சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பார்வையற்ற, காது கேளாத வாய் பேசாத மற்றும் மன நிலைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், சென்னை 48, பூந்தமல்லியில் உள்ள விளையாடு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்க்கில் பிப்ரவரி 25 ஆம் தேதி நடை பெறுகின்றது.
26-02-2012-ல் கை, கால் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்
வெற்றி பெற்றோர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்க்க ஏற்பாடுகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி விழா நாளில் கடந்த காலத்தில் சாதனை படைத்த மாற்றுத் திறன் வீரர்களும் கவுரவப் படுத்தப்படுவார்கள்.
இதை நிகழ்த்துவோர், கே.சீனிவாசன், மாநிலச் செயலர், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டள, 21, ஏஏ ஏரிக்கரைச்ச் சாலை, கோட்டூர், சென்னை-85
தொலைபேசி எண்: 044-32927664. அலைபேசி- 98404 33964
0 comments:
Post a Comment
Kindly post a comment.