Tuesday, March 6, 2012

சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், 4-ஆம் கருத்தரங்ககம், தொகுப்பு ( 2 ) 

(  கருத்தரங்க நிகழ்வுகளுக்கு இலவசமாக இடம் மற்றும் மின்சாரம் வழங்கியதுடன், மேலும் தொடர்ந்து வழங்கவும் போகும் கல்வி நிறுவனம், )

தமிழ்த் திணை இணைய இதழின் சார்பு அமைப்பாகச் செயல்படுகின்றது, சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்.

தனது நான்காம் கருத்தரஙகத்திற்கு,  “இதழியல் வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்”  என்னும் தலைப்பினை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது..

தொடக்க விழாவிற்கு, முனைவர், தி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
தி. மா.சரவணன் வரவேற்புரை வழங்கினார்.வெளியிடப்பட்ட ஆய்வு நூலை, தீக்கதிர் ஆசிரியர், மதுக்கூர் இராமலிஙகம் பெற்றுக்கொண்டு மைய உரை நிகழ்த்தினார். ஈ.வே.ரா. கல்லூரி முதல்வர் பழ. கெளதமன் வாழ்த்துரையும், முனைவர் கா.வாசுதேவன் நன்றியுரையும் நல்கியதும் காலையில் தொடக்க விழா நிகழ்வுகளாக அமைந்தன.

தீக்கதிர் ஆசிரியர், மதுக்கூர் இராமலிஙகம் ஆற்றிய உரை :-

மேடையில் அருட்திரு.முனைவர் சூ.ஜான்பிரிட்டோ அவர்களின் வலது கைப்புறம் அமர்ந்திருப்பவர் விழாத்தலைவர் :- தி.நெடுஞ்செழியன்
.
இடது கைப்புறம் அமர்ந்திருப்பவர் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிஙம்.
.
இடது சாரி இயக்கத்திலிருந்து வருகை தந்துள்ளவர் என்பதால் தனக்கு இடதுபுறம் அமர வைத்துக்கொண்டாரோ என்று எண்ணவும் தோன்றியது.

மதுரையில் எழுத்தாணிக்காரத் தெரு என்றொரு உண்டென்றும், அங்கே ஓலைச்ச்சுவடிகளைக் கொடுத்தால், இலவசமாகப் பிரதி எடுத்துத் தரும் வழக்கம் இருந்ததென்ற தகவலைத் தந்து உரையைத் துவக்கினார், தீக்கதிர் ஆசிரியர்.

இவரது உரையின் சிறப்பம்சம் , இன , மத, மொழி வேற்றுமைகளைத் தூண்டி விடுவோருக்குத் தமிழகத்தில் இனி இடமில்லை என்ற நம்பிக்கையை நெஞ்சில் விதைத்ததுதான்!

மக்களுக்கான இலக்கியமே என்றும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்ட அவர்,  ஜாக்கட் கிழியக் கிழிய  கிணற்றில் நீர் இறைக்கும் பெண்ணைப் பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணின்  தேகம் தெரிந்தால் அது பிற்போக்குத் தனம் என்றும், அந்தப் பெண் வாழக்கூடிய தேசத்தின் நிலை தெரியச் சிந்திக்கும் ஆற்றலே முற்போக்கு என்றும் விளக்கம் தந்தபோது   நினைவில் வாழும் பிரபல எழுத்தாளர் லா.ச. இராமாமிர்தம் வார்த்தைகளில் சொல்லப்போனால்  அவையில் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவியது.

பஞச பாண்டவர் ஐவரையும்,  கெளவரர்கள் நூறு பேரையும்  குருகுலக் கல்வியில் சேர்த்துக் கொண்டு , ஏகலைவனுக்கு இடம் தர மறுத்த காலத்திலிருந்தே   இன வேற்றுமை, ஏற்றத் தாழ்வு, தீண்டாமை  என்பவை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கதையாகவே இருந்து வருகின்றனவென்றும் குறிப்பிட்டார்..

மேற்படி நூற்றி ஐந்து பேருக்கும்  துரோணர்  குருகுலக் கல்வி அளித்தபோது மரத்தின் பின்னால் மறைந்து நின்று கேட்ட ஏகலைவன்தான், அர்ச்சுனனை விட வில்வித்தையில் திறமை உடையவராகத் திகழ்ந்தான்.  நேரடியாகக் கற்றுக் கொண்ட அர்ச்சுனனை விட, அரச குலத்தில் பிறந்தவனை விட, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன், முதன்மை நிலையில் சமூகத்தில் வலம் வரக்கூடாது என்று தீர்மானித்தார்.

