Tuesday, January 31, 2012

போபால் விஷ வாயுவும் லண்டன் ஒலிம்பிக் போட்டியும்


போபால் விஷ வாயுக் கசிவால் இறந்தவர்கள்க்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க்கப்படவில்லை. இப்போது பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அதன் தாக்கம் இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பாதுகாக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்வேண்டும்.,

லண்டன் ஒலிம்பிக் போட்டியை ஸ்பான்சர்ஷிப் செய்யும் டல் நிறுவனங்களில் ஒன்றான டல் கெமிக்கல் நிறுவனத்தை ஸ்பான்ஷர்ஷிப்பிலிருந்து நீக்க வேண்டும். இது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இது இந்தியாவில் 1984ல் நிகழ்ந்த போபால் விஷ வாயு சம்பவத்திற்குக் காரணமான நிறுவனம். இந்த நிறுவனம் இந்திய நீதிமன்றத்தின் ஆணைகளை மதிப்பதும் இல்லை. நீதி மன்றத்தில் ஆஜராவதும் இல்லை. போபால் விஷ வாயுவுக்கு டல் நிறுவனமே முக்கிய காரணம். இந்தப் பிரச்சினையால் ஒலிம்பிக் நல்லொழுக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த மெரிடிக் அலேக்ஸ்டாண்டர் என்பவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனவே,மேற்படி டல் நிறுவனத்தை ஒலிம்பிக் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிகப்பட வேண்டும்.

இவ்வாறு வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.