Wednesday, January 4, 2012

கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம்: பெண்களை செல்போனில் துரத்தும் ரோமியோக்கள்

கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம்: பெண்களை செல்போனில் துரத்தும் ரோமியோக்கள்
அன்று ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்ல கடிதம் அனுப்பினோம். ஆனால்... இன்று இன்டர்நெட், போனில் மெசேஜ் அனுப்புகிறோம். அன்று ஒருவரிடம் ஒரு முக்கியமான விசயம் பற்றி பேச நேரில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால்... இன்று இன்டர்நெட், செல்போனில் தொடர்பு கொண்டு அடுத்த நிமிடமே தகவலை பரிமாறிக் கொள்கிறோம். இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியை காட்டுகிறது.
ஆனால் அந்த விஞ்ஞான வளர்ச்சியில் உருவான கருவிகளெல்லாம் சில நேரங்களில் சில கிரிமினல்களிடம் சிக்கி தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு குற்றங்கள் உருவாகிறது.
சமீபத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் நடத்தும் கம்பெனிக்கு தனது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். எத்தனை முறையோ எச்சரித்தும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் முத்துக்குமாரை அந்த பெண் கண்டித்தார்.

அப்போதும் அவர் எல்லை மீறி போனதால் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். கைது செய்யப்பட்ட முத்துக்குமாரிடம் வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதும் அதில் பெண்கள் பேசினால் வசியம் செய்யும் வகையில் ஆபாசமாக பேசுவதும் எச்சரித்தால் இணைப்பை துண்டித்து விடுவதும் எனது பொழுதுபோக்கு என்று போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னார்.

முத்துக்குமாரை போன்று கோவையில் ஏராளமான ரோமியோக்கள் உலா வருகிறார்கள். பெண்கள் நடத்தும் தையல் கடைகள், நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மூலம் செல்போன் எண்களை அறிந்து கொண்டோ அல்லது அந்த பெண்களின் நண்பர்கள் மூலமாக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எண்களை பெற்றுக் கொண்டோ பேசுகிறார்கள்.

முதலில் தெரியாமல் தொடர்பு கொண்டு விட்டதாக பேச்சில் காட்டிக் கொள்ளும் அவர்கள் எதிர்முனையில் பேசும் பெண்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் அவ்ளோதான். தங்களது ரோமியோ கேரக்டரை பேச்சில் காட்டி அந்த பெண்களை மயக்கி விடுகிறார்கள். இது பின்னர் காதல் அல்லது கள்ளக்காதலில் போய் முடிகிறது. தொடர்ந்து சில குற்றச் செயல்களுக்கும் காரணமாகி விடுகிறது.
கோவை பீளமேட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ராணி (பெயர் மாற்றம்). தனியார் கல்லூரியில் படித்த இவருக்கும் சென்னையில் வேலை பார்த்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் செல்போன் மிஸ்டு கால் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
அடிக்கடி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசியதால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ராணியை சந்திக்க விரும்பிய ரமேஷ் தனது வேலையை கோவைக்கு மாற்றம் செய்து இங்கு வந்தார்.
ஒண்டிப்புதூரில் ரூம் எடுத்து தங்கிய ரமேஷ் ஒருநாள் ராணியை அங்கு அழைத்தார். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த ராணி ஒண்டிப்புதூர் சென்று ரமேசை சந்தித்தார். அங்கு காதல்... காமத்தில் முடிந்தது. அந்த காம படத்தை ராணிக்கு தெரியாமல் ரமேஷ் தனது செல்போனில் படமாக்கிக் கொண்டார்.

இன்னொருநாள் ரமேசை சந்திக்க சென்றபோது அவரது லேப்டாப்பை ராணி பார்க்க நேரிட்டது. அதை திறந்து பார்த்த ராணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது அந்தரங்க லீலைகளை ரமேஷ் படம் பிடித்து வைத்திருந்ததை கண்டு ராணி அதிர்ந்தார். அதற்கும் மேலாக தன்னைப்போல மேலும் பல பெண்களிடம் ரமேஷ் உல்லாசம் அனுபவித்ததும் அதில் படமாக ஓடியது.

இதுபற்றி கேட்ட போது ராணியிடம் ரமேஷ் தனது கிரிமினல் முகத்தை காண்பித்தார். “உன்னுடன் நான் இருக்கும் இந்த படத்தை இன்டர்நெட்டில் பரவ விட்டுவிடுவேன். அப்படி செய்யாமல் இருக்க பணம் கொடு” என்று கேட்டு மிரட்டினார்.

