Wednesday, February 8, 2012

2 கோடி ஆண்டுகளாக அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியில் மறைந்திருக்கும் ஏரி


பனி படர்ந்து இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்। அதன்மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன।

அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரிய வந்துள்ளது। இதை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்।

ரஷியாவின் ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் எந்திரம் மூலம் துளையிட்டனர். சுமார் 3,768 மீட்டர் ஆழத்துக்கு (4 கி.மீட்டர் ஆழத்துக்கு) பூமியில் துளையிட்டனர்.

அப்போது அதன் அடியில் ஏரி மறைந்து இருப்பது தெரியவந்தது। அதுவும் பனிக்கட்டியாகதான் உள்ளது।

அந்த ஏரியின் மீது 2 கோடி ஆண்டுகளாக ஐஸ் மூடிக்கிடக்கிறது. அந்த ஏரியில் ஆக்சிஜன் உள்ளது. எனவே அங்கு சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த தகவல் ஐஸ்கட்டியை துளையிட்டு ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.