Sunday, January 8, 2012

கோடம்பாக்கம்-ப.மதியழகன்

House And Dollar Bills by Stuart Miles

கனவுகளொடு
வந்திறங்குகிறார்கள்
கோடம்பாக்கத்துக்கு
கம்பெனி
படியேறி படியேறி
செருப்பு தேய்ந்து போச்சி
வாய்ப்புக்காக
அவமானங்க்களையும்
புறகணிப்புக்களையும்
ஏத்துக்க வேண்டியதாச்சி
இழுத்தடித்த போதுதான
சினிமான்னா என்னன்னு
புரியலாச்சுசி
கற்பனைகள்
வறண்டு போச்சி
பசி மயக்கத்தில்
கண்கள் இருட்டாச்சி
வெறுங்க்கையா
திரும்பிப்போனா
ஊரு சனம் கிண்டல் பண்னும்
கனவுலகக் கனவுகளை
மூட்டை கட்டி வைத்து விட்டு
டீ கிளாஸ் கழுவி
வயித்த நிரப்பலாச்சி
சினிமா கம்பெனி முகவரியை
விசாரித்து வருபவர்கள்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
கூடிக்கிட்டே போச்சி
இப்போது திரையரங்க்குக்குச் சென்று
படம் பார்ப்பதைக் கூட
நிறுத்தியாச்சி
பரிசு
என்றைக்கும்
எனக்கு விடுமுறைதான்
மேலதிகாரியின்
நச்சரிப்புக்களையோ
கிண்டல் பேச்சூக்களையோ
இனி கேட்க வேண்டியதில்லை
அலாரம் வைத்து
எழுந்திருப்பதிலும்
அவசரமாக
குளிப்பதிலிருந்தும்
பேருந்து கூட்ட நெரிசலில்
சிக்கித் தவிப்பதிலிருந்தும்
இனி விடுதலை
பயணத்தின் போது
அவசரப்பட வேண்டியதில்லை
பணிக்குத் திரும்பவேண்டுமேயேன
வேலைப் பளுவால்
வீட்டில் உள்ளவர்கள் மேல்
எரிந்து விழும் சந்தர்ப்பம்
இனி நேராது
கோப்புக்ள் அடுக்கப்பட்ட
மேஜையை
இனி நினைத்துப் பார்க்க
முடியாது
பதவி உயர்வுக்காக
இனி ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை.
கவர்ன்மெண்ட் மாறினாலும்
கவலைப்படத் தேவையில்லை
டிரான்ஸ்பர் செய்து விடுவேன்
ஏன் யாரும் மிரட்டப் போவதில்லை
ஒற்றை வரியில் சொன்னால்
நான் பணிஓய்வு பெறுகிறேன்.
தாமரை இலக்கிய இதழில், ப்.மதியழகன் எழுதியது.

நவம்பர் 2011ல் வெளியானது.

0444247470996. Computer Mouse With Globe



0 comments:

Post a Comment

Kindly post a comment.