Sunday, February 26, 2012

"என்றைக்கும் தன்ஆன்மாவிற்கும் இதயத்திற்கும்-ஒரு விலை அட்டையை மாட்டிக்கொண்டு விடவேண்டாம்" லிங்கன் தன்மகனை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது எழுதிய கவிதை!

38 -க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 
மொழியாக்கம் செய்திருக்கின்றார்.இவரது பெயர் லயன் ஸ்ரீனிவாசன் 
கணினியைவிட வேகமாக மொழி பெயர்த்திடும் ஆற்றலுடையவர். 
  எஸ்.இராமகிருஷ்ணனின் உபபாண்டவம் ஆங்கில வடிவம் பெற்றுக் கொண்டிருக்கின்றது இவரது கைவண்ணத்தில் உபபாண்டவம்,  மற்றும் பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்குத் தந்த பருவம் மிகவும் கனமான
நூல்கள். படிப்பதே கடினம். மொழிவளம் குன்றாமல் மொழியாக்கம்
 செய்வதென்பது  அரிதான செயல்.
 எப்படி முடிகிறது , இவர்களால்? பிறவி மேதைகள் என்பதாலா?  அடுத்து இவர் வெளியிடப்போகும்
 “ நீதிபதியின் கண்ணீர் “ 

தமிழுக்குப் புதுசு!

தமிழகத்தில் விவாகரத்து 
வழக்குகளை நீதிமன்றங்களில்  தாக்கல் செய்திடும் தம்பதிகளுக்கு
 இலவசமாகவே   புத்தகத்தை வழங்கப் போகின்றார்,

இவர்இவரது வயது 70க்கும் மேல்.

 தொடர்பிற்கு 9840096405

இதர விபரங்கள் தனிக் கட்டுரையில்.

ஆபிரகாம்லிங்கன் தன்மகனை முதன் 


முறையாகப் பள்ளிக்கு அனுப்புமுன் எழுதிய கவிதையின் தமிழாக்கம்

அவன்,
என்றைக்காவது கற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்
என்பதை நான் அறிவேன்
உலகில் பிறந்தவர்கள் அனைவருமே நல்லவர்கள்
என்று நான் சொல்லவில்லை

ஆனால்,
உலகில் காணப்படும் ஒவ்வொரு போக்கிரிக்கும் எதிராக
எங்கோ ஒரு நல்லவன் இருக்கத்தான் இருக்கின்றான்
என்பதை அவனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

சுயநலம் மிக்க ஒவ்வொரு அரசியல் வாதிக்கும்
எதிராக எங்கோ ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட
ஒரு தலைவன் இருக்கத்தான் செய்கின்றான்
என்று எடுத்துச் சொல்லுங்கள்


ஒவ்வொரு எதிரியிடமும் எங்கோ அவன் உள்ளத்து மூலையில் ஒரு நண்பன் கூடவே இருந்து வருகிறான் என்பதையும்
எடுத்துச் சொல்லுங்கள்
இது கொஞ்சம் காலம் பிடிக்கும்
என்பது எனக்குத் தெரியும் போகட்டும்

ஆனால் உங்களால் முடிந்தால்,
அவனுக்குக் கற்பியுங்கள்
எங்கோ கண்டெடுக்கப்பட்ட
ஐந்து  டாலர்களை விட
தன்கையால் உழைத்துச் சம்பாதித்த
ஒரு டாலரின் மதிப்பு அளப்பரியது
என்பதை அவனுக்குச் சொல்லுங்கள்


இழப்பதற்கு அஞ்சக் கூடாது என்பதை
அவனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
வெற்றியைக் கொண்டாடவும் சொல்லிக் கொடுங்கள்

பொறாமையிலிருந்து அவனை விலகி விடச் சொல்லுங்கள்
அமைதியுடன் எப்படிச் சிரிப்பது எனும் கலையை
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்

உங்களால் முடிந்தால் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்
புத்தகங்களில் பொதிந்துள்ள அதி ஆச்சரிய உண்மைகளை
அவனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

