Wednesday, March 7, 2012

சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், 4-ஆம் கருத்தரங்ககம், தொகுப்பு ( 3 ) )
 


ஸ்ரீ ரஙகம் சுஜாதா என்கின்ற எஸ்.ரஙராஜன், முன்னாள் குடியரசுத்  தலைவர்
அப்துல்கலாம் போன்ற புகழ் பெற்ற்றோர் பலரை உருவாகிய கல்லூரி.

சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழ்கம் நிகழ்த்திய 4 ஆம் கருத்தரஙகம்ம்,  இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் என்பதை ஆய்படு பொருளாகக் கொண்டது.

நிறைவு விழா மாலை நான்கு மணிக்குத் துவங்கியது,. கு.அண்ணதுரை தலைமையும், வே,கண்ணையன் முன்னிலையும்  வகிக்க, புலவர், க. முருகேசன் வாழ்த்துரை வழங்கினார்.


மேடையில் தோளில் துண்டு போட்டு அமர்ந்திருப்பவர்தான், திராவிட இய்க்கச் சிந்தனையாளர், புலவர். க.முருகேசன்.

இவரை, அண்ணா, அருகில் அழத்துவரச் செய்து  அப்படித்தான் உணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறியதுடன்  முதுகில் தட்டிப் பாராட்டினாராம். எதற்காக? அண்ண திராவிட நாடுக் கொள்கையக் கைவிடுகின்றார்,  அப்பொழுது  இயக்கத் தலைவர்கள் சுதந்திரமாக இயங்கினர்.தனித்னியாகவும் பத்திரிக்கை நடத்தினர், ஆசைத்தம்பியை அறியாதவர் உண்டோ? அவர் தாம் நடத்திய தனியரசு என்னும் பேப்பரில், தி. நா. கொள்கையை கைவிட்ட அண்ணாவின்  படத்தைத் தலை கீழாக அச்சிட்டுத் தன் எதிர்ப்பக் காட்டிக்கொண்டார், துணிச்சலுடன்.

அப்போதெல்லாம் காலில் விழும்  கலாச்சாரம் இல்லை. தலைவரின் கண்ணசைப்பினைப் பார்த்துச் செயலாற்ற வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. தி.மு.க.வின் வளர்ச்சிக்கும் பஞசமில்லை.

”காகிதப் பூ மணக்காது; காங்கிரஸ் அமிர்தம் இனிக்காது” , ”கக்கா மாணவர்கள் என்ன கொக்கா சுட்டுத்தள்ள” என்பன போன்ற சுவரொட்டிகளும், சுவர் எழுத்துக்களும் தமிழகத்தில் வலம் வந்த காலம்.

ஆசைத்தம்மியைப் போன்றே ஒரு சிறுவனும் தி.நா. கொள்கையைக் கைவிட்டதற்குத் தன் எதிர்ப்பினைத் தெரிவிக்க விரும்பினான். ஒரு அஞ்சல் அட்டைய எடுத்தான் “அண்ணா நீர் ஓர் கோழை ” என்று எழுதிக்  கையெழுத்திட்டான். அண்ணாவிற்கு அஞலில் அனுப்பி வைத்தான். அண்ணா, காமாட்சியுடன் திருச்சிக்குச் சுற்றுலா வரும் பொழுதுதான், அந்தப் பையனை அழைத்து முதுகில் தட்டிப் பாராட்டிய சம்பம்தான் மேலே சொல்லப்பட்டது/

அப்படி இளமையிலேயே தீரத்துடனும் துணிச்சலுடனும், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்குத் துரோகம் பண்ணாமல், மொட்டைக் கடிதாசி போடாத வீரச் / சிறுவன் / இளஞ்ன்தான், இன்றைய, புலவர், க.முருகேசன். என்று அவரை அறிமுகப்படுத்தியவர் சொன்னபோது, அவையில் கர ஒலியின் முழக்கம்  அதிகம் கேட்டது

அவர் பேச்சை கேட்டவுடன் எனக்குத் தோன்றியது,  ( அரியணையில் )
உள்ளே இருக்க வேண்டியவர்கள், வெளியே இருக்கின்றார்கள். என்ற அனுபவ மொழிகள்தான். இதனை ஜெயகாந்தன் வேறு உதாரணத்திற்குப் பயபடுத்தி எழுதியுள்ளார்.

