Thursday, February 9, 2012

எம்.ஜி.ஆர். ஆதரித்தும் வெற்றி பெறாத கதை! மற்றும் கலைக்களஞ்சியம் வாங்கிட நான்பட்ட பாடு!





















கலைக்களஞ்சியம் 2ம் பதிப்பு தொடக்கவிழா

கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பை, ஒவ்வொரு தொகுதியும் 1000 பக்கங்களைக் கொண்டதாய், 12 தொகுதிகளில் வெளிக்கொணரப் பெரிதும் விரும்பினார் திரு। தி.சு. அவினாசிலிங்கம். 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்குரிய திட்டமும் தயாரிக்கப்பட்டு, தொடக்க விழாவும் நடந்தது. பல்வேறு காரணங்களால் அத்திட்டம் நிறைவேறாமற் போயிற்று. கலைக் களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் மேலும் பயன்படத்தக்கதாய் அமைந்திருக்கும்.

www.tamilvk.com

சென்னையில் இல்லாத, வெளிநாடுகளில் வாழ்கின்ற கீழ்க்குறிப்பிட்டுள்ள அன்பர்களின் தயவால் 08-02-2012 புதன் கிழமை மாலை 4।30 மணி அளவில் குழந்தைகள் கலைக் களஞ்சியம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வெளியிடுவதாக அறிந்தேன்। இதே தகவலை எனது வலைப்பூவிலும் உடனே பதிவு செய்தேன்।

அண்ணா சமாதிக்கு எதிரில் உள்ளது மட்டும்தான் சென்னைப் பல்கலைக்க் கழகம் என்றுதான் எனக்குத் தெரியும்। அந்த வளாகத்திற்குள் விசாரித்தபோது பலருக்குக் கூட்டம் நடக்கும் தகவலே தெரியவில்லை। தகவல் மையத்தை அணுகியபோது எங்களுக்குத் தெரிந்த தகவல்களை மட்டும்தான் கூற இயலும் என்று இனிமையான குரலில்தான் பதில் தந்தார்।

இந்த வளாகத்திற்குள் ஏதேனும் குறுவட்டு வெளியிடும் நிகழ்ச்சி நடக்கின்றதா இல்லையா என்பதை உறுதி செய்ய இயலுமா என்று கேட்டேன்। என்னை இருக்கையில் அமரச் செய்துவிட்டு ஒரு அன்பரை அனுப்பி, சுற்றிப்பார்த்து வரச் சொன்னார்। அவர் வந்தவுடன், எனக்கு அன்பாகப் பதிலளித்தவருக்கு முன்புறம் வாயிலை நோக்கி அமர்ந்திருந்த மூன்று பெண்களில் ஒருவர், கிரிமினாலஜி பற்றிய கூட்டம் ஒன்று நடப்பதாகவும் விரும்பினால் போய்ப் பார்க்கலாம் என்றும் பதிலளித்தார்।

வளாகத்திற்குள் உள்ள ஒரு கூட்டம் நடக்கும் பெரிய மண்டபம் உள்ள இடத்தையும் மெரினா வளாகக் கட்டிடம் என்றே குறிப்பிடுகின்றனர்। இது தவிர வேறு இடங்கள் இருக்கின்றனவா என்று கேட்டேன்। அப்பொழுதுதான் அவர் பிரசிடென்சி கல்லூரியைத் தாண்டிச் சென்றால் ஒரு கட்டிடம் உள்ளது வேண்டுமானால் அங்கு சென்று பாருங்கள் என்றார்। அதற்குத் தொலைபேசி இருக்குமே விசாரித்துச் சொல்லுங்கள் என்றேன்। தொலை பேசி பிஸி ஆக இருப்பதாப் பதில் வந்தது। என்னிடம் அலைபேசி இருக்கின்றது எண்களச் சொல்லுங்கள் என்றேன்। பின்னர் அவரது அலை பேசியை எடுத்து விசாரித்தார்। அங்கே கூட்டம் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

