Monday, February 27, 2012

QATAR- உலகின் பணக்கார நாடு என்று அமெரிக்கப் பத்திரிக்கை FORBES கூறுகிறது!


The emir of a small Gulf peninsula is here, there and everywhere

அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பத்திரிக்கை, FORBES வெளியிட்டுள்ள செய்தியாவது:-

உலகில் உள்ள செல்வ வளமிகுந்த நாடுகளில் QATAR முதலிடத்தைப் பெற்றுவிட்டது. அங்குள்ள பெட்ரோல் வளமும், அடர்த்தியான இயற்கை வாய்வுமே இதற்குத் தலையாய . காரணம்!

1.7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாடு QATAR. அந்த நாட்டின் தனிநபர் ஆண்டு வருவாய்  2010-ல் 88000 டாலர்

.
2020-ல் ஒலிம்பிக் போட்டிகள் இங்கேதான் நடக்கப்போகின்றன. அதற்கான கட்டமைப்பு வேலைகளில் கதார் போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்று தீவிரமாக இறங்கியுள்ளது.


Qatar developing QR22bn deep-sea port

ஆழ் கடலில் இரண்டு விமான தளங்கள், மற்றும் நிலப்பகுதியிலும் பாதுகாப்பான விமான நிலையங்கள், தேவையான ரெயில் நெட் ஒர்க்குகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் 2020-ல் உலகக் கால்பந்துப் போட்டியினை நடத்தும் உரிமையையும் கதார் பெற்றுவிட்டது. இதனால் உள்நாட்டிற்கு சுற்றுலா மூலமும் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்

.ஐரோப்பாவில் உள்ள LUXEMBOURG உலகில் உள்ள பணக்கார நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனுடைய தனிநபரின் ஆண்டு  வருவாய் 81,000 டாலர்.





மூன்றாவது இடத்தை சிங்கப்பூர் பெற்றுவிட்டது. அதன் தனி நபரின் ஆண்டு வருவாய் 56,700 டாலர்.

உலகில் உள்ள 182 நாடுகளை மதிப்பிட்டுத் தகவல்களைத் தந்திருப்பது, அமெரிக்காவின் புகழ் வாய்ந்த மக்கள் செல்வாக்குப் பெற்ற FORBES பத்திரிக்கைதான்!


யுனைடட் அராப் எமிரேட்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ், ஹாங்காங், ஸ்விட்சர்லாந், நெதெர்லேண்ட், நார்வே, ப்ருனெஈ, என்றவாறு பணக்கார நாடுகளின் பட்டியல் தொடர்கின்றது.

ஆப்பிரிக்காவின் புருண்டி 400 டாலர்களும், லிபெரியா 386 டாலர்களும், காங்கோ 312 டாலர்களும்  தனி மனிதர்களின் ஆண்டு வருவாய்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.  கடைசியில் உள்ள நாடுகளும் இவைதான்..

 ஆனாலும்   ஒரு சந்தேகம்-  அதனால் ஒரு கேள்வி?

எஞ்சிய 179 நாடுகளில் இந்தியாவும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாம்.


1. ரோமில் உள்ள போப்பாண்டவர் ஆட்சிக்குட்பட்ட வாடிகன் குட்டி நாடோ / நகரமோ

 2. நாடு கடந்த நாடாக அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் குட்டி சாம்ராஜ்ஜியம் நடத்திவருகின்ற தலாய்லாமாவின் குட்டி நாடும் எந்த வரிசையில் வருகின்றதென்று நாம் அறியோம் பராபரமே!




நாலுதிசையும் ஸ்வர்தந்தர்ய நாதம் எழுகவே!

நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

ஏலுமனிதர் அறிவை யடக்கும் இருள் அழிகவே!

எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே!

                        மகாகவி. சி.சுப்பிரமணிய பாரதியார்.


இழந்ததைப் பிடித்தால் இருப்பது தங்கும்

இருப்பதை இழப்போமா?

இழந்ததைப் பிடிப்போமா?


0 comments:

Post a Comment

Kindly post a comment.