1912-ல் நடேசன் திராவிட இயக்கம் அமைத்த்திட்ட தகவலைச் சொல்லித் தமது உரையைத் துவக்கினார். அப்போதெல்லாம் கல்லூரிப்படிப்புகள் சென்னையிலும் ,திருச்சியிலும் மட்டும்தான். கல்லூரியில் விடுதிகள் கிடையாது. வெளியில் தனியார் நடத்திடும் விடுதிகள்தான். அவையும் பார்பப்னரால் நடத்தப் பட்டவை. வ்டுதிகளிலிருந்து உணவை விலைக்கு வாங்கிக் கொண்டு, தாம் தங்கிருத்த இடத்திற்கோ / கல்வியகஙளுக்கோ எடுத்துச் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் மானுடம் தீட்டு. அவன் கொடுக்கும் காசு தீட்டல்ல;

சர்.பி.டி.தியாகராஜர், டி.எம். நாயர், ( சாலைப் பெயர்களில் சாதியை ஒழில்லின்றேன் என்று சொல்லி நாயரை எடுத்து விட்டார்கள். சென்னையில் அந்தத் தெருவின் பெயர் சாலை என்றிருப்பததைப் பல முறை பார்த்திருக்கின்றேன் )

தற்போது சென்னையில் சாலையின் பெயர்கக்காக அட்டகாசமான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 1948-ல் பெற்றோம்  சுதந்திரம்.. தெருப்பெயர்களைத் தெளிவாக எழுதி வக்க இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று, பெருமிதமா கொள்ள முடியும்?

1916-ல் தென்னிந்திய நல உரிமைச் சஙகம் கண்டனர். ஆங்கிலத்தில், ஜஸ்டிஸ், தமிழில் திராவிடம், தெலுங்கில் திராவிடப் பிரகாசிகா பத்திரிக்கைகள் துவக்கி நடத்தப்பட்டன. ஜஸ்டிஸ் பத்திரிகையினை நடத்திய காரணத்தால் அது நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் நிதியமச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்தார். என்ற தகவையும் தந்தார்.

பின்னர் ஈ.வே.ரா. இயக்கத்திற்குள் வருகின்றார். புரட்சி, குடியரசு, விடுதலை, உண்மை ஆகிய பத்திரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் துவங்கி நடத்தப்பட்டன். அந்தந்தக் காலக் கடத்திற்கு ஏற்றவாறு செய்திகளும் கட்டுரைகளும் இடம் பெற்றன.

பேரறிஞர் அன்ணாவின்  திராவிடநாடு சக்கைப்போடு  போட்ட கதையினையும்  எடுத்துரைத்தார். அதில் அவர் தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அவற்ற்ற்கு அவர் இட்ட தலைப்புகள் மக்களை மிகவும் கவர்ந்தன்.

1955-ல்தான் மொழிவ்ழி மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகியவற்றை இணைத்து தட்சிணப் பிரவேசிகா என்று ஒரே மாநிலமாக  அமைத்திட நேரு போன்றோர் விரும்பினர். முதல்வராக இருந்த காமராஜர் இதனை முற்றிலுமாக மறுத்தார்.

 ஆனால், மூதறிஞர் இராஜாஜி, தட்சிணப்  பிரவேசிகா திட்டத்தினை ஆதரித்தார். காமராஜரின் மந்திரி சபையில் இருந்துகொண்டே, இராஜாஜியின் நண்பர்  சி.சுப்பிரமணியம் காமராஜரின் கருத்துக்கு எதிராகச் செயல்பட்டார். காமராஜரால் உதவாக்கரை அமைச்சர் என்றும்  விமர்சிக்கப்பட்டார்.

