Wednesday, January 18, 2012

விருபா என்கிற தமிழ்ப்பெட்டகம்

விருபா என்பது இன்றளவும், இனியும் உலகில் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்க்களைத் திரட்டித் தரும் ஓர் இணைய தளம். எல்லாமே வணிகமாகிவிட்ட இன்றையச் சூழலில் விருபாவின் நோக்கமும் செயலும் வித்தியாசமாக உள்ளது.எனவே இந்த வலைப்பூவிலும் அதனை அறிமுகம் செய்வது எனது தார்மீகக் கடமையாகின்றது.


17-01-2012 அன்றுதான் எனக்கு விருபா அறிமுகமானது. 2012 புத்தகக் கண்காட்சியில் நான் சந்தித்த முதல் அன்பரும் எல்.குமரேசன் அவர்களே ஆவர்.

VIRUBA.COM சென்றால் முகப்பு, புத்தகங்கள், ஆசிரியர்கள், பதிப்பகங்கள், புத்தக வகைகள், மதிப்புரைகள். மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் தகவலகள் திரட்டப்பட்டுள்ளன. 2005 முதல் செயல்பட்டு வருகின்றது விருபா.

தற்போதைய நிலவரம்:-
1. புத்தகங்கள் 3239

2. ஆசிரியர் 1445

3.பதிப்பகங்கள் 606

4. புத்தக வகைகள் 118

5.மதிப்புரைகள் 206

6. மொழி பெயர்ப்பு 103


சாகித்ய அகாதமி விருது பெற்றவை. 1955 முதல் 2010வரை

தமிழக அரசின் பரிசு பெற்றவை இடம் பெறும். ஆண்டுதோறும் நடைபெறும் போட்டிகளுக்கான கடைசி தேதி ஜுன் 30. போட்டிக்கான விதிமுறைகள் விருபாவிலும் இடம் பெற்றுள்ள்ன. அவ்வப்போதைக்கேற்ப மாறக்கூடும். அவற்றைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகையதோர் இணைய தளத்திற்குள் சென்றால் இன்னும் சில நல்ல தொடர்புகள் கிடைக்கும். பயன்பெற தமிழன்பர்களை வேண்டுகின்றன்.


1)www.ulakaththamiz.org

2.www.infitt.net

3)www.chemamadu.com

4.www.devaneyam.net

5.www.com














































































0 comments:

Post a Comment

Kindly post a comment.