எப்படிக் கற்றாய்? என்று ஏகலைவனிடம்  விசாரிக்கின்றார். நீங்கள் வகுப்பெடுக்கும்போது மரத்தின் பின்னால் ஒழிந்து நின்று உற்றுக் கேட்டே திறமையினை வளர்த்துக் கொண்டேன் என்ற பதில் கிடைத்தது, ஏகலைவனிடமிருந்து!

 கட்டை விரல் இருந்தால்தானே அம்பெய்ய முடியும்  என்ற துரோணரின் புத்திச்சாலியான மூளை ஒரு முடிவிற்கு வந்தது. சூழ்ச்சி செய்தது குருவிற்குக் காணிக்கை என்ற முலாம் பூசியது.  கட்டை விரலை ரத்தம் சொட்டச் சொட்டப் பெற்றுக் கொண்டார்,  துரோணர் !.

அப்பாவி ஏகலைவன் மறுத்திருந்தாலோ / எதிர்த்திருந்தாலோ வரலாறே மாறி இருக்கும். அம்பேத்கர், ஈவே.ரா,  நாராயண குரு,  போன்றோருக்கு  வேலையே இருந்திருக்காது.

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குச் செய்த துரோகம்  துரோணரின் குரு காணிக்கை நாடகம். என்று விளக்கிய போது பலருக்கு இப்படியும் ஓர் பார்வை இருக்கின்றதா என்ற எண்ணமே தோன்றியது..

நரியைக் குறிவைத்து அர்ச்சுனன் எய்த அம்பு நரியின் வயிற்றில் பட்டதால், நரி இறந்திருக்க முடியாதே என்ற ஐயப்பாட்டால், அருகில் சென்று பார்க்கின்றார்  துரோணர்.

 வாயில் தைத்த அம்பினால்தான்  மூச்சு விட முடியாமல்தான் நரியின் உயிர்  பிரிந்திருக்கிறதென்ற  உண்மை தெரியவந்தது.  :அந்த அம்பை எய்தவன் ஏகலைவன் என்பதையும் கண்டு கொண்டார்.

 குரு காணிக்கை என்ற சூழ்ச்சி வலை பின்னிக் கட்டை விரலைப் பறித்துக் கொண்ட கதையைச்  சொன்னபோது,

 துரோணர்- ஏகலைவன் கதையையும்  இடஒதுக்கீட்டுப் பிரச்சினையையும்   முடிச்சுப் போட்டுப்  பார்த்துக்  கொண்டது உள்ளம்..

(  1967-ல் மூதறிஞர் இராஜாஜிக்குக் காங்கிரஸ் மீது  அளப்பரிய கோபம் வந்தது. அடிப்படைக் காரணம், சத்திய மூர்த்தி ஐயரிடம்  உனது சீடன் காமரஜரைக் கைகழுவி விடு என்று வற்புறுத்தினார். சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சத்திய மூர்த்தி மறுத்தார். வெளியேறினார், இராஜாஜி! சுதந்திராக் கட்சியினை அமைத்தார். எண்ணம் ஈடேறவில்லை. கூட்டணி தத்துவத்தை விதைத்தார்.கடவுள் மறுப்பு இயக்கம்,  ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றவரிகளை மட்டும் சொந்தமாக்கிக் கொண்டது.

அந்த வரிகளுக்குச் சொந்தக்காரரான திருமூலர் பெயரை ஓரிடத்திலாவது பயன் படுத்கியதுண்டா ? இந்தத் தி. மு. க. வினர். கொள்கைகளால் பெற்ற வெற்றி என்று பிரகடனப்படுத்திக் கொண்டது. மக்கள் பத்திரிக்கையான தினத்தந்தியையும் வலை பேசிப் பிடித்து கக்குள் போட்டுக் கொண்டது. பட்டி தொட்டிகள் எல்லாம் தந்தி போகும் சூட்சுமம் தெரிந்ததால் ).