அதேசமயம் கொஞ்சம் அமைதியுடன் சில கணங்களை
அனுபவித்துச் சிந்திக்கச் சொல்லுங்கள்
என்றென்றும் புதிராக உலகத்து வானில் சுற்றி வளைய வரும்
பறவையினங்களைப் பற்றி நினைக்கக் கற்றுக் கொடுங்கள்

சூரியஒளியில் இங்குமங்கும் பறக்கும் தேனீக்களின் கூட்டத்தைப்
 பற்றிச் சிந்த்திக்கச் சொல்லுங்கள்
மலைச்சாரல் தோட்டங்களில் மலர்ந்து பூத்துக் குலுங்கும்
மலர்களைப் பற்றிச் சிந்திக்கச் சொல்லுங்கள்

பள்ளியில் அவனுக்கு மேலும் கற்றுக் கொடுங்கள்
பிறரை ஏமாற்றிப் பிழைப்ப்தை விட
தோற்றுவிடுவது  எவ்வளவோ  மேல் என்பதை
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்

அவனுக்குத் தோன்றும் லட்சியங்களிலேயே அவனை
நம்பிக்கை வைக்கச் சொல்லுங்கள்
பிறர் எவரும் அந்த லட்சியங்களைத் தவறு
என்று சொன்னாலும் அவன் நம்பிக்கை வைக்கட்டும் தன்மீது.

இதமாகப் பழகுபவர்களிடம் அவன் பதமாகவே இருக்கட்டும்
கனல் பறக்கும் கடுமையோடு பழகுபவர்களோடு அவனும்
அனலைக் காட்டட்டும்.

என்மகனுக்கு வலிமையை ஏற்றிக் கொடுங்கள்
ஆட்டு மந்தையில் ஒருவனாய்
கூட்டத்தோடு கூட்டமாய்
அவன் ஆயிரத்தோடு ஒன்றாய்
அறிவில்லாமல் அலைய வேண்டாம்


எவரையும் புறக்கணிக்காது
அவன் கவனிக்கட்டும்
இருந்தாலும் கேட்பதையெல்லாம் நம்பி விடாமல்
கொஞ்சம் வடிகட்டி                                                                          
உள்ளே செலுத்திக் கொள்ளட்டும்

உண்மையெனும் திரையில் அது  ஒரு காட்சிப்படமாகட்டும்
எதுவெல்லாம் நல்லதோ, அதையே
அவன் எடுத்துக் கொள்ளட்டும்

அவன் துயரையும்பொழுது
சற்றே சிரிக்கக் கற்றுக் கொடுங்கள்
அழுவதற்கு வெட்கப் படவேண்டாம்
கண்ணீர் சிந்த கவலைப் படவேண்டாம்


மனித இனத்தை வெறுப்பவர்கள்  மீது
அவன் காறி உமிழட்டும்
திகட்டும் தித்திப்பும் வேண்டாம்
தன் ஆற்றலை எல்லாம் மிக உயர்ந்த
விலைக்கே விற்கட்டும்


ஆனால்,
என்றக்கும் தன் ஆன்மாவிற்கும் இதயத்திற்கும்-ஒரு
விலை அட்டையை மாட்டிக்கொண்டு விடவேண்டாம்

பேரிரைச்சல் போடும் ஆட்டுமந்தைக் கூட்டத்தின்
கூச்சலுக்கு அவன் காதுகளைப் பொத்திக் கொள்ளட்டும்
தன் இலட்சியங்கள் சரியென்று தோன்றினால்
நிமிர்ந்து நின்று  அவன் போராடட்டும்

அவனைச் சற்று இதமாகவே நடத்துங்கள்-ஆனால்
கொஞ்சிக் குலாவிட வேண்ட்டாம்
நெருப்பிலிட்ட இரும்பே உருக்காகும்

அவன்,
தைரியத்திற்காகப் பொறுமையிழக்கட்டும், பரவாயில்லை
அச்சத்தைத் தவிர்த்திடப் பொறுமயிழக்கட்டும், ப்ரவாயில்லை

நான்,
உங்களிடம் கேட்டுக் கொள்வது
சற்று அதிகம்தான் என்றுபடுகிறது எனக்கு
இருந்தாலும் என்ன செய்ய முயுமென்று
சற்றே யோசியுங்கள்

பச்சிளங்குழந்தை அழகுச் சிறுமைந்தன் அவன்,
என்மகன், அவனை உங்களிடம் அனுப்புகின்றேன்
அவனுக்கு வேண்டுவன கற்றுக் கொடுங்கள்
அவன் சிறந்த குடிமகனாக உயரட்டும்!

