இதை யார் வழங்குவது?
யார் பெறுவது?
யார் பாதுகாப்பது?.
என்று கேட்கும்போது "தனிமனித சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்த ஒரு சமுதாயக் கூட்டு வாழ்க்கை தேவை என்று விடை கிடைக்கும். பிரான்சு நாட்டு அரசியல் சிந்தனையாளர்களான ரூசோ, ஹாப்ஸ், லாக் ஆகிய மூவரும் ஏறத்தாழ ஒரே முறையில் சமூக உடன்பாட்டுத் தத்துவம் என்று எழுதினர். து பல்வேறு கேள்விகளுக்கும், கிண்டலுக்கும் ஆளானது.
ரூசோவின் ஒரு வரி இன்றும் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது. "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் வாழும்பொழுது சங்கிலிகளால் கட்டுப்பட்டே காணப்படுகின்றான்." என்பதாகும்.
மனிதன் தன் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடுவதே சுதந்திரம்" என்று மார்க்ஸ் கூறினார்.
சமுதாயத்தின் ஒரு துளிதான் மனிதான். அவன் உண்ணும் உணவு அவனால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. விளைவித்த இடம் துவங்க்கி சமைத்துப் பறிமாறிய இடம் வரை, எத்தனை பேரின் உழைப்பு- பங்கு இருக்கிறது என்பது புரியும். எனவே இந்த சமூக அமைப்பிற்கு சுதந்திரம் கிடைப்பதுதான் தனி மனித சதந்திரத்தை வழங்குவதற்கு வாய்ப்பைத் தரும்.
நோய் நாடி-
நோய் முத்ல் நாடி-
அது தணிக்கும் வாய் நாடி
வாய்ப்பச் செயல்-திருவள்ளுவர்.
உலகைக் காக்க என்ன செய்யலாம்? முதளாளித்துவம் என்ற அழிக்கும் சமுதாய அமைப்பை மாற்றி சமதர்ம ஆட்சி அமைத்தால்தான் உயிரினம் காக்க்கப்படும். உலகம் காக்கப்படும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.