எந்தப் பின்புலமும் இல்லாமல் தேசத்தொண்டிற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட கல்வித் தந்தை காமராஜர் இல்லை என்றால், இன்று

1948 மற்றும் 1950 களில் பிறந்தோர்  மற்றும் அதற்குப் பின்னர்  பூமிப் பந்தில் தமிழ் நாட்டில் பிறந்தோர் பலரின் ( உயர் ஜாதி அல்லாத பிரிவினர்) வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.  ஆம் கல்வியை இலவசமாக்கினார். பள்ளிக்கு வரும்  மாணாக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திட மதிய உணவுத் திட்டத்தைக்  கொண்டு வந்தார்.

அவருக்கு வலக்கரமாகத் திகழ்ந்தவர்  சென்னைப் பல்கலைக் முன்னாள்  துணை வேந்தர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்.அவரது ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக” சில பக்கங்கள்தான் இருக்கும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகஙளில் கூட இருக்கலாம். படித்துப் பாருங்கள்

படிக்காத மேதை காமராஜரின் இருபுறமும் நடந்து செல்லும் படித்த மேதைகளின் படத்தை அதனால்தான் இங்கே இடம் பெறச் செய்துள்ள்ளேன்.

தகுதி, திறமை, மோசடி என்று படிக்காத மேதை காமராஜரால் எழுதப்பட்ட மிகச் சிறிய நூலொன்றையும் நினவுடுத்திச் சிந்திக்கவும் தூண்டியது. 

தமிழ் இலக்கிய வளர்ச்சி என்பதைத் திராவிட இயக்கம், தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்ற  வரையறைகளின்  அடிப்படையில் ஆராய வேண்டும் என்று சொன்னபோது  எழுதப்பட்ட கட்டுரைகள்  சமூகப் பயன்பாட்டிற்குப்  பயணிக்க வேண்டிய  தூரம் அதிகம் என்பதையும் உணர்த்தியது.

பாரதிக்கும், கம்பனுக்கும் தொண்டராகவும் வாழ்ந்த ப.ஜீவானந்தம் அவர்களுக்கு அஞசல் தலை வெளியிடப்படும்  காட்சி. தமிழில் ப. ஜீவானந்தம் என்ற பெயர் அஞசல் தலையில் P  என்ற முதலெழுத்துடன் இடம்பெற்றுள்ளது. PA. என்றிருந்தால் ப. என்றும், PAA என்றிருந்தால் பா என்றும்  பொருள் கொள்ளும் வழக்கத்தை நாம் பின்பற்றிடல் வேண்டும்.

அப்படிப் பின்பற்றும் முறையை நாம் கடைப்பிடிக்காத காரணத்தால், ப.ஜீவானந்தம் , ஆங்கிலத்த்ல் P.JEEVANANTHAM  ஆக்கப்பட்டார். அப்போழுதே நான் அஞ்சினேன், இது பிற்காலத்தில் தமிழில் குழப்பத்தை விளைவிக்கும் என்று. 

அதே போன்று, அவர் ஆரம்பித்த ஜனசக்தியிலேயே, சில நாட்களுக்குப். பின் ஜீவானந்தத்தைத் தமிழில் குறிப்பிட வந்த, செய்தியாளர்,  பி. ஜீவானந்தம் என்று எழுதிவிட்டார். மாபெரும் தலவரைப் பல நேரங்களில்  மறந்தே போகின்றோம். 

”தேசத்தின் சொத்து” என்று  மகாத்மாவால் போற்றப்பட்ட ஜீவாவின் இனிஷியலையே மாற்றிவிட்டனர் அவர்களைப் பின் தொடர்ந்து அரசியல் நடத்துவோர். வருந்துவது மற்றும் கடிதம் எழுதுவது மட்டும்தான் என்னால் செய்ய முடிந்தது.

       ப.ஜீவானந்தம், ப.ஜீவானந்தம், ப.ஜீவானந்தம், ப.ஜீவானந்தம்,

Chief Post Master- General, Shanthi Nair,releasing a stamp on Communist leader P.Jeevanandam in Chennai on Saturday. (From left) CPI leaders , D. Pandian, R. Raja, MP, N. Sankaraiah, C.S. Subramaniam , Parvathi Krishnan and R.Nallakannu are in the picture. Photo: R. Shivaji Rao

Jeeva
BornAugust 21, 1907
Boothapandi, Kanyakumari District, Tamilnadu
DiedJanuary 18, 1963
Chennai, Tamilnadu
OccupationSocialist Leader and Social Reformer
பொதுவுடைமை இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கும், சமூகப் பாதுகாப்பிற்கும் தொண்டாற்றி வருவதை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது என்று ஒரு பொதுவுடைமைவாதியாகத் தன்னை நன்கு அடையாளம் காட்டினார்.

