவானந்த்ததை நினக்கச் செய்தது.

தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், குறிஞ்சி உயிரியல் பார்வை  ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த தகவலும் கிடைத்தது. தற்பொழுது, குறிஞ்சிப்பாட்டு, கூத்தராற்றுப்படை ஆய்வில் ஈடுபட்டுள்ளதையும், அவற்றில் நிலவிடும் மனிதநேயத்தையும் புகழ்ந்துரைத்தபோது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று எப்பொழுதோ கேள்விப்பட்ட வரிகள் நினைவுக்கு வந்தன.

சஙக இலக்கியம், மனித நேயம், பஞச பூதம் உயிரியல் அறிஞர்கள் என்பனவற்றை எல்லாம் அவர் உச்சரித்ததைக் கேட்காத செவி எல்லாம் செவியல்ல என்றே எண்ணத் தோன்றியது. 800 பக்கம் கொண்ட கலைச் சொற்கள் நூலினைத் தொகுத்து 250/-ரூபாய்க்குச் சென்ற ஆண்டு வெளியிட்ட செயல்பாடும் பலருக்குப்புதிய தகவலே ஆகும்

சென்னைப்பல்கலைக் கழகத்தின் கலைச் சொற்கள் தொகுப்பு முயற்சி இன்றளவும் பாதியிலேயேதான் நிற்கின்றது. என்பது நினவிற்கு வந்தது. அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தபின், ஒரே ஒரு பிரதிதான் சென்னைப் பல்கலைக்க் கழகத்தில் இருப்பதாகவும் ஒரு தகவல்  அண்மையில் கிடைத்தது.

யாரோ ஒரு நன்னெஞ்சில் உதித்த சிந்தனைக்குக் கைகொடுத்ததன் எதிரொலியாக அண்மையில் குழந்தைகள் கலைக் களஞ்சியம், மற்றும் பொதுக் கலைக்களஞ்சியம்
டிவிடி வடிவில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வோடு ஒப்பிட்டும் பார்த்தது.

ஆம், 250/-ரூபாய் விலையில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் கிடைக்கும். மேலும் ஒரு போனஸ் தகவல். நல்லதொரு ஆங்கிலம்-தமிழ் அகராதி 400/- விலை  மதிப்புடையது 300 ரூபாய்க்கே கிடைக்கும் சென்னைப் பல்கலையில்!

மேலும் அருட் தந்தை,அவர் குறிப்பிட்டதொரு  தகவல் அரியதோர் வரலாற்று நிகழ்வு.

தூய வளனார் கல்லூரியின் 125-ஆம் ஆண்டு விழாவின் அடையாளச் சின்னமாக உருவாக்கப்பட்ட  இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைத்தவர், அப்போதைய தமிழக அரசின் கூட்ட்டுறவுத்துறை அமைச்சராகத் திகழ்ந்த, சி. பா. ஆதித்தனார் என்ற சிறப்புத் தகவல்தான் அந்த வரலாற்று நிகழ்வு.

அன்றைய  நிகழ்விற்குத் தலைமை ஏற்றவர், அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் கருணாநிதி. ஆசியுரை வழங்கியவர் அருட்தந்தை சி.கே.சாமி!

மற்றும் அமைச்சர்கள் மாதவன், சுப்பையா, திரைத்துறைச் செல்வர்கள் ரவிச்சந்திரன், அசோகன்  ஆகியோர். இவர்கள் அனைவருமே தூய வளனார் கல்லூரிமனைகளின் இன்றைய அதிபர் அருட்தந்தையின் மாணாக்கர்கள்தான் என்பதையும் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

நடிகர்களைத் திரைத்துறைச் செல்வர்கள் என்றும், நடிகைகளைத் திரைத்துறைச் செல்விகள் என்றும்தான் அழைத்திடல் வேண்டும் என்பது எழுத்தாளர் திருமதி இராஜம் கிருஷ்ணனின் கருத்துக்களில் ஒன்று. களப்பணி ஆற்றி நூலகள் பல நூல்களை எழுதித் தமிழுக்குப் பகழ் சேர்த்தவர் இன்று சென்னையில் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் என்பதையும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அவர் அனைவராலும் நினைக்கப்பட்டு புகழின் உச்சத்தில் இருந்தபோது நான் பணியாற்றியது அஞசல்- தந்தித் துறையில்! அன்றைய தொலைதொடர்புத் திட்டப் பகுதியின் தென்மண்டலப் பொதுமேலாளர் திரு. ஏ.வி. எஸ் மணி அவர்களின் ஆதரவால் சுமார் ஈராண்டுகள் மட்டுமே  இயக்க முடிந்த இலக்கியச் சோலையின் செயலராக இருந்தபோது, அழைத்தபோதெல்லாம் வந்து இலக்கிய உரையாற்றிய இருவர்கள் இராஜம் கிருஷ்ணன், மற்றும் நினைவில் வாழும் மக்கள் எழுத்தாளர், சு. சமுத்திரம் ஆவர்.

அது சமயம் இராஜம் கிருஷ்ணன் அவர்களிடம் தமிழருக்கே உரித்தான பழக்க வழக்கத்தில் தங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன். “நீங்கள் எல்லோரும் தான் எனது குழந்தைகள்”  என்று பெருந்தன்மையோடு பதில் தந்தார்.