அண்ணாவிற்குப் பத்திரிக்கையில் எழுதிட புதியதோர்  கதைக்கான  கரு கிடைத்து விட்டது.  மாநிலத்தில் மந்திரி பதவியையும்  விட முடியவில்லை; நேருவின்  மத்திய  அமைசரவையிலும் இடம் பிடிக்க முடியவில்லை இருதலைக் கொள்ளி எறும்பெனத் துடித்தார், சி.சுப்பிரமணியன்

மாமியார் வீட்டில் மருத முத்து என்ற உருவகக் கதையாக்கப் பட்டது அண்ணாவால்.!

பொதுவாக மாமியார் வீட்டிற்கு வரும் மருமகன்கள் தமக்குக் கொடுக்கப்படும் பொருட்கள் / உணவுப் பொருட்கள் / தின்பண்டங்கள் தனக்கும் பிடித்தவையாக இருந்தால் கூட வறட்டுக் கவுரவத்திற்காக ஏதேனும் ஒரு காரணம் சொல்லி  வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். ஆனால் மருமகனால் மறுக்கப்பட்டு, மாமியார் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு / தின்பண்டங்களின் வாசனை மூக்கைத் தொந்தரவு செய்யும். பசியையும் தூண்டும்.

மாப்பிள்ளை மருதமுத்துவிற்கும் அதே நில ஏற்பட்டது, தனது மாமியார், வீட்டி.ல்!  வீட்டினுள் நுழைந்த மாப்பிள்ளையை வாய் நிறைய அன்பொழுக அழைத்த, மாமியார், காப்பி வேண்டுமா என்று கேட்க, மறுத்து விடுகின்றார், மாப்பிள்ளை. சிறிது மோராவாது குடியுங்களேன் என்று வற்புறுத்திச் சொன்னபோதும் அதற்கும் வேண்டாம் என்று தலை அசைத்துக் கறாறாக்ச் சொல்லிவிட்டார்.

அந்தக்காலத்தில் எல்லாம்மின்சாரம் கிடையாது. சிம்னி விளக்குதான் எல்லா வீடுகளிலும். சில வீடுகளில் அரிக்கேன் லைட்டுகளும் பயன்
படுத்தப்படுவது  உண்டு..

காப்பியும் வேண்டாம், மோரும் வேண்டாம் என்று சொல்லிவிட்ட மாப்பிள்ளையைத் திருப்திப்படுத்திட  திரட்டு என்ற இனிப்புப் பண்டம் தயாரிக்கப்படுகின்றது  உரலில்போட்டு இடித்ததயாரிக்கப்பட தின்பண்டம் அது. உரல் வேலைகள் எல்லாம் முடிந்தபின், உரலைக் கழுவி, அதன் மேல்.மண்ணாலான  வட்ட வடிவத்திலான கலவடை ஒன்றைப்போட்டு மூடி வத்துவிட்டனர்.

திரட்டினை மாமியார் வீட்டில் கொடுத்து மாப்பிள்ளையை உபசரித்தபோது, அதனையும் மறுத்து விட்டார், மாப்பிள்ளை. ஆனால் அதன் வாசனை மூக்ககைத் துளைக்கின்றது. வீட்டில் எல்லோரும் படுத்துறங்கச் சென்று விட்டனர்.

கூச்சம் நீக்கிய மாப்பிள்ளை அச்ச உணர்வுடன் உரல் அருகே செல்கின்றான். உரலின் வாயினுள் விரல்களைவிட்டுத் தடவிப் பார்க்கின்றான். கைக்கெதுவும்  எட்டவில்லைல். உரலிலிருந்து வரும் வாசனையோ இவனை மீண்டும் மீண்டும் தொல்லைப் படுத்துகின்றது. குனிந்து தலையை உரலுக்குள்  உள்ளே விட்டு நாக்கால் துளாவ ஆரம்பித்தார் மாப்பிள்ளை. ., . ஒரு கட்டத்தில் உரலை மூடியிருந்த மண்ணாலான கலவடை மாப்பிள்ளையின் கழுத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.அப்புறம் என்ன எல்லோரும் வந்து விழுந்து விழுந்து சிரித்து விடுவித்தனர் மாப்பிள்ளையை. !