புரட்சி , பின்னர் தொழிலாளர், அதன் பின்னர் புதிய உலகம் பத்திரிக்கையைத் துவக்கி நடத்திய தோழர் சிங்காரவேலரைப் பற்றியும் நினைவு படுத்தினார்.
www.singaravelar.com )  சென்றால் பல தகவல்கள் கிடைக்கும். சென்னை விவேகானந்தர் இல்லம் 99 ஆண்டுகளுக்கு அரசால் குத்தகைஇகு இடப்பட்டுள்ள இடம். இவை எல்லாம் சிங்காரவேலரின் மூதையரும்,  அவர்கள் தடத்தில் சிங்காரவேலரும்  உரிமையோடு பயன்படுத்திய உடைமகள்.
(  Poornimaa Publication , 67/1, (New No.112) th Karaneeswarar Koil Street,  
Mylapore, Chennai - 600 004, INDIA.Phone : +91-44-24612137
Email: poornimaapublication@yahoo.co.in )  இன்று யார் யார் கையிலோ நடமாடுகின்றன.
GOD FATHER OF INDIAN LABOUR  என்ற பெருமக்குரியவரைப்பற்றி தீக்கதிர் ஆசிரியர் மறக்காமல் குறிப்பிட்டது மனமகிழ்ச்சிக்குரியதொரு செய்தியாகும்.

பொதுவுடைமை   வாதிகளின் பணிகளும்  எவருக்கும் எந்த வகையிலும் இளத்ததல்ல எனவுரைத்ததோடு,  பேராசிரியர், நா.வானமாமலையின் ஆராய்ச்சி காலாண்டிதழின் சமூக நலக் கண்ணோட்டத்துடன் கூடிய ஆய்வினையும் நினைவு கூர்ந்தார்.

நடுவு நிலைமை என்று ஒன்று எப்போதுமே இருக்க முடியாது. ஒன்று அடித்தவன் பக்கம் இருக்க வேண்டும் அல்லது அடிபடுபவன் பக்கம் இருத்தல் வேண்டும் என்பதுதான் சரியான நிலைமை. .நடுவு நிலைமைச் செயல்பாடு என்று உலகில் எங்குமே  இல்லை என்பதே என்பதெல்லாம் போலித்தனம் என்பதையும் விளக்கினார்.  கூட்டத்தில் பலருக்குத்  தினமணியின் ஞாபகம் வந்தது.  வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையில், முதலாவது கட்டுரையின் தலைப்பு, ” தினமணியில் தமிழ்மணி” என்பதால் இருக்கக் கூடும்.

மயிலாடுதுறைக்குப்  பக்கத்தில்  உள்ள கல்லூரில் தான் படித்தபோது நிர்வாகத்தால் மதிக்கப்படும் நன்மாணக்கராகவே திகழ்ந்தேன் என்று சொன்னபோதே  மறக்க முடியாததொரு வாழ்க்கை நினைவினைப் பகிர்ந்து கொள்ளப் போகின்றார் என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. கல்லூரியினின்றும் வெளிவந்தபின் பொதுவுடமைக் கொள்கைகளை பின் பற்ற ஆரம்பித்ததால், அந்த நிர்வாகம் இவரைப்  பேச்சாளராக  கல்லூரி வளாகத்திற்குள்  அனுமதிக்க மறுத்ததையும், பின்னர் 20 ஆண்டுகளுக்குப்பின் தாம் படித்த அதே கல்லூரியில் பேசிட வாய்ப்புத் தந்தார்கள் என்பதையும் மன மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதே கல்லூரி வளாகத்திற்குள் தான் வருவது இது இரண்டாவது  முறை  என்றும் கூறி மகிழ்ந்தார்.

