Tuesday, January 31, 2012

பாகிஸ்தானின் 12 வயது உலக சாதனையை 10 வயதிலேயே முறியடித்த நெல்லை விசாலினி!

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லைப் பெண்

விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால்,இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.
கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.
15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன்,அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.
உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:
MCP (Microsoft Certified Professional)
CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).
CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர்மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.
நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com


வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:


போற்றி, போற்றி! ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணோளி வாழியபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை, நல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்,
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.

-மகா கவி சுப்பிரமணிய பாரதியார்.

நெல்லை மண்ணில் வாழும் எனதருமை நண்பன் சுப்பிரமணியன் அனுப்பியது!

6 comments:

  1. நிச்சயமாக பாராட்டபடவேண்டிய விடயம் . வாழ்த்துக்கள் விசாலினி . இன்னும் பல சாதனைகளை நீவீர் படைக்க வாழ்த்துக்கள் . நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே ..

    ReplyDelete
  2. 2012/1/31 visalini kumarasamy
    thank u sir
    pl see my website www.visalini.com
    pl search in google as the youngest ccna world record holder i will be there
    I broke the record of the 12 years old Pakistani boy Irtiza haider at the age of 10. because i finished my CCNA at 10 years.
    I finished my
    MCP 87%
    CCNA 90%
    CCNA SECURITY 98%
    OCJP 95%
    C
    C++
    now i am studying my
    8 th std with 2 times double promotion and
    MCTS
    MCPD
    CCNP
    IELTS
    also conduct seminar for BE BTech students
    also being a chief guest for international conferences on computer science
    .


    2012/1/31 சீராசை சேதுபாலா
    சீராசை சேதுபாலா has sent you a link to a blog:
    Blog: மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும்
    Post: பாகிஸ்தானின் 12 வயது உலக சாதனையை 10 வயதிலேயே முறியடித்த நெல்லை விசாலினி!
    Link: http://rssairam.blogspot.com/2012/01/12-10.html

    --
    Powered by Blogger
    http://www.blogger.com/



    --
    K.VISALINI

    ReplyDelete
  3. விசாலினியைப் போன்று பல்லாயிரம் பூக்கள் மலரட்டும். தமிழகம் அறிவியல் பூங்காவாக மாறட்டும்.இவரது சாதனைகளைக் கண்ணுறும் மாணாக்கர்கள் இவரது பாதையில் பீடு பெற நிற்கட்டும். இவரது வாழ்க்கை எல்லோருக்கும் கலங்கரை விளக்கமாகட்டும். அரசு இவரது வாழ்க்கையை ஆவணப்படமாக்கட்டும். டாஸ்மாக்கால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கைப்பாதை மாறட்டும்.

    ReplyDelete
  4. Hats off to Visalini. Keep it up.

    M.Mani

    ReplyDelete
  5. Hats off to K.Visalini. Keep it up

    M.Mani

    ReplyDelete
  6. Viswanathan (a z h a g i . c o m) noblehearted@gmail.com

    17:47 (3 hours ago)

    to me
    Dear Sir,

    Due to various reasons, I sit with the computer only for less time, since a month.

    Hence, unable to respond in time to many.

    My best wishes ever for all your noble endeavours.

    Kudos to young visalini. Hope she remains humble ever. I wish she had written more in your blog comments.

    Lots of Love
    viswanathan :: india.azhagi.com :: service to mankind

    ReplyDelete

Kindly post a comment.