16th President of the United States
In office
March 4, 1861 – April 15, 1865
Vice PresidentHannibal Hamlin
Andrew Johnson
Preceded byJames Buchanan
Succeeded byAndrew Johnson
Member of the U.S. House of Representatives
from Illinois's 7th district
In office
March 4, 1847 – March 3, 1849
Preceded byJohn Henry
Succeeded byThomas Harris
Personal details
BornFebruary 12, 1809
Hodgenville, Kentucky, U.S.
DiedApril 15, 1865 (aged 56)
Petersen HouseWashington, D.C., U.S.
Political partyRepublican (1854–1865)
National Union (1864–1865)
Other political
affiliations
Whig (Before 1854)
Spouse(s)Mary Todd
ChildrenRobert
Edward
William
Tad
ProfessionLawyer
ReligionSee article
SignatureCursive signature in ink
Military service
Service/branchIllinois Militia
Years of service1832
Battles/warsBlack Hawk War

நகலெடுத்து வீட்டின் முக்கியப் பகுதியில் ஒட்டி வையுங்கள்!

நகலெடுத்து பள்ளியின் எல்லாப் பல பகுதிகளிலும் ஒட்டி வையுங்கள்.1!

திரையரங்குகளில் இடைவேளைக்களில் திரையிட்டுக் காட்டுங்கள்!!!

திரைத்துறையில் சிறந்த பாடலாக்குங்கள் !!!!

தமிழகமேனும் திருந்தட்டும்.!!!!!

 திருத்த்ட்டும் பிற மாநில சமூகங்களையும்!!!!!!

1 comments:

 1. கேட்டதை வாங்கிக் கொடுத்து வாரிசுகளின் வருங்காலத்தினை வேணத்து விடாதீர்கள் என்ற கட்டுரை நெல்லை BSNLநண்பர்கள் உதவியால் பிரசுரமானது. அதே BSNL அதிகாரி. பணி விடை பெற்றவர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பள்ள்ளிக்கு முதன் முறையாகத் தன் மகனை அனுப்புகின்றார். சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருந்தகையோர் எப்படி நடந்து கொள்ள வேண்டியனவற்றை, மகனுக்குச் சொல்வதுபோல் ஆசிரியர்களுக்குச் சொல்லி உணர்த்தும் பாங்கினை இக்கவிதையில் ரசிக்க முடியும்.

  மொழி பெயர்ப்பாளர், லயன் சீனிவாசன். மின்னஞ்சல் :-emmes4@yahoo.com மொழிபெயர்ப்பாளரைப் பாரட்டலாம். தொலைபேசி எண் கட்டுரையின் துவக்கத்திலேயே உள்ளது.

  ட்யூசன் எடுப்பதும் ( வருமான வரியில் சேர்க்கப்படாத வருமானம்), வீடு கட்டிக் கொடுத்தல், வாடகை வீடு பிடித்துக் கொடுத்தல், நில விற்பனை, வீடு விற்பனை இவற்றில் இறங்கிவிட்ட நம் தமிழகத்து ஆசிரியர்களுக்கு இந்தக் கவிதையைப் படிக்கக் கொடுங்கள். மனந் திருந்தட்டும்.

  விக்கிபிடியாவிற்குக் கட்டுரை எழுதப் பல பயனர்கள் தேவைப்படுகின்றனர். வருவாய் இல்லாத அந்த சேவையில் இறங்கித் தம் பாவக் கறைகளைத் தீர்த்துக் கொள்ளட்டும்.

  இந்தக் கவிதையைத் தொலை / அலைபேசியில் பாரட்டும் அன்பு நண்பர்கள், தொழர்கள் / பெரியவர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

  தமிழில்தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம்.

  ReplyDelete

Kindly post a comment.