தொழில் அதிபரின் மகள் என்பதாலும் தனது எதிர்காலம் பாழாவிடுமே என்று அச்சமடைந்ததாலும் ராணி அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். இப்படி பணம் கேட்டு மிரட்டும் பழக்கம் தொடர்ந்து கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் ராணி பணம் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ரமேஷ் தனது லேப்டாப்பில் இருந்த ராணியின் அந்தரங்க லீலைகளை இன்டர்நெட்டில் பரவவிட்டார். அதிர்ச்சி அடைந்த ராணி இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய... ரமேஷ் கைதானார்.

இதேபோல போத்தனூரை சேர்ந்த திருமணமான ஒரு பெண் எதிர்வீட்டில் இருந்த ஒரு வாஸ்து நிபுணர் குமரேசனுடன் எசகுபிசகாக பழக அது உல்லாசத்தில் முடிந்தது. அதை படம் பிடித்த வாஸ்து நிபுணர் இன்டர்நெட்டில் பரவ விட்டார். இதை அந்த பெண்ணின் கொழுந்தனார் பார்த்து விட விவகாரம் பெரிதானது. அந்த பெண் கணவரை பிரிந்து வீட்டை விட்டு துரத்தப்பட்டார்.

வாழ்க்கை பறிபோன வேகத்தில் சைபர் கிரைம் போலீசுக்கு அந்த பெண் சென்றார். விளைவு... வாஸ்து நிபுணர் கைதானார். இப்படி செல்போன், இன்டர்நெட் வாயிலாக கோவையில் நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன.

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சைபர் கிரைம் போலீசில் 93 வழக்குகள் பதிவாகியுள்ளது. 2010-ம் ஆண்டு அந்த வழக்குகள் 508 ஆக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு கடந்த நவம்பர் மாதம் வரை 1140 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 730 வழக்குகளை போலீசார் முடித்துவிட்டனர். 410 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.
சிக்கிக் கொண்டால் தண்டனை உண்டு என்று தெரிந்திருந்தும் இன்னமும் பெண்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் இளசுகள் நடமாடத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒரு செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் விட்டு அந்த நபர் தொடர்பு கொண்டு பேசும்போது அது பெண்ணாக இருந்தால் பேச்சை தொடர்வதும் அப்போதும் பேச்சு கொடுத்தால் ஆபாசத்தை தொடங்குவதும் இந்த ரோமியோக்களின் ஸ்டைல்.

போலீசில் சிக்கும்போது அவர்கள் சொல்வது என்னவென்றால், செல்போனில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது எனக்கு பொழுதுபோக்கு என்கிறார்கள். ஆனால் அவர்களது அந்த பொழுதுபோக்கு சில பெண்களின் எதிர்காலத்தை பாதிப்பதையும் சில பெண்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தாக அமைவதையும் அவர்கள் புரிந்து கொள்ளாததுதான் காலத்தின் கோலம்!
ஆனால் இதுபோன்ற செயல்களால் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்தும் பெண்களாக இருந்தால் தெரியாத எண்களில் தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்யும் பெண்களாக இருந்தால் அழைப்புகள் வர வாய்ப்பு உண்டு. அப்படி தொடர்பு கொண்டு பேசும்போது எதிர்முனையில் பேசுபவரின் பேச்சை கவனித்து பேச்சுக் கொடுக்க வேண்டும். பேச்சு வித்தியாசமாக இருந்தால் தைரியமாக போலீசில் புகார் செய்ய தயாராக வேண்டும்.

அப்போதுதான் செல்போன் ரோமியோக்களின் கொட்டத்தை அடக்க முடியும். எத்தனை இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை மட்டுமல்ல செல்போன் தொல்லைகளையும் ஒழிக்க முடியாது! போலீசுக்கே போன் செய்து மிரட்டல் இளைஞர்கள்தான் விஞ்ஞான வளர்ச்சியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் மாணவர்களும் தங்களது பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை மிரட்டவும் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
பள்ளியில் வெடிகுண்டு இருக்கிறது, கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று புரளியை கிளப்பி மாணவர்களும் பஸ், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி இளைஞர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படியும் பலர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சைபர் கிரைம் போலீசாரின் கணக்குபடி இதுபோன்று மிரட்டல் விடுத்து இதுவரை கடந்த ஒரு ஆண்டில் மாணவர்கள் உள்பட 25 பேர் கைதாகி உள்ளனர். கோவை வாசிகளை தவிர வெளியூர்களில் இருந்தும் கோவைக்கு தொடர்பு கொண்டு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர்களும் இருக்கிறார்கள்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கே அதாவது 100-க்கு போன் செய்து பெண் போலீஸ்களை கலாய்த்தவர்களும் இருக்கிறார்கள். அதற்கும் மேலாக போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கே தொடர்பு கொண்டு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான கில்லாடிகளான புதுக்கோட்டையை சேர்ந்த முத்தமிழ்செல்வம், தேனியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆகியோரும் இதில் அடங்குவர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.