கல்வித் தொண்டையும்,  தமிழ் வளர்ச்சிப் பணியையும்  தடை இன்றித் தொடர்ந்திடும் அருட் திரு. சூ. ஜான் பிரிட்டோ அவர்கள், 125 ஆம் ஆண்டு விழாவில், சிறந்த கல்லூரி  மாணவருக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு  வழங்கிடும் திட்டத்தைத் துவக்கி வைத்ததோடு மட்டுமன்றி அன்றே அதனை நிறைவேற்றியதையும் குறிப்பிட்டபோது, இத்தகைய நல்லோர் வாழ்ந்திடும் காலத்தில் வாழ்வதற்காகவே நாம் எல்லோரும் பெருமை கொள்ளலாம் என்று நினைக்கத் தோன்றியது.

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழக விழாக்களுக்கு இலவசமாகவே சமுதாய மன்றத்தினைத் தொடர்ந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவரது உரையின் மிகமுக்கியமானவற்றுள் ஒன்றாகவும் அமைந்தது.

இந்த இதழியல் கழகம் செலவினஙகளுக்காக எவரிடமும் கையேந்துவதில்ல என்பதையும்ம், தஙகள் வருவாயின் ஒரு பகுதியிலேயே எதிர் கொள்வதையும் அறிந்தபோது அவர்கள் அனைவரையும் மனதார வணங்கி வாழ்த்தினேன்.

இன்றைய அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும்  இதே நடை முறயினைப் பின்பற்றினால் நாட்டில் ஊழலுக்கு இடமே இருக்காது. 

தாஙகள் பின்பற்றும் கோட்பாடுகளுக்காக இந்தச் செலவினை ஏற்றுக் கொள்ள இயலாத நிரந்தர வருவாய் உள்ளவர்கள் இனியேனும் வசூலில் ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்ப்போம். நல்லனவற்றிற்கு எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நமக்குப் பழகிப்போன ஒன்றுதானே!

தொகுப்பின் இரண்டாம் பகுதியில் தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் பொதுவுடைமைக் கருத்துகளைக்  காண்போம். 


Tamil Nadu Minister for Cooperation
In office
1968–1977
First Minister M. Karunanidhi
Preceded by S. Madhavan
Member of the Tamil Nadu Legislative Assembly
In office
1967–1977
Preceded by A. P. C. Veerabahu
Succeeded by K. Sathu Selvaraj
Constituency Srivaikuntam
In office
1957–1962
Preceded by K. T. Kosalram
Succeeded by K. T. Kosalram
Constituency Sathankulam
In office
1952–1957
Preceded by NA
Succeeded by M. S. Selvaraj
Constituency Tiruchendur
Speaker of the Tamil Nadu Legislative Assembly
In office
1967–1968
First Minister C. N. Annadurai
Preceded by S. Chellapandian
Succeeded by Pulavar K. Govindan
Member of Madras Legislative Council
In office
1947–1952
In office
1964–1967
Personal details
Born 27 September 1905
Kayamozhi, Tamil Nadu, India
Died 24 May 1981
Political party Kisan Mazdoor Praja Party
We Tamils party
Dravida Munnetra Kazhagam
Spouse(s) Govindammal
Relations K. P. Kandasamy (Son-in-Law)
K. P. K. Kumaran (Grandson)
Children Sivanthi Adithan
Ramachandra Adithan
One Daughter
Occupation Publisher

     இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்- நிகழ்ச்சித் தொகுப்புகள் தொடரும்

2 comments:

  1. வணக்கம் ராமசாமி சார்..பல்சுவை ஆக்கங்கள்.பயனுள்ள ஊக்கங்கள்.உங்கள் வலைப்பூ அருமையான வாழைப்பூ.சுவையாய் உள்ளது வாசிக்க.உங்கள் தூவல் கொண்டு ஒரு தனித்துவமான தொடர் எழுதலாமே.தொடர்க உங்கள் இலக்கயத் தொண்டு.வாழ்த்துக்கள்.- நேசமிகு எஸ்.ராஜகுமாரன் 06-02-2012

    ReplyDelete
  2. ஐயா, நன்றி தஙகள், யோசனைக்கு.

    ஆனால் எழுதுவது எல்லாமே எழுத்தாகாது. ” “உன்கண்ணீர் நீர் வடிந்தால் என்று எல்லோரும் எழுதிவிடலாம்.” அதுதான் இன்று பலரால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    தமிழின் பெயரால் மின்தமிழ்ப் பயிற்சியால் எழும் சிந்தனைகள், பாரதியின் புதிய ஆத்திசூடிக்கு அடுத்த கட்டத்திற்கு தமிழினத்தை முன்னெடுத்துச் செல்ல்லும்படியாக இருத்தல் வேண்டும். சிலரால் மட்டுமே இது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

    அவர்களை இனம் கண்டு ஐக்கியமாக்கும் பணியே தொடர்கின்றது. இவ்வாண்டின் இறுதிக்குள் என் முயற்சிகளின் வெற்றிக்குரிய அடித்தளம் அமைக்கப்படும். வெளிச்சமும் ஆகும்!

    எனவே, என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று எழுதக் கூடிய சிந்தனை உடையவர்களை மட்டும் அறிமுகப்படுத்துங்கள்.

    ஏன் அனானிமஸ் ஆக வரவேண்டும். தங்கள் இணையத்தின் மூலமாகவே வரலாமே!.

    தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிஙம் ஆற்றிய உரையிலிருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்கள் இரண்டாம் பகுதியில் தொடர்ந்து வெளிவரும்.

    ஆக, மொத்தம் 4 கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல அரிய தகவல்களை உள்ளடகியதாக இருக்கும். பிழையின்றி எழுதுங்கள்! நண்பரே!

    ReplyDelete

Kindly post a comment.