Wednesday, January 18, 2012

ஓசை புதையும் வெளி

எனக்கான வெளிச்சம் ( 2005, 2009) கவிதைத் தொகுதிகளின் மூலமாகத்ம் தமிழ்க் கவிதை உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியவர்.

2010-ல் ஓசை புதையும் வெளி இரண்டாவது நூலாக வருகின்றது. நவீனக் கவிதை வெளியில் தனக்கான இருப்பை நிரூபித்தவர். இன்னமும் செழுமையடைந்த தன் மொழியின் மூலம் இத்தொகுப்பிலும் தனித்து வெளிப்படுத்துகின்றார்.

எழுதிய நூலின் பெயரை வைத்தும் அடையாளம் காணலாம். வலைப் பூக்களில் அறிமுகம் கொண்டவர்களுக்கும் கஷ்டமிருக்காது. கவிதை மேடைகளுடன் தொடர்பிருப்பவர்களுக்கும் சிரமமிருக்காது. ஆவணப் பட்த்தொடர்புகளும் உண்டு. ஆசிரியராகவும் இருக்கக்கூடும். ஆணா பெண்ணா தேவையற்ற கேள்வி.

இரண்டாவது புத்தகத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ள கவிதயின் தலைப்பினையே எல்லோருக்கும் பிடிக்கும் என்று இங்கு பதிவு செய்கின்றேன்.

ஓசை புதையும் வெளி

உரக்கப் பேசுவதாய்க்
கோபப் பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றஞ்ச் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல் பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்!

தி.பரமேசுவரி

"ம.பொ.சி. பார்வையில் பார்வையில் பாரதி" என்று ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அது நூலாகவும் வெளி வந்துள்ளது.

2 comments:

  1. நல்ல விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete

Kindly post a comment.