Friday, March 2, 2012

பிரித்தானியா மக்களுக்கு அவசர வேண்டுகோள்

admin's picture



பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர்.

இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள்.

 ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்

.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள்.
3 லட்சம் தமிழர்களிடம் இருந்து இந்தப் படிவங்கள் பிரித்தானிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படும்போது,

அவர்கள் அடுத்த முறை இப்படிவத்தை அச்சிடும்போது, ஆசியாவுக்கு கீழே உள்ள நாடுகளின் பட்டியலில், தமிழ் என்று அல்லது தமிழீழம் என்று அச்சிடவேண்டிய நிலை தானாகவே தோன்றும்.

அதனை சுமார் 60 மில்லியன் வேற்றின மக்கள் பார்ப்பார்கள். எமது தமிழ் இனமும் ஒரு தேசிய இனமாக பிரித்தானியாவில் அங்கிகாரம் பெறுவதற்கு இது ஒரு முதல் அடிக்கல்லாக அமையும். எனவே அனைத்துத் தமிழர்களும் இதனைப் பின்பற்றுமாறு அனைவரையும் தாழ்மையோடு வேண்டி நிற்கிறோம்.


பிரித்தானியத் தமிழர்களின் பலம் அப்போது தான் வெளியுலகத்துக்கும், பிரித்தானிய அரசுக்கும் புலப்படும். எமது இனம் தலை நிமிர தமிழர்களே விரைந்து செயல்படுங்கள்.




Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

 நன்றி  :- http://www.tamil.net/call_for_british_tamils

0 comments:

Post a Comment

Kindly post a comment.