Monday, January 23, 2012

ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்-தினமணி

இந்தியா
ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்-தினமணி

First Published : 23 Jan 2012 02:39:50 AM IST

Last Updated : 23 Jan 2012 03:49:08 AM IST

ஜெய்ப்பூர், ஜன. 22: ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய "சாத்தானின் கவிதைகள்' என்கிற நாவலிருந்து சில பகுதிகளை மேடையில் வாசித்த 4 எழுத்தாளர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பதால் புகார் தொடர்பாக தொடக்கநிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ருஷ்டி குற்றச்சாட்டு: இதனிடையே, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் தகவல் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் கூறியது, தம்மை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுப்பதற்காகக் நடத்தப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதி என்று சல்மான் ருஷ்டி குற்றம்சாட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்கு ருஷ்டி திட்டமிட்டிருந்தார். கூலிப்படையினரைக் கொண்டு ருஷ்டியைக் கொல்வதற்கு நிழலுலக தாதாக்கள் திட்டமிட்டிருப்பதாக மும்பை உளவுப் பிரிவுத் தகவலை மேற்கோள்காட்டி ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் வருகையை ருஷ்டி ரத்து செய்தார்.

ஆனால் அப்படியொரு உளவுத் தகவல் ஏதும் இல்லை என்று மும்பை போலீஸார் சனிக்கிழமை கூறினர். இதையடுத்து, ராஜஸ்தான் போலீஸார் தம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ருஷ்டி பதிவு செய்திருக்கிறார்.

யாரோ சிலரின் வழிகாட்டுதலின்படி ராஜஸ்தான் போலீஸார் செயல்படுகின்றனர். அவர்களுக்கு யார் இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இலக்கிய விழாவில் எனது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசித்த 4 எழுத்தாளர்களையும் கைது செய்ய போலீஸார் முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

போலீஸார் மறுப்பு: ருஷ்டியின் கருத்தை ராஜஸ்தான் போலீஸார் மறுத்திருக்கின்றனர். "ருஷ்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றி உளவு அமைப்பு (ஐ.பி.) தகவல் தெரிவித்திருந்தது. அதன்படியே, ருஷ்டியை இலக்கிய விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டாம் என்று ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினோம். தாம் இலக்கிய விழாவுக்கு வருவதைத் தடுக்க முயற்சி செய்திருப்பதாக டுவிட்டரில் ருஷ்டி கூறியிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

இது முற்றிலும் தவறானது என்று ராஜஸ்தான் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் கருத்து: ருஷ்டி பற்றிக் கருத்துத் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல் வந்தால், அவரைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை' என்றார்.

4 பேர் மீது புகார்: ஜெய்ப்பூருக்கு ருஷ்டி வர முடியாத நிலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தடை செய்யப்பட்ட அவரது "சாத்தானின் கவிதைகள்' புத்தகத்திலிருந்து சில பகுதிகளை ஹரி குன்ஸ்ரூ, அமிதவ குமார், ஜீத் தாயில், ருசீர் ஜோஷி ஆகிய நான்கு எழுத்தாளர்களும் இலக்கிய விழாவில் வெள்ளிக்கிழமை வாசித்தனர்.

இந்த 4 பேர் மீதும் ஜெய்ப்பூர் அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அசோக் குமார் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் நிலைய காவல் அதிகாரி ஏ.முகமது தெரிவித்தார்.

வின்ஃபிரே நிகழ்ச்சியில் சலசலப்பு: ருஷ்டியின் இந்திய வருகை தொடர்பான விவகாரம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஞாயிற்றுக்கிழமை எதிரொலித்தது. தொலைக்காட்சி பிரபலம் ஓபரா வின்ஃபிரே உரையாற்றும் நிகழ்ச்சியின்போது, ருஷ்டி விவகாரத்தை எழுத்தாளர் ஆனந்த் எழுப்பினார்.

ருஷ்டிக்கும், அவரது புத்தகத்தின் பகுதிகளை வாசித்த 4 எழுத்தாளருக்கு விழா ஏற்பாட்டுக் குழுவினரும் பிற எழுத்தாளர்களும் ஆதரவளிக்காததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட விழா ஏற்பாட்டாளர் நமீதா கோகலே, "நாம் இங்கே புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே வந்திருக்கிறோம்.

ருஷ்டியைப் போலவே இன்னும் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வின்ஃபிரே இருக்கிறார்' என்றார்.

ருஷ்டியின் புத்தகத்தை வாசித்த 4 எழுத்தாளர்களையும் வெளியேறும்படி விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாக ஆனந்த் தெரிவித்த குற்றச்சாட்டையும் நமீதா கோகலே மறுத்தார். இந்தச் சம்பவத்தால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது

எழுதியற்குத் தடை- வருவதற்கு அச்சுறுத்தல்-பாதுகாப்பின்மை-.அச்சமில்லை- வருவதற்கு அனுமதி- வாசிப்பத்ற்கு மெடையில் அனுமதி- வாசித்தோரை மேடையிலிருந்து அப்புறப்படுத்தல்- டாம்999 தமிழகத்தில் மட்டும் தடை இதர இடங்க்களில் தட இன்மை-சட்டம் ஒரு இருட்டறை- சட்டம் ஒரு கழுதை என்று சொல்லப்படுவதெல்லாம் இதனால்தானோ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.