Monday, January 23, 2012

பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும்- வே.இராமசாமி

















க்ழிச் சேட்டைகாரன், ச்சோ ச்சோ, முழிப்பார்கள், அம்புட்டுத்தான், கடேசியில், குவிஞ்ச்சு, சவுகரியத்துக்கு, தடங்க்கல், செலாத்தாக (சுதந்திரமாக), தாக்காட்டுவதற்கு, ஊத்தாம்பெட்டி (பலூன்), தும்பச் செடியில் மொய் மொய்னு மொய்க்கம் பாப்பாத்திகள், பருத்திமார்-மிளகுமார்-தக்காளிமார் இதுகளை வைத்து தட்டான்களை (பட்டாம்பூச்சிகளை) வீச் வீச் என்று வீசித் தள்லி விடலாம், தோதுப்படாது, புடுங்க்கி, அமுக்குதல், ஈரக்குலை, கடவாய், துப்புல, துப்புடா, திம்ம்பியா, ஆவி அருவமில்ல(வேறு யாரு கிடையாது) கொடை கொடையாய்க் கொடுத்தாள் ( ஒருவர் இன்னொருவரை அடித்தலைச் சொல்வது)
கொன்னுட்டியே (அடிபட்டதை மிகைப்படுத்திச் சொல்வது) ( இதிலும் உண்மை எப்படி இருந்தாலும் ஆணுக்குத்தான் ஆதரவு இருக்கும்.) கொச கொசன்னு தழைத்து, முமும்ரத்தில், தொலைவெட்டுக்கு- நீண்ட தூரத்துக்கு,

கரிசல்காட்டு கி.ராஜநாராயணன் போன்று செவக்காட்டுக் கதைக்காரர் ஒருவர் வே.இராமசாமி என்னும் பெயரில் வளர்ந்தோங்கி வருகின்றார். இவரில் நான் சு.சமுத்திரத்தயும் காண்கின்றேன். ராஜம் கிருஷ்ணனையும் பார்க்கின்றேன். இலந்தை.சு.இராமசாமியும் தெரிகின்றார். இவர்கள் யாருமே இல்லாத புதியவராகவும் தென்படுகின்றார், நேரில் உரையாடும்பொழுது.

ஏனெனில் எடுத்த எடுப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான "வாகை சூடவா " படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார்.

"ஏலேய்", "கிணற்றுக்குள் முளைத்த மருதாணி" என்ற இரண்டு கவித நூல்களையும், " செவக்காட்டுச் சித்திரங்கள்" என்ற சிறு கதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை; தாய்சொல் துறந்தால் வாசகமில்லை" என்பதே இவரது வேதம்

ஒரே புத்தகத்தில்40 கதைகளைச் சரளமாக - வாசகர்கள் ஏறுக்கொள்வார்கள் என்ற துணிச்சலுடன் போதிய அறிமுகமற்ற நிலையிலேயே சொல்லியிருக்கின்றார், செவக்காட்டுக் கதைகளை. இன்னும் நிறைய வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கின்றன இவரது இதயத்திலிருந்து. பேசும் வார்த்தைகளில் ஜெயகாந்தனின் உயிர்த்துடிப்பைக் கேட்கின்றேன். சந்தித்தது ஒரே ஒரு முறைதான். 65 வயதுக்காரனுக்கு இது போதாதா? இல்லை என்றால் வாழ்ந்து பயன் என்ன?

புத்தகத்தில் உள்ள கதைகள் அனைத்தயும் வலைப்பூவில் விமர்சிப்பது சிரமமான செயல். ஏனெனில் அத்தனையும் முத்துக்கள்.

எனவேதான் தலைப்பில் உள்ள ஒரே கதையைமட்டும் எடுத்துக் கொண்டேன். அதுவும் இது செவக்காட்டுக் கதை. அதனால்தான் அந்தப்பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைத் தனியாக எடுத்துக் காட்டியுள்ளேன். கதையோடு சேர்த்துப்படிக்கும் பொழுது புரியும். என்றாலும் சுட்டுவது கடமை.


ஒரு தக்காளிச் செடியில் ஐந்து பழங்கள் உருவாகி வந்தன. நன்கு வளர்ந்ததும் அம்மா, அப்பா, இரண்டு தம்பியர் என ஆளுகொன்றைச் சுவைத்திடத் திட்டம் பிறந்தது. விரும்பிய வண்ணமே தக்காளிப் பழங்கள் ஐந்தும் நன்கு வளர்ந்து வந்தன.

அக்கா பூமாரி. பெரிய தம்பி, சின்னத் தம்பி என இரண்டு உடன் பிறப்புக்கள். அப்பா, அம்மா. பெற்றோர் வேலைக்குப் போகும் பொழுது தம்பியரைக் கவனித்துக் கொள்வது அக்காவின் பொறுப்பு.

தாக்காட்டுவதற்கு (விளையாடுவதற்கு-நேரம் போக்குவதற்கு) பட்டாம்பூச்சி பிடித்து விளையாடுவதும், ஊத்தாம்பெட்டி (பலூன்) ஊதி விளையாடுவதுமே பொழுது போக்கு. வெடித்த பலூனைக் கூட முடிச்சுப் போடுட்டுத் திரும்பத்திரும்ப ஊதுவதும் வழக்கம். அவை வயிற்றுகுள் சென்றும் விடலாம். இங்கே சென்றும் விட்டன.. பெரியவன்-சின்னவன் வயிற்றுக்குள் ஐந்தாறு ஊத்தம் பெட்டிகள் சென்று விட்டன. சின்னவன் வெளிக்குச் (மலங் கழித்தல்) செல்ல முயற்சித்தான். இயலவில்லை. ஆக மொத்தத்தில் அண்ணனயும் தம்பியையும் ஒழுங்க்கா பார்க்காம கொன்னுட்டாளே மூதேவி என்று எல்லாப் பழியும் பெண்ணான பூமாரியின் மீது வந்து விழுந்தது. இதுதான் கதை.

புத்தகத்தின் துவக்கத்தில் பதிப்புரையோ, தன்னுரையோ, அணிந்துரையோ இல்லாதது படைப்பாளியின் துணிச்சலக் காட்டியது.

இறுதியில் செவக்காட்டுக் கதை சொல்லி என்று பெருமாள் முருகனும், கிராமங்கள் பேசுகின்றன என்று நூலாசிரியரும் ( இவர் கார் முகில் பத்திரிக்கையாளரும்கூட) எழுதிய இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.)

கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல் முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு வே.ராமசாமியின் எழுத்துக்களே சான்று, என்கிறார், பெருமாள் முருகன். உண்மைதானே?

வெளியிட்டவர்கள்: கலப்பை பதிப்பகம். 9/10 இரண்டாம் தளம், இரண்டாம் தெரு, திரு நகர், வடபழனி, சென்னை-600 026.
9444 83 83 89.


KALAPPAI.IN@GMAIL.COM


கலப்பை எழுத்துக்களுடன் கலப்பை படமோ அல்லது வட்ட வடிவத்தில் சிவப்பு வண்ணமோ இருந்தால் நன்றாக இருக்கும். சிவப்பு யாருக்கும் சொந்தமானதல்ல. கருப்பும் சிவப்பும் ஈ.வே.ரா. காலத்திலிருந்தே தொடர்கின்றது. வே.ரா. பெய்ர் எழுத்துலகில் ஓர் வலம் வருவது உறுதி.

வே.இராமசாமி எழுதியுள்ள இரண்டு திரைப் படப் பாடல்கள்





0 comments:

Post a Comment

Kindly post a comment.