Wednesday, January 25, 2012

கக்கனின் நீர் மேலாண்மயை மறவாதீர்!

பெரியாறு அணையை சொந்த காசில் கட்டினார் என்பதற்காக எப்போதும் இல்லாத புதிதாய் இப்போது ஆங்கிலேயன் பென்னி குக்கை கொண்டாடுகிறார்கள். ஆனால் அதை விட சிறந்த சேவைகளை நீர்ப்பாசன வசதிகளை தமிழகத்திற்கு ஏற்படுத்தியவர்களை நாம் மறந்துவிட்டோம். அதில் முக்கியமானர் திரு. கக்கன் என்ற தலித் இனத்தலைவர்.

எத்தனை பேருக்கு இவரை தெரியும்?

நாம் தமிழர்கள், நன்றி மறந்த தமிழர்கள், யாராவது நமக்கு அடிக்கடி நாயை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது நன்றியுணர்விற்கு.

திரு கக்கன் அவர்கள் சேவையில் நமக்கு கிடைத்த நீர்பாசனங்கள் இவை,

  1. கோவையில் 3000 ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்காக ஆரணியாற்றுத் திட்டம்
  2. 6500 ஏக்கர் நீர்ப் பாசனத்திற்கு உதவும் கிருஷ்ணகிரி பாசனத் திட்டம்.
  3. திருநெல்வேலியில் 2000 ஏக்கர் நீர்ப்பாசனத்துக்காக மணிமுத்தாறு பாசனத் திட்டம்.
  4. கோவையில் 21,000 ஏக்கர் நிலப்பரப்பு பாசனவசதிக்காக அமராவதி அணைத் திட்டம்.
  5. மதுரை மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலுமாக 20000 ஏக்கர் நிலம் பயனைடைய வைகை அணைத் திட்டம்.
  6. 17,200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன வசதி கிடைக்கும் மேட்டூர் அணை மீள் சீரமைப்பு திட்டம்.

இப்போது கூறுங்கள், யார் சிறந்தவர்? பென்னியை நினைவுகூறும் இடத்து கக்கனை மறந்தது நியாயயமா?

நன்றி:தமிழ்நண்பர்கள் தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!..

0 comments:

Post a Comment

Kindly post a comment.