இந்த இடத்தில் ஒரே ஒரு உண்மைச் சூழலைச்  சொல்லியே ஆகவேண்டும். பேசிடும் அரசியல் தலைவர்கள் கூட்டத்தினை அவரைப் பின் தொடர்ந்து நான்கைந்து  கூட்டங்களைத் தொடர்ந்து கேளுங்கள். எல்லாப்பேச்சுக்களுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

மிஞ்சிப்போனால் அந்தப் பகுதியின் பிரச்சினைகள், கூட்டத்திற்கு வரும் பொழுது படிதத செய்தித்தாளில் படித்த புதிய செய்திகள், காரி வரும் பொழுது அழைத்து வருவோர் தரும் தகவல்கள்
 (  சொல்லும் நபரை பொறுத்துத்தான் தவல்கள் ஏற்றுக் கொள்ளப்படும், இல்லை என்றால் அதுவே அவர்களுக்குத் தீராத தலைவலியாகிவிடும்  )

மேலும் திராவிட இயக்கம் தந்த மற்றொரு தலைவலி, அச்சடிக்கப்பட்ட விளம்ப்ர  நோட்டீசுகளில் உள்ள பெயர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளுடன் குறிப்பிட்டு விட்டு, எனக்குப் பின் பல தலைவர்கள் பேச இருப்பதால், இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.என்ற கோமாளித்தனம் வேறு.

ஆனால், பொதுவுடமைக் கட்சிக்காரர்களிடம் இந்த ஒரே பேச்சு ” ஃபார்முலா”
கிடையவே கிடையாது. ஏனெனில் அவர்கள் பெற்ற பயிற்சி அப்படி. ஒரே மேடையில் ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மூவர் பேச நேர்ந்து விட்டால், அவர்களுக்குள்ளாகவெ  பேச வேண்டிய பொருள் குறித்து முடிவு செய்து கொண்டு விடுவார்கள். வாய் மொழிமூலம் பேச முடியாவிட்டால், வருகை தந்துள்ள மூத்தவர் எழுதிய துண்டுச் சீட்டுகள் முடிவெடுத்துவிடும். அதற்கும் வழி இல்லை என்றால் கண்ணசைவுகளே  முடிவு செய்துவிடும்.


தமிழ்க்கடல் கண்ணன், தமிழருவி மணியன், அந்தக்காலத் திராவிட இயக்கத் தலைவர்கள்  புலவர். க.முருகேசன் போன்றோர், கலிங்கத்துப் பட்டி தந்த தவப்ப்புதல்வன்  வை.கோ., இலங்கத்த் தமிழர்களுக்காவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பழ.நெடுமாறன் போன்றோர் ( மதுரையில் இந்திரா காந்தியின் உயிரைத் தி.மு.க விடமிருந்து காப்பாற்றியவர் ) போன்றோர் விதி விலக்கானவர்கள்.

சற்றேறக்குறைய தோழர் .மதுக்கூர் இராமலிஙம் பேசியனவற்றில் முக்கியமான பகுதிகளை எல்லாம் எழுதிவிட்டேன் என்றே எண்ணுகின்றேன்.

.மேலுள்ள பட்த்தில் உள்ள இருவரில் இடதுபுறம் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பவர், புலவர், பி.கன்னையா. மானுட விசுவாசி.
அவர் சொன்ன இரு வரிகளைக் கீழே குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றேன்.

 கரும்புபோல் கொல்லப் பயன்படுவோர் கீழோர்;
கரும்புபோல் சொல்லப் பயன்படுவோர் மேலோர்:

மேற்கண்ட வரிகளுடன் தங்களுக்குத் தெரிந்த நபர்களையோ அல்லது அரசியல்  தலைவர்களையோ சம்பந்தப்படுத்தி ஆய்வு செய்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வாழ்கக்கு நல்லது.

தோல்வி அடையும் போது மட்டும் ஆரியர், வடவர், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்  என்ற  சில தலைவர்களிடம்  சொல் விளையாட்டுக்கள் சிலம்பமாடுகின்றனவே, அவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

அவர்கள் குறிப்பிடும் ஆதிக்க சாதியினர் பேசுவதும் தமிழ்தான். வாழ்வதும் தமிழ் நாட்டில்தான். அவர்களால் பலன்பெற்ற பிற சாதியினரும் ஏராளம் உண்டு, தமிழ் நாட்டில். பாதிக்கப்பட்டால்  விலகிப்போய்த்தான் அவர்களுக்குப் பழக்கமே தவிர, தூண்டிவிட்டுப் பழக்கமில்லை. மறைந்துவரும்  இன, மத, மொழி உணர்வுகளைத் தூண்டிவிடும் வேலை இனி வேண்டவே வேண்டாம்.

கடா மார்க் சாராயத்தை அறிமுகப்படுத்தி வருங்காலத் தலைமுறையினரையே சீரழித்த கூட்டத்தவருக்கு  தமிழையும், தமிழினத்தையும்  பற்றிப் பேசிடவே தகுதி கிடையாது. 

தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்தின் கோரிக்கையை சி.பா. ஆதித்தனார்  அனைத்திந்திய இதழியல் கழகத்தின் ஆதார சுருதியாகத் திகழ்பவர்கள்,  நிறைவேற்ற வேண்டும் என்று நான் வழி மொழிகின்றேன்.

ஆம்! குறுகிய காலத் திட்டத்தில், செப்டம்பர் 14,15,16 தேதிகளில்  இலக்கிய வளர்ச்சியில்  திராவிட தமிழ்  இதழ்களின் பங்கு என்ற ஆய்வுடன், தேசிய இயக்கங்களின் பங்கு, மற்றும், பொதுவுடைமை இயக்கங்களின் பங்கு என்ற ஆய்வுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அத்தகைய நிலைப்பாடு எடுப்பதுதான்   திராவிடக் கொள்கைகளைப் பட்டி தொட்டிகளெங்கும் பரவச்செய்த தினத்தந்தியின் நிறுவனர்  சி.பா.  ஆதித்தனாரின் பெயரை வைத்திருப்பதற்குப் பொறுத்தமாக இருக்கும்.

தினத்தந்தி
Dhinathanthi.gif
வகை தினசரி நாளிதழ்
வடிவம் பத்திரிக்கை, இணையத்தளம்

உரிமையாளர்கள்
தொடக்கம் 1942
மொழி தமிழ்
தலைமையகம் சென்னைதமிழ்நாடு
விற்பனை 917,075 (யூலை-டிசம்பர் 2007)[1]

இணையம்: http://www.dailythanthi.com

    திராவிட இயக்கச் சிந்தனையாளர் 

புலவர் க. முருகேசனின் பேச்சுரைகள் 
           
                                                                                       மூன்றாம் தொகுப்பில் தொடரும்.

 .

2 comments:

 1. ear Sir,

  Saw your recent post with mention on Anthony and myself. THanks for your love and affection, as ever.

  Actually, as such, I can move around and go anywhere. But, one out of 5 times, I might fall severely sick. Becos of my low immunity (as a result of 'Colitis' for more than a decade since 1990), I catch infection one out of 5 times. To avoid these kinds of severe infections, I do not move out unless otherwise it is essential (for e.g., taking my son to doctor, seeing my mother when she is ill, etc.).

  Since I do not move around since the past many years, sudden long-distance travelling (if it becomes essential) sometimes causes vomiting, discomfort in stomach, etc.

  By the by, one humble request, my dear sir. Please do not mistake me for this.
  i.e. when writing mails to any individual or online group, kindly do not mention my name in Cc. Becos, if you do so, the recipient might think that I have some indirect connection with whatever you write. If you are interested to let me know what you write to others, then kindly forward your mail to me separately. Whenever tims permits, I will read it. One of your recent mails - you have forwarded separately (to me and anna kannan). That is fine. But even in such cases, kindly forward any mails only to me. As said in one of my earlier mails, I am keeping aloof from all so-called Tamil bloggers, writers, sites, online groups, etc. In fact, if you know any individual who is interested in VOLUNTEERING to create FREE modules (whichever I request them to make) for Azhagi on a completely non-obligatory basis, kindly let me know. If I find that person noble enough to offer free support also, then, at an opportune time in future, I can hand over Azhagi completely to him.

  Kindly ack. receipt of this mail.

  love and kind regards,
  viswanathan :: india.azhagi.com :: service to mankind

  ReplyDelete
 2. மிகச்சிறந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். இதழியல் தொடர்பாக நடந்த கருத்தரங்க நிகழ்வை செம்மையாக கருத்துக்கோர்வையாக வெளியிடுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் தமிழ்ப்பணி, இலக்கியப்பணித் தொடரவேண்டும்.

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்.

  ReplyDelete

Kindly post a comment.