Wednesday, February 1, 2012

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்திய ஆசிரியர்!

அமெரிக்க விண்வெளி திட்டத்தில் பணியாற்ற இந்திய ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்ததை ‌சேர்ந்தவர் வந்தனா சூர்யவன்ஷி. இவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் சம்பந்தமான உயரிரியல், இயற்பியல், புவியியல் பொது அறிவு ஆகியவைற்றை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கற்பித்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்சி மையம் ஒன்று விண்வெளி மறறும் ஆராய்ச்சி படிப்புகள‌ை உருவாக்குவது குறித்து பல்வேறு நாடுகளில் இருந்து வந்தனா உட்பட 19க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்துள்ளது.

இதுமட்டுமல்லாது இவர்களுடன் விண்‌வெளி மையத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரி்ந்தவர்கள் உட்பட சுமார் 270 பேர் ‌ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.