Saturday, February 18, 2012

மதுரையில் தமிழீழ ஏதிலியர்களுக்கான BPO



 


  சொர்க்கபூமியில்  வாழும் மக்களின் பகுதி  மதுரை மாவட்டம்

    

2012 ஆங்கிலப் புத்தாண்டு மதுரைவாழ் ஈழ அகதிகளுக்கு சகாயமாய் அமைந்தது.

மதுரையில் உள்ள ஆனையூர் தமிழீழ ஏதிலியர் முகாமில் உள்ள பத்து மகிழ்ச்சியாய் விடிந்தது. குறந்த பட்சம் ஐம்பது பேர் வயிறார உணவு சாப்பிடலாம். மனம் விரும்பியபடி ஆடைகளை அணியலாம். இரவில் நிம்மதியாக உறங்கலாம்.

அவர்கள் குடும்பத்திலிருந்து தலா ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அவர்களின் முயற்சியினால் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள BPO-வில் வேலை பார்க்கக் கிளம்பிய தினம்., ஜனவரி இரண்டு.,௨0௧௨.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியராகத் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டதிலிருந்தே ஆட்சியர் சகாயம் மதுரை மக்கள் அனைவருக்கும் மிகப் பெரும் ஆச்சரியங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.

யாருமே வற்புறுத்திக் கேட்பதற்கு முன்னரே சொத்துக் கணக்கைக் காட்டி தனி முத்திரை பதித்தவர் சகாயம். பல பத்திரிக்கைகள் பாராட்டின. எனது வலைப்பூவிலும் பதிவானது. அப்பொழுது அவர் பணியாற்றிய இடம் திண்டுக்கல்.
அதில் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள தமிழீழ ஏதிலியர்களுக்கான முகாமில் உள்ளவர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களையும் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் அங்குள்ள படித்த இளைஞர்களுக்கான BPO.
மதுரை பிபிகுளம் பகுதியில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளியில் ஒரு கட்டடத்தில் BPO பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்போது அவர்கள் பத்து பேரும் மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வெகுவிரைவில் ஆனையூர் முகாம் அருகிலேயே ஒரு மாநகராட்சிக் கட்டடத்திற்கு மாற இருக்கிறார்கள்.

ஆனையூர் ஏதிலியர் முகாமில் வசிப்பவர்களுக்காக அரசு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க இருக்கிறது. ஓரிரு மாதங்களில் அந்தப் பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றனவாம். அப்போது இந்த BPOவிற்காக தனிக் கட்டடம் கட்ட இருக்கிறார்கள்.

BPO-வில் பணியில் இணைவதற்கு முன் இதில் சில படித்த இளைஞர்கள் பெயிண்டிங் உள்ளிட்ட வேலைகளுக்கு தான் செல்ல முடிந்திருக்கிறது.



“மாவட்ட ஆட்சியர் எங்கள் இல்லங்களில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார்”   உற்சாகக்க்த்துடன்  ஒப்ருமித்த குரலில் அவர்கள் அனைவரும்.கூறுகின்றனர்
செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் தற்போது புக இருக்கும் புதிய கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கப் படுகிறது. இதையும் இந்த இளைஞர்களே தாங்களே செய்து கொள்கிறார்கள். “எலெக்ட்ரீஷியன் வேலை, பெயிண்டிங் வேலை, கம்ப்யூட்டர் ரிப்பேர், அசெம்ப்ளிங் வேலை எல்லாமே எங்களுக்குத் தெரியும்” என்கிறார்கள் உற்சாகத்துடன்.

நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேல் கட்டாகும் மின்சாரம் இவர்களின் வேலையையும் பாதிக்கிறது. நாளிதழ்களில் இவர்களுடைய BPO குறித்த செய்தியைப் பார்த்த சில தன்னார்வலர்கள் டேட்டா எண்ட்ரி வேலைகள் கொடுக்கவும், இன்வர்ட்டர் போன்றவைகள் வாங்கித் தரவும் ஆர்வமாக தொடர்பு கொண்டுள்ளனர்.

விரைவில் 30 பேர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவிருக்கிறார்களாம். ஆண்டு இறுதிக்குள் அது நூறாக ஆகக்கூடும்.

தமிழ், ஆங்கில இணைய தள வடிவமைப்பு, டேட்டா எண்ட்ரி, Data Extraction உள்ளிட்ட எந்த வேலைகள் இருந்தாலும் நீங்களும் தொடர்பு கொள்ளலாம்.

அதே போல மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் கம்ப்யூட்டர் ரிப்பேர், கம்ப்யூட்டர் வடிவமைப்புகளுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : maduraibpo2012@gmail.கம

தமிழகத்தின் இதர மாவட்ட ஆட்சியாளர்களும், சகாயம் வழியைப் பின்பற்றினால் ஈழத்து அகதியர்கள் வாழ்க்கைத் துயரங்கள் துடைக்கப்படுமே சகாயமாக.
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
என்று பாடினான் மகாகவி பாரதி. மாவட்டம் பயனுற வாழச் செய்யும் சுடர்சக்தி மாவட்ட ஆட்சியாளர்களிடம் இருக்கின்றது.

ஆனால் மதுரையில் மட்டும்தானே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பசாமி மறைந்தபோது அனைத்து அமைச்சர்களையும் அனுப்பி அந்தக் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறச் செய்தார், தமிழக முதல்வர்.
அதே போன்று மாவட்ட ஆட்சியாளர்கள் அனைவரும் மதுரை செல்ல வேண்டாம். சகாயத்திடம் போனில் பேசினாலே போதும். சகாயம் செய்துவிடலாம் தஙகளிடம் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு.


0 comments:

Post a Comment

Kindly post a comment.