ஒருமுறைகர்நாடகாவில் ஹுப்ளி பல்கலைக் கழகத்தச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கரும்பலகையில் சென்னை பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் உரையாற்றுவதாக அறிவிப்புப் பலகை இருந்தது। பார்த்திட மகிழ்ச்சியைத் தந்ததுசென்னையில்தகவல் தருமிடச் சூழ்நிலைய வைத்துப் பார்க்கும்பொழுது அவர்களுக்கு அழைப்பிதழ் தரப்படவில்லை என்ற முடிவிற்கே வர முடிந்தது। என்னை கூட்டம் நடக்கும் வளாகத்திற்குள்ளேயே இறக்கிவிட்ட ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 50/- மட்டுமே போதுமென்று வாங்கிக் கொண்டார்। வீட்டிலிருந்து அங்கு வந்து சேர எனக்கான பஸ் கட்டணம் ரூபா12 மட்டும்தான்।
என்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை। என் வயது ६३।இருப்பது சென்னை.

மண்டப நுழைவாயிலில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன விற்பனைக்கு। அதையும் தாண்டி உள்ளே வந்தபோது வரவேற்பும், குழந்தைகள் கலைக் களஞ்சியம் குறித்த அறிவிப்புடன் கூடிய சாப்ட்வியூ பப்ளிகேஷன்ஸ் நோட்டீஸ்களும் இருந்தன। அவர்களுக்கு எதிர்ப்புறமாக பல்கலைக்கழக விற்பனைக்கான புத்தகங்களும் குறுந்தகடுகளும் இருந்தன। குழந்தைகள் கலைக் களஞ்சியம் வன்தகட்டில்l ( அதில் குறிப்பிட்டிருந்தது) விற்பனக்கு இருந்தது। விலை கேட்டேன்। ரூபாய் 250/ என்றும் இன்று இங்கே 225/- என்றும் கூறினார்கள்।நல்லவேளை என்னிடம் சரியான சில்லறையும் இருந்தது। வன்தகட்டையும் வாங்கிக் கொண்டேன்। கூட்டம் மண்டபத்திற்குள் நடந்து கொண்டிருந்தது। ஓரடி கூட உள்ளேசெல்லும் மனநிலையில் இல்லை। கூட்டம் நடக்கும் இடத்தைக் குறிப்பு நோட்டில் எழுதிக் கொண்டுவராதது என்தவறு என்று என்னையே நொந்து கொண்டேன்। அப்படியே எழுதிக் கொண்டு வந்திருந்தாலும் அதனால் என்போன்றோருக்குப் பயனில்லை என்பதை வீட்டுக்கு வந்தபின் தெரிந்து கொண்டேன்। ஏனெனில், இடம்,பவழ விழாக் கலையரங்கம், ( அண்ணாவை எடுத்து விட்டார்கள்)பரிதிமாற் கலைஞர் வளாகம் (மெரினா வளாகம்) என்றுதான் குறிப்ப்டப் பட்டிருந்தது। அங்கு பிறதுறைகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கே தெரியவில்லை। நான் கேட்ட ஓரிரு ஆண், பெண் பணியாளர்களும் நாங்கள் இந்கு வேலைக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன; அதனால், எல்லாம் தெரியாது என்று கூறிவிட்டனர்। சீனியர்களிடம் விளக்கமாகக் கேட்டிருக்க வேண்டும் என்று பின்னர்ஆலோசனையும் கிடைத்தது. அண்ணா பவழ விழாக் கட்டிடம் என்று குறிப்பிடாததன் காரணமும் புரியவில்லை. பரிதிமாற் கலைஞர் வளாகம்,மெரினா வளாகம் அங்குள்ள பலருக்கே தெரியவில்லை. ஒவ்வொரு அறைக்கும்தமிழறிஞர்கள் பெயரை வைத்து விட்டால் எங்கள்பாடு இன்னும் திண்டாட்டமாகப் போகும்.

