Friday, January 6, 2012

சர்வதேச நிதி நகரம் "கிப்ட்'குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?



அப்போது, நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல பிரிவுகளில், இந்த நகரம் முன்னோடியாகத் திகழும். இங்குள்ள கட்டடங்கள், குளிர் சாதன வசதிக்கு பதிலாக, புதுமையான தொழில்நுட்பத்தில் குளிர்ந்த நீரோட்டம் மூலம் குளிர்விக்கப்படும். இதன்மூலம், குளிர் சாதனங்களுக்கு ஆகும் மின்சாரத்தில் 90 சதவீதம் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


"கிப்ட்' நகரில் உள்ள அனைத்து கட்டங்களுக்கும், பொதுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தானியங்கி முறையில் மின் இழப்பு குறைக்கப்படும், தேவைக்கேற்ப மின்சாரம் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு கட்டடத்திலும் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள், இயந்திரங்கள் மூலம் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு, குழாய்கள் மூலம் , 20 கி.மீ. தொலைவில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.


தானியங்கி முறையில் நடைபெறும் இந்த செயல்பாடுகள் மூலம், பணியாளர், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பம், லண்டன், மான்ட்ரியல், ஸ்டாக்ஹோம் மற்றும் பார்சிலோனா நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.இத்துடன், மேலும் பல அதிநவீன வசதிகளைக் கொண்டதாக 'கிப்ட்' உருவாக உள்ளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, "கிப்ட்' போன்ற "மெகா' நகரை உருவாக்குவாரா?

1 comments:

  1. ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete

Kindly post a comment.