Tuesday, January 3, 2012

தனியாரிடம் பாஸ்போர்ட் சேவை: கண்டித்து ஊழியர்கள் போராட்டம்


மதுரை: பாஸ்போர்ட் சேவை மையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து, மதுரையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை, திருச்சி, மதுரை உட்பட இந்தியாவில் 29 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. "பாஸ்போர்ட் சேவா கேந்திரம்' பெயரில் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெங்களூரு, சண்டீகரில் சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தனியார் மையத்தில் ஒரே நபர் பல பெயர்களில் பாஸ்போர்ட் பெற்றது அம்பலமானது. தனியார் கட்டுப்பாட்டில் மையம் செயல்படுவதால், பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக பாஸ்போர்ட் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். மதுரையில் மண்டல அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனகசபாபதி தலைமை வகித்தார். அவர் கூறுகையில், ""மார்ச் 5ல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்று(நேற்று) விடுமுறை நாள். பணிச் சுமையை குறைக்க வேலை பார்க்க சென்றோம். நிர்வாகம் அலுவலகத்தை பூட்டியது. தனியார் மயத்தை கண்டித்தும், பதவி உயர்வு வழங்க கோரியும் மார்ச் 22, 23ல் வேலை நிறுத்தம் நடக்கும். இதற்கு அலுவலர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது,'' என்றார். தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் இருந்தனர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.