எனவே, வளாகத்திற்கு- வளாகத்திற்குள் உள்ள ஒவ்வொரு அறைக்கும் என்ன பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்।


தமிழ் வளர்ச்சிக் கழகம், திருவள்ளுவர் சிலைக்கு எதிரே, சென்னை-5 என்று மட்டும் திருவள்ளுவர் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்।

இது மிகைப்படுத்தப்பட்டதாகவோ குறை கூற வேண்டுமென்பதற்காகவோ கூறவில்லை। கூட்டத்திற்கு வந்தோரில் १५० அல்லது இருநூறு பேர்தான் பொது மக்களாக இருக்கக்கூடும்। கூட்டம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் முதல் தேடுதல் வசதியுடன் கூடிய வன்தகட்டை வாங்கிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்। இவை எல்லாம் அங்கு வெளியே இருந்த சிலரே பேசிக் கொண்டவை।

இந்த குழந்தைகள் கலைக் களஞ்சியம் புத்தக வடிவில் ஒன்றே ஒன்றுதான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றது। எனவே, தமிழார்வம் உடையோர் २० தொகுதிகள் கொண்ட இந்த வன்தகட்டினைத் தவறாமல் வாங்கி வைத்துக் கோள்ளுங்கள்। இதற்குப்பின்னால் எவ்வளவு முயற்சிகள் நடந்திருக்கின்றன என்பதை, தமிழ்க் கலைக் களஞ்சியத்திட்டம், குழந்தைகள் கலைக் களஞ்சியம் என்ற இரு கட்டுரைகளயும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்।

எனது வலைப்பூவிலும் இருக்கின்றது। www.tamilvk.कॉम இணைய தளத்திலும் இருக்கின்றது। எம்।ஜி।ஆர்। வாழ்த்தி வரவேற்று ஆதரித்துப் பேசிய திட்டம் தோற்றுப் போன கதையும் இருக்கின்றது।

நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது-திருமணத்திற்குக்கூட பரிசாக அளிக்கலாம்।

४०० மதிப்புள்ள அட்டகாசமான ஆங்கிலம்-தமிழ் அகராதி ३०० விலைக்கு பல்கலையில் கிடைக்கின்றது। அது இந்தக் கூட்டத்தில் வைக்கப்படவில்லை, விற்பனைக்கு1 ஏனென்றால் இது தமிழ் வளர்ச்சிக் கூட்டம்।

கூகிள் போன்றவை கூட இந்திய மொழிகளை மொழிபெயர்த்திட உதவுகின்றது। ஆனால் நமது பலகலைக் கழக மேலாளர்களிடம் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை। ஆங்கிலம்-தமிழ் அகராதிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லையா?

ஆந்திரா மாநிலம் குப்பத்தில் , தென் மாநிலங்கள் கூட்டாகச் சேர்த்து அமைத்துள்ள, திராவிடப் பல்கலைக் கழகத்தில் தமிழ் நாட்டின் பங்கு என்ன? எத்தனை பேராசிரியர்கள் பணியி உள்ளனர் என்பதெல்லாம் எங்கு கேட்டால் தெரியும்? குப்பத்திற்குத்தான் செல்ல வேண்டுமா?

பல்கலைக்கழகப் பதிப்புக்களின் விற்பனைப் பொறுப்பை ஆண்டோபீட்டரிடம் விட்டு விடுங்கள்: ஓராண்டிற்குப்பின் முடிவைப் பாருங்கள்। தனி மனிதனாக அவரது சாதனை அளப்பறியது।

மனிதாபிமான- அரசாங்கத்திடம் சலுகைகளுக்காக மண்டியிடாத நினைவில் வாழும் , சு।சமுத்திரத்திற்கு கணினியை அறிமுகப்படுத்திய போதிலிருந்து அவரைபற்றிக்கேள்விப்பட்டதுண்டு। ஆனால் தற்பொழுதுதான் ஓரிருமுறை சந்தித்திருக்கின்றேன்।

முன்னோர் முயற்சிகள் வீணாகக் கூடாது। தமிழ் வளர்ச்சிக் கழகம், திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னை ६००००५ என்ற முகவரியே போதும்।
என்போன்ற சாமான்யர்களுக்கு!


பொதுக்கலைக் களஞ்சியம், குழந்தைகள் கலைக் களஞ்சியம் தமிழக முதல்வர் மனது வைத்தால் மாணாக்கர்களுக்கு
இலவசமாகவே வழங்கலாம்।

0 comments:

Post a Comment

Kindly post a comment.