தம்பிக்கு, தஙகைக்கு கடிதம்  எழுதுதல்,  கதை நாவல்களில் கதா பாத்திரங்களைத் தனியே பேசுமாறு கதை  அமைதவை எல்லாம் தமிழில் முதலில் கொண்டு வந்தவர் டாக்டர், மு, வரச்தராசன் அவர்கள்தான்  என்பது ஊரறிந்த உண்மை.

திராவிட நாட்டைக் கைவிட்டபின், காஞ்சி , பின்னர் முரசொலி வாரப்பத்திரிக்கயாக வந்தது.  எனக்குத் தெரிந்த நெருங்கிய உறவினர், காஞ்சியில், ” இந்தி  ஆட்சிமொழியான விந்தை” என்ற கட்டுரை எழுதினார்.  அவரை  அண்ணா  மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.

தி.முக. வில் சுதந்திரம் இருந்தது. தலைவர்கள் ஆளுக்கொரு பத்திரிக்கை நடத்தினர்

பண்டிதத் தமிழைப் பாமரனுக்குச் சொந்தமாகியதில் தி.மு.க.விற்கு நல்ல பங்கு உண்டு.

புறநானூற்றுக் காட்சிகளை எல்லாம் எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியதில் கலைஞர் பங்கினை மறுக்க முடியாது.

சி.பி. சிற்றரசு  நடத்திய போர்வாள், உலகப் பேரறிஞர்கள், வரளாற்று நிகழ்வுகள், சாக்ரடீஸ், இங்கர்சால், அரிஸ்டாட்டில், பெர்னாட்ஷா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற பல பிரபலங்களைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

எந்தச் சிலுவை யேசுவின் மரணத்திற்குக் காரணமாய்த் திகழ்ந்ததோ, அந்தச் சிலுவையை கழுத்தில் அணியக் கூடாது என்று மார்ட்டின் லூதர் கிங் ப்ரொட்டஸ்டண்ட் பிரிவினைத் தோற்றுவித்த செய்தியினையும் கூறினார்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர்க. முருகேசன் அவர்களைப் பார்த்து இரு கரங்கூப்பித் தொழுதேன்.

 இந்திய ஐக்கியப்  பொதுவுடமைக் கட்சியைத் தோற்றுவித்தவரும், தமிழகத்தின் அரசியல் சாணக்கியருமான எம்.கல்யாணசுந்தரம் கடைசி
தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில், படித்துக் கொண்டிருந்தவை, ஈ.வே.ரா. நூல்கள்தான்!

சி.பா. ஆதித்தனாரனைத்திந்திய இதழியல் கழகத்திற்கும், அவர்களை இய்க்குகின்ற  ( www  tamilthinai..com )  தமிழ்த்திணை இயக்கத்தினருக்கும் ஓர் வேண்டுகோள்!

ர்- என்ற எழுத்திற்கு மேல் புள்ளி வைத்து எழுதுவது தவறானது  கீழே கால்வைத்த ர வுக்கு மேல் புள்ளி  வைத்துத்தான், ர் எழுதப்படவேண்டும் என்றும்,  இளங்கோ, பாஞ்சாலி ஆகிய தமிழ் மென் பொருட்களில் இந்த வசதி இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தியே பதிக் கட்டுரைகளுக்கு மேல் ஆய்வு நூல் உருவாக்கப்பட்டது என்ற கருத்து வைக்கப்பட்டது.

அரசு எழுத்துச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தபோது எப்படி ஏற்றுக் கொண்டோமோ அதே போன்று அடியில் கால் இல்லாமல் புள்ளி வைத்து எழுதப்படும் ர் -ஐ அப்படியே ஏற்றுக் கொள்வதால் எந்த வகையிலும் தமிழின் முன்னேற்றம் குறைந்து விடப் போவதில்லை. 

நடைமுறையிலும் இதத்தான் நாம் பயன்படுத்வருகின்றோம்   என்ற உண்மையயும்  எண்ணிப்பார்த்து முடிவு செய்தல் காலத்தின் கட்டாயமாகின்றது..

0 comments:

Post a Comment